Avudaiappan Profile picture
Anchor @Zeetamil Tamizha Tamizha Show.

May 7, 2020, 11 tweets

தமிழ்நாடு-டாஸ்மாக்-காமெடிகள்!

காட்சி :உயர்நீதிமன்றம்.

தமிழ்நாடு அரசு-டாஸ்மாக் மே 17க்கு முன்னாடி திறக்க முடிவு எடுக்க அதை எதிர்த்து போட்டது தான் இந்த வழக்கு!

நீதிமன்றத்தில் தமிழ்நாடு சொன்னது என்ன?

டாஸ்மாக் திறக்க வேண்டும் என்ற முடிவு தமிழ்நாடு எடுத்த "கொள்கை" முடிவாம்! (கொள்கைக்கு வந்த சோதனை காலம்).

நாங்க பொருளாதாரம் நிதி இது எல்லாம் கணக்கு போட்டு தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறோம்.

கண்டிப்பாக மே17'க்கு பின்பும் கொரோனோ மறைந்து போக போவதில்லை!

ஆக,அத நம்பி எல்லாம் தமிழ்நாடு இருக்க முடியாது! மே 17'க்குகு பின்பும் கொரோனா போகாது என தெரியும் எனில் அன்னைக்கு இன்னும் 3 நாளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என அரசு சொன்னது எந்த கணக்கு?

ஆக அத நம்பி எல்லாம் அரசு இருக்க முடியாது!

மே 17'க்கு பின்பும் கொரோனா போகாது என தெரியும்,எனில் அன்னைக்கு இன்னும் 3 நாளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என அரசு சொன்னது எந்த கணக்கு? இதுக்கு டெல்லி முதல்வர் போல கொரோனா கூட வாழ பழகிக்கவேண்டியது தான் என சொல்லி இருக்கலாம்.

இப்படி டாஸ்மாக் திறப்பதை வச்சி ஒரு நாளைக்கு 90 கோடி வருவாய் கிடைக்கும் என தமிழக அரசு சொல்லி இருக்கிறது! கண்டிப்பா 90 கோடியை தாண்டும் என்பது தெரிந்த நியதி!

நிதி மிகப்பெரிய பிரச்சனை- கூட்டணி கட்சியான பாஜக தானே மத்திய அரசு?அவர்களிடம் கேட்டு பெருவது தான்(கூட்டணி இணக்த்தின் அழகு?)

சரி இங்கே,டாஸ்மாக் திறந்தது தப்பு என சொல்லும் பாஜக மாநில தலைமை.கர்நாடாகவில் திறந்தது தவறு என தேசிய தலைமை சொல்லி இருக்கிறதா?

கர்நாடாக மது விற்பனையில் புதிய சாதனையை தொட்டுவிட்டது.ஒரு நாளைக்கு 145 கோடியாம்!

நிதிக்கு மது மட்டும் தான் வழியா?

மது வாங்க டைம் :

50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் :காலை 10-மதியம் 1.00

40-50 வயதுக்கு உட்பட்வர்கள்- மதியம்-1.00-3.00 மணி வரை

18-40 வயதுக்கு உட்பட்டவர்கள் : மதியம் 3.00-5.00 மணி வரை!

காலை நிலவரமே "வாய்ப்பு இல்லை ராஜா" என சொல்லிவிட்டது!

போலீசை வைச்சி சரக்கு வாங்க வரவங்க,சமூக இடைவேளை கடைப்பிடிக்கிறாங்களா இல்ல மாஸ்க் போட்டு இருக்காங்களா என்பதை உறுதிப்படுத்துவோம் என சொன்னாங்க.

5 பேர் மட்டும் தான் ஒரு நேரத்தில் கடைக்கு பக்கத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என சொன்னாங்க? எதுக்கும் வாய்ப்பில்லை என்பதை பார்த்தோம்!

நாங்க (Bulk) டாஸ்மாக்ல விற்பனை பண்ணமாட்டோம் என தமிழக அரசு சொல்லி இருக்கிறது,ஆனா பல்க்-அளவை குறிப்பிட வில்லை.நீதிமன்றம் கூகுல் பண்ணி பார்த்து தான் 750 ML என ஒரு முடிவுக்கு அவங்களே வந்துட்டாங்க!

ஒரு ஆளுக்கு - 2(Half)
(0r)
ஒரு ஆளுக்கு -ஒரு புல் -இரண்டு 750 MLக்கு மேல் கிடையாது!

மேலே சொன்னது ஆன்லைன்ல வாங்குறவங்களுக்கு மட்டும்

நேரடியா வாங்கினா :

ஒரு 1/2 தான்-டொக்கன்வச்சி கொடுப்பாங்களாம்!!

எல்லாம் காந்தி கணக்கு தான்!யார் அவங்களை கண்காணிக்க போறாங்க? யார் கணக்கு வைக்க போறாங்க?

நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட எந்த நடைமுறையும் நடைமுறையில் சாத்திப்டவில்லை என்பதை கண் முன்னே பார்த்தோம்.

மக்கள் மனஉலைச்சலில் இருக்காங்க தான் அதுக்காக எதுக்கு இந்த காமெடிகள் எல்லாம்?
#TASMAC

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling