Avudaiappan Profile picture
Senior Anchor @Behindwoods Tweets and Views are Personal. புத்திக்கு எல்லாம் தெரிந்து இருக்கலாம்,ஆனால் மனதுக்கு உங்களை தெரியும் :)
Babu S Profile picture 1 added to My Authors
23 Feb
பாபா ராம்தேவ்(பதஞ்சலி)#Coronil என்ற மருத்து கொரோனாவை குண்ப்படுத்த பயன்படுவதாகவும் இது DCGI & WHO Certified என மத்திய சுகாதாரதுறை அமைச்சர் Dr. Harshvardhan முன்னிலையில் அறிவித்து இருக்கிறார் இது ஒரு அப்பட்டமான பொய் என IMA அறிக்கையில் விளாசி இருக்கிறது.
மேலும் இது பொய் என WHO சொல்லி இருக்கிறது.இதில் கேள்வி எப்படி இப்படியான பொய்யை ஒரு மத்திய சுகாதார அமைச்சர் முன்னிலையில் சொல்ல முடிந்தது? அதுவும் அந்த அமைச்சர் ஒரு டாக்டரும் கூட என IMA விளாசல்.

இதற்க்கு முன்னாடியே இதே பிரச்சனை நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா?
#Coronil என பெயரிட்டு இது, கொரோனாவை குணப்படுத்த கூடிய மருந்து என பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது!
மக்கள் செத்து மடிந்து கொண்டு இருக்கும் பொழுது,அவர்கள் பயத்தை பயன்படுத்தி பதஞ்சலி பணம்,பணம்,பணம் என லாபநோக்கத்தோடு எடுத்த முயற்சி இது!
-சென்னை உயர்நீதிமன்றம்
Read 5 tweets
13 Jan
#Master விஜய்-நாளைய எம்.ஜி.ஆர்.?? #Thread

நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் ரொம்ப பிடிச்ச ஆளுமை,நடிகர்.அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய Reference"தொட்டு இருப்பார்.

தளபதி விஜய்,எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?எதற்காக எம்.ஜி.ஆர் தேவைபடுகிறார் விஜய்க்கு?

பார்ப்போம்..
அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய"தொட்டு இருப்பார் பிகில் படத்தில் "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே" பாட்டு பாடி கொடுத்த "Reference" முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்போ வரை விஜய் எப்படி "சுறா" படத்தை பண்ணார்?அதுவும் அவரோட 50வது படமாக என கேள்வி வரலாம்..
அதுக்கான காரணம் அந்த படத்தில் அவருக்கு "மீனவர்" ரோல் அவ்வளவு தான்.

எம்.ஜி.ஆர்'க்கு "மீனவன்" ரோல் நல்ல ஆச்சு!

படகோட்டி,மீனவ நண்பன் படங்கள் எப்படி கை கொடுத்ததோ அப்படி "சுறா" அமையும் என நினைத்தார் விஜய்.ஆனால் அந்த சுறாவே வளையில் மாட்டிவிட்டது..
Read 17 tweets
12 Jan
சிங்கார சென்னை சிங்காரமாக இருக்கிறதா?

இந்த 50 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாடு பல குறியீடுகளில் முன்னேறி இருக்கிறது.மாற்று கருத்து இல்லை.ஆனால் எவ்வளவு நாளுக்கு இதே பெருமையை பேச போகிறோம்?

பெரிய மெட்ரோ சிட்டிகளில் ஒன்று சென்னை.அடிப்படை கட்டுமானங்கள் பல சிறப்பாக இருக்கிறது1/n
என சொல்லும் பொழுது கிட்ட தட்ட நாங்க யாரு தெரியும்ல ? என்ற தரத்தில் பழைய சாதனைகளையே பேசி வருகிறோம்.

சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது என்பது தான் நிதர்சமான உண்மை. கடந்த சில ஆண்டுகளில் வேற வேற காரணங்களுக்காக நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கிறது என்பதும் உண்மை தான்..
ஆனால் அது போதுமா? நிச்சயம் இல்லை.
நிதி ஆயோக் 2020'ல் டெல்லி,சென்னை உட்பட சில நகரங்கள் நிலத்தடி நீர் மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக சொன்னது! என்ன செய்துவிட்டோம் அதற்காக?

2021 ஆரம்பத்தில் இருக்கிறோம் இனி தான் கோடை காலத்தை நாம் பார்க்க இருக்கிறோம்.
Read 22 tweets
8 Jan
கடந்த இரண்டு நாட்களாக கீழே இருக்குற மாதிரி தான் வீட்டுக்கு போற வழி எல்லாம் இருந்தது.பெரிய மன உளைச்சல் உண்டானது.
தினமும் காலை ஆபீஸ்க்கு போகும் பொழுதும் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரம்பொழுதும் இதில் நடந்து தான் வீட்டுக்கு போய் வந்தேன்.
1/n
நான் வளர்ந்த விதத்தில் இப்படி சாக்கடையில் நடை பழகியதில்லை. ஒரு இரண்டு நாட்கள் இப்படி இருக்கவே கடுமையான மன உளைச்சல்.இரவில் தூங்கும்பொழுது கூட இதே சாக்டையில் நடப்பது போல உணர்வு.....

இதே வேளையில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்களை நினைத்து பார்க்கிறேன்
.நண்பர்கள் யாரும் திவ்ய பாரதி எடுத்த "கக்கூஸ்" ஆவணப்படத்தை பார்த்தது இல்லை என்றால் நிச்சயம் பாருங்கள்..அந்த வலியில் 1 சதவீதம் தான் இது என்றாலும் அந்த வலியே போதுமானதாக இருந்தது ஒரு சமூக பிரச்சனையை உணர.....
Read 13 tweets
5 Jan
சமீபத்தில் என் மகளுக்கான பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம்.டெக்கரேஷன் எல்லாம் சிறப்பாகவே செய்து முடித்தோம். சின்னதாக பலூன் ஆரச் ஒன்று ரெடி செய்ய சொல்லி இருந்தேன் அதுவும் குறை ஏதும் இல்லை.,நல்லாவே வந்து இருந்ததது!
எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது, 1/n Image
இன்னும் பெரிதாக பலூன் ஆர்ச் பண்ணி இருந்து இருக்கலாம்,கூட ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருந்து இருக்கலாம் என யோசிச்சிசேன்.இன்னும் கூட Grand ஆக இருந்து இருக்கும் என நினைச்சிகிட்டே....

அடுத்த நாள் அந்த டெக்கரேஷனுக்கான கணக்கை அந்த மண்டபத்தில் வைத்து முடித்து கொண்டு இருந்தேன்.
அப்போ அதை வடிவமைத்தவர் "சார் இந்த பலூனை விழாவுக்கு வந்த குழந்தைகளுக்கே கொடுத்து இருக்கலாமே?" என சொன்ன படியே அவரோட இருந்த பசங்களிடம் அதை தூக்கி மண்டபத்துக்கு வெளியே போட சொன்னார்....

வெளியேவும் போட்டனர்... கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே போய் பார்த்தேன்....
Read 9 tweets
26 Nov 20
நேத்து பெய்த கனமழை காரணமாகவும் பாதாள சாக்கடை சரியா Maintain-பண்ணாத காரணத்தினாலும்,ஏரி இருக்கும் இடமாக பார்த்து வீடு கட்டியதாலும் வீட்டிற்க்கு உள்ளே தண்ணீர் வந்துவிட்டது. இதை பற்றி மீடியாவிடம் மக்கள் சொன்னால் அல்லது பதிவு செய்தால் கிட்ட தட்ட Zombies போல பாய்ந்து வந்து 1/n
#Thread
"உன்னை யாரு ஏரிக்கு உள் வீடு கட்ட சொன்னது?" என பெரிய இயற்கை ஆர்வலர் போல காட்டிக்க முயற்சி பண்றாங்க சிலர்.உண்மையிலே ஏரியில் பேராசை கொண்டு வீடு கட்டியவர்களா அவர்கள்?

நிச்சயம் அதிகப்படியான மக்கள் குறைந்த வாடகையில் ஒரு வீடு! குழந்தைகளுக்கு பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் கணக்கு
பண்ணி போற வீடு தான் அது! அது அவங்களோட சொந்த வீடு இல்லை.ஆனா இவங்க ஏதோ அந்த ஏரியை அவங்க 2-Years ah ப்ளான் பண்ணி பித்தாலாட்டம் பண்ணி CMDA Approval வாங்கியவர்கள் போல பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள்!

சென்னையில் பாதி பேருக்கு இருக்கும் ஒரு கனவு "சொந்த வீடு".
Read 16 tweets
14 Oct 20
Must Read :

ஹத்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இறந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விந்து மாதிரிகள் கிடைக்கவில்லை என உபி போலீஸ் கூறியது,அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையாம்.

சரி.அந்த பரிசோதனை எப்பொழுது எடுக்கப்பட்டது? என கேட்டா வன்கொடுமை நடந்து 11 நாள் கழித்து எடுக்கப்பட்டதாம்!🤦‍♂️
நேற்று நீதிமன்றத்தில் பல வழக்கில்,விந்து
மாதிரிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என முடிவுக்கு வர முடியாது என்ற விதி இருப்பது தெரியுமா என மாவட்ட நீதிபதிக்கு கேட்க நல்லா தெரியும் என சொல்லி இருக்கிறார்.அப்படி இருக்க இது பாலியல் வன்கொடுமை இல்லை
என எந்த முகத்தை வைத்து சொன்னார் மாவட்ட நீதிபதி? இன்னும் சம்மந்தப்பட்ட போலீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.அந்த மாவட்ட நீதிபதி இன்னும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டு இருக்கிறது.

ஏன் ஹத்ரா சம்பவத்தை அதிகமாக பேசுறீங்க என பலர்
Read 7 tweets
9 Oct 20
மீடியா TRP பசி :

இன்னைக்கு பலர் மீடியா TRP'க்காக தானே இதெல்லாம் பண்றீங்க? என சொல்றத பார்க்க முடியும்.அந்த TRPல் நடந்த பித்தலாட்டத்தை தான் பார்க்க போகிறோம்..

TRP என்றால் என்ன?

குறிப்பிட்ட அந்த டி.வி சேனலை எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதை வைத்து BARC ஒரு Rating கொடுக்கும்.
இந்த Rating,ஒவ்வரு வியாழக்கிழமையும் BARC வெளியிடும்.அன்னைக்கு தேதிக்கு எல்லா செய்தி ஆசிரியர்களும்,நம்ம சேனல் எந்த இடத்தில் இருக்க போகிறதோ! என டென்சனாக இருப்பாங்க.😐

இந்த TRP வச்சி என்ன பயன்?

TRP லிஸ்டில் எந்த சேனல் Top'ல இருக்கோ,அந்த சேனலுக்கு விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க
லைன்ல நிற்பாங்க!அதுக்கு காரணம் TRP Direct /Indirect ஆக மக்கள் TRP லிஸ்ட்டில் முதலில் இருக்கும் சேனலை தான் அதிகம் பார்க்கிறார்கள் என சொல்கிறது.இப்போ புரிகிறதா?

இங்க விசயம் இருக்கு :

TRP என்பது மக்கள் அதிகம் பார்ப்பதை குறிக்கிறது.சரி அப்போ மீடியா பரப்பரப்பை கொடுக்கிறது என்றால்
Read 11 tweets
30 Sep 20
பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை என்கிறது நீதிமன்றம்!

சாட்சியங்கள் சொல்வது என்ன?

பிரவீன் ஜெயின் என்ற Photo Journalist பல கலவரங்களை ஆவணப்படுத்தியவர். அவர் சொல்கிறார்,பாபர் மசூதி இடிக்கப்படும் முன் Rehersal பார்க்கப்பட்டது என்றும்,அதை தான் பார்த்தாகவும் சொல்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளுக்கு முன்,Press Meet நடத்திய Ashok Singhal (VHP) சதித்திட்ட ரீதியில் சிரிச்சிகிட்டே,"என்ன நடக்க போகிறது என பாருங்க"என சொன்னார்.
BL Sharma என்ற VHP Leader December 5 அன்று என்னை வர சொல்லி இருந்தார்! அன்னைக்கு எந்த பத்திர்க்கையாளரும் அனுமதிக்கப்படவில்லை
BL Sharma எனக்கு VHP ID Card வாங்கி கொடுத்தார்,அதை வச்சி தான் நான் உள்ளே போனேன்,கீழே இருக்கும் படம் பாபர் மசூதி இடிக்கப்படபோது எடுத்தது இல்லை, Rehersal'ன் போது எடுக்கப்பட்டது! திட்டமிட்டே டிசம்பர் -6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சொல்கிறார் Photo Journalist Praveen.
Read 7 tweets
1 Sep 20
நான் இதுவரை,அரசியல் தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என பல பேட்டி,எடுத்திருந்தாலும் அதில் முக்கியமான பேட்டி,மறைந்த அனிதாவின் அண்ணன் மற்றும் அவரது அப்பாவின் பேட்டி!

நேரில்,இங்கு இருந்து அரியலூர் போய் தான் பேட்டி எடுத்தேன்,அனிதா மறைந்தது September -01,
பேட்டி ஒரு மாதம் கழித்து,October மாதத்தில் எடுத்தேன், அரியலூரில் அனிதா வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் தான் போனோம்,அது ஒரு கிராமம்,போகும் வழி முழுவதும் சாலையெல்லாம் கிடையாது,பல்லாங்குழி சாலை தான்,அங்க அங்க ஆள் நடமாட்டத்தை பார்த்தேன்,வழி எங்கும் அனிதா மறைந்த சோகத்தில் ஊரையே காலி பண்ணி
போய்டாங்களோ என நினைக்கவைச்சிது,அவ்வளவு.அமைதியான கிராமம்,முதல்ல அந்த கிராமத்துக்கு போறவங்க உணர்வு அப்படி இருக்கலாம்! அனிதா வீட்டை தான் முதலில் பார்த்தேன்,ரொம்ப சின்ன அளவில் இருந்தது,அங்கே தான் அனிதாவின் படத்துக்கு மாலை போட்டு தொங்கவிட்டு இருந்தாங்க!

அனிதா அண்ணன்-அவரது அப்பா-
Read 9 tweets
14 Aug 20
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் குற்றவாளி என தீர்ப்பு!
பிரசாந்த் பதிந்த Tweet சர்ச்சை ஆனது,அதன் Content கீழே⬇️

அவர் இந்த பதிவுகள் குறித்து மன்னிப்பு கேட்கமாட்டேன்,இது என்னுடைய கருத்து சுதந்திரம் என கூறி இருந்தார் ImageImage
மேலும் நான் இந்த Lockdown நேரத்தில் நேரடியக நீதிமன்றம் நடக்காமல்,திருப்திகரமாக இல்லாத Video Conference மூலமாக நடப்பது குறித்து கோபமாக வெளியிட்ட பதிவு மேலும் கொரோனோ நேரத்தில் physical Hearing கிடையாது,என சொன்ன CJI மாஸ்க் இல்லாமல் இருக்கிரார் என தான் தெரிவித்தேன் ImageImage
ஆக,இது என் கருத்து சுதந்திரம் என்றார்! மேலும் இரண்டாவது பதிவு பற்றி சொல்லும்போது,நான் CJI என சொல்லி இருப்பது தனிப்பட்ட தலைமை நீதிபதியை தான் மொத்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையோ அல்லது மொத்த நிறுவனத்தையோ இல்லை,அதை அப்படி எடுத்துக்க முடியாது, என்றார் Image
Read 7 tweets
10 Aug 20
மொழி ஒரு பிரச்சனையா?
ஆமா,மொழி ஒரு பிரச்சனை தான் !அரசியல் செய்பவர்களுக்கு பிரச்சனையை உருவாக்கும் ஒரு கருவி "மொழி"

உண்மையிலே,மொழி ஒரு பிரச்சனையா என கேட்டா,அப்படி இல்லை!
Globalisation'க்கு பின் அதாவது.90'ஸ்க்கு பின் நிறைய மாற்றங்கள் இப்போ வரை,நாம எல்லாருமே "Global Citizens" தான்!
இன்னைக்கு பலர் கிராமத்தில் இருந்துட்டு,Import and Export பண்றாங்க,English ஆதிக்கம் இல்லாத நாட்டுக்கு கூட இப்படி வியாபாரம் பண்றாங்க,இன்னைக்கு Technology அதுக்கு கை கொடுத்து இருக்கு,அதனால் ஒரு மொழி தெரிந்தால் ஒரு Advantage ஆக இருக்கலாம்,ஆனால் தெரியவில்லை என்றால் பின்னைடவு இல்லை
எ.கா : 2019'ல் Thailand போய் இருந்தேன்,அங்க வியாபாரம்,தொழில் பார்க்கும் சிலருக்கு English தெரியாது,ஆனால் Technology தெரிந்து இருக்கு! நான் Swarna Bhoomi Airport'ல் இருந்து டாக்ஸி பிடித்து போகும் பொழுது,நான் புக் செய்த டாக்ஸி,Sedan Type வண்டி,வந்தது Suv! ஏன் இப்படி? என Driver
Read 9 tweets
3 Aug 20
பணம் இருந்தால் சின்ன SPL Treatment-ஆவது கிடைக்கும் என்பதற்க்கு எ.கா :
இப்போ LockDown போடப்பட்டு இருக்கிறது,விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருது,பஸ் இயக்கப்படுறதில்லை! பணம் இருப்பவன் ஈசியா இ-பாஸூம் எடுக்க முடியும்,Flight E Ticket'ம் எடுக்க முடியும்,ஆனா இல்லாதவன் என்ன செய்வான்?1/4
பஸ்,ரயில் இயக்கினா பரவும் தொற்று பற்றி நன்றாக அறிவேன்,இந்த முறை தப்பு எனவும் சொல்லவில்லை,மந்திரிகள் தொடங்கி,நேற்று அரசியலுக்கு வந்தவர் வரை பல லட்சங்கள் ஆனாலும் தனியார் மருத்துவமனை தானே போறாங்க ? நான் சொல்றது,என்னைக்குமே பணம் இருந்தால்,குறைந்தது சின்ன SPL Treatment உறுதி எனதான்!
காசு,பணம் முக்கியமில்லை,நல்ல மனசு முக்கியம் என டைலாக் அடிக்கலாம்! ஆனால் நல்லா கவனிங்க,ரோட்டில் யாசகம் கேட்டு போறவர் இந்த டைலாக் அடிக்கமாட்டார்,அவர் அப்படி பேசுனாலும் நம்ம சிரிச்சிடுவோம்!
காசு,பணம்லாம் பெருசு இல்ல என சொல்பவர்களே காசு,பணம் வச்சி இருந்தா தான் அவங்க சொல்றத கேட்போம்!
Read 4 tweets
25 Jul 20
OBC Reservation என்ன தான் பிரச்சனை? Explained From Basic :

OBC Reservation அப்படின்னா என்ன?

நம் தமிழ்நாட்டில் BC,MBC என சொல்லுவோம்.மத்திய அரசு இந்த BC+MBC =OBC என சொல்லுவாங்க.

சரி இப்போ என்ன தான் பிரச்சனை?

மேல சொன்ன OBC Reservation-AIQ'ல் கொடுக்கவில்லை என்பது தான் பிரச்சனை.
அது என்ன AIQ?
AIQ - All India Quota

அதாவது நம்மTN'ல் 23 Govt Med Coll- இருக்கு.இதுல

UG Seats-15 %
PG Seats-50 %

நம்ம இந்த AIQ'க்கு கொடுத்துவிட வேண்டும்,அப்படிAIQ'க்கு போகும் சீட்ஸ்-தமிழ்நாட்டை தாண்டி மற்ற எந்த மாநிலங்களில் இருந்து வந்து மருத்துவம் படிக்க வழி வகை செய்யும்.
நீங்க கேட்கலாம் நம்ம தமிழ்நாட்டில்,நம்ம அரசு உருவாக்கிய கல்லூரிகளில் உள்ள இடத்தை நாம AIQ'க்கு கொடுக்க வேண்டுமா ஏன் ?

காரணம் 1984'ல் உச்சநீதிமன்றம் Dr. Pradeep Jain Vs Union of India வழக்கில்,ஒரு உத்தரவு போட்டாங்க,இந்த மாதிரி AIQ'க்கு சில Seats நீங்க கொடுக்க வேண்டும் என!
Read 17 tweets
18 Jul 20
நேற்று,வலதுசாரி நபர் ஒருவர் என் மனைவியின் போட்டோவை பதிந்து,இவள் தாலியை அறுத்து ஆரம்பிக்கலாமே,உங்கள் புரட்சியை என பெரியார் சிலை அவமதிப்பு பற்றி,நான் எழுதிய பதிவில் எழுதி இருந்தார்! நான் பதிலுக்கு :உங்கள் குடும்பத்தை மதிக்கிறேன்,நீங்க சொன்னது போல ஒரு நாளும் என் வாய்யில் இருந்து
வார்த்தைகள் வராது,என பதில் பதிவு செய்தேன்! அவர் மீண்டும் எதையோ எழுதினார்! சில நண்பர்கள் அவரை Block பண்ணுங்க என பதில் போட்டனர்,நான் சொன்னேன்,அவர் போட்ட பதில் இருக்கட்டும்,நாளைக்கு அவங்க வீட்டுல இருக்குறவங்க,இப்படி ஒரு ஜென்மம்,நம் வீட்டில் இருக்கிறதா என தெரிந்துகொள்ளட்டும் என பதில்
சொன்னேன்,மனைவியை அழைத்து இதை காட்டினேன்,சின்னதா கூட மனசஞ்சலம் அடைந்தது போல தெரியல! Freeya Vittu என்றாள்!
இன்னைக்கு பார்த்தேன்,அந்த நபர் அவமானத்தில் என்னை "Block"செய்துவிட்டார்! ஹா,ஹா நான் ஒரு நாளும் என்னை தி.க என்று சொன்னதில்லை,தாலியை அகற்றுங்கள் என சொன்னதில்லை,அப்படி இருக்க
Read 6 tweets
4 Jul 20
SI ரகு கணேஷ் மீது வலுக்கும் புகார்கள்:
சுடலை வடிவுக்கு,இரண்டு மகன்கள்,மகேந்திரன்,துரை.
ஒரு கொலை வழக்கில் விசாரிக்க மகேந்திரனை அழைத்து சென்று இருக்கிறார் ரகு கணேஷ்,ஆனால் அந்த வழக்கில் அவர் பெயர் இல்லை,அவரின் அண்ணன் துரை பெயர் தான் இருக்கிறது,துரையை பிடிக்க இவரை சட்டத்தை மீறி!1/3
பிடித்துவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது,துரை சிக்கவே இவரை விட்டுவிட்டனர்,ஆனால் அன்றைய இரவு மகேந்திரன் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்,அடுத்த நாள் அவர் வலது கையைக்கூட தூக்க முடியவில்லை,தலைவலியும் கூட!

அடுத்து சில நாட்களில் கட்டிட வேலைக்கு செல்ல மயங்கி விழுந்து உள்ளார்!
2/3
மருத்துவமனையில் அவர் மூளையில் கடுமையான அடிப்பட்டு இருப்பதும் உடலில் பல காயங்களும் இருந்து உள்ளது!
வடிவு,துரைக்கு எந்த சிக்கலும் வேண்டாம் என பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்று உள்ளார்!
இப்பொழுது,ஒரு மகன் இறக்க,மற்றொரு மகன் சிறையில் இருக்க,கணவரும் இல்லாமல் தனித்து நிற்கிறாள் வடிவு!!
Read 4 tweets
1 Jun 20
கட்சிகள் தாண்டி பாருங்க மக்களே :

பாஜகவை ஆதரிக்கும் நண்பர் ஒருவரின் Timeline' ல் பார்த்த காட்சி (Video) இது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் போய்ட்டு இருக்காங்க.ரயில் பாதை பக்கத்திலே (Track) தங்கள் உயிரையும் துட்சமாக மதித்து சீக்கிய நண்பர்கள் ஜன்னல் ஓரமாக
அந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சாப்பாடு பார்சல் கொடுக்கிறார்கள்! வேகமாக ஓடும் ரயிலுக்கு ஈடு கொடுத்து,அவர்கள் வேகமாக ஓடுகிறார்கள்!

அந்த வீடியோவை "Share" செய்து மத்திய அமைச்சர் ஒருவரை Tag செய்து இது தான் "United India" என சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தார் அந்த நண்பர்..
ஆனால் நீங்க அந்த மத்திய அமைச்சரை Tag செய்து கேட்க வேண்டிய கேள்வி என்ன தெரியுமா?

அந்த தொழிலாளர்கள் உங்கள் ரயிலில் தானே போகிறார்கள்.நீங்கள் தானே அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்? ஏன் சீக்கிய நண்பர்கள் உயிரையும் துட்சமாக மதித்து ஓடிப்போய் சாப்பாடு கொடுக்கிறார்கள்??
Read 5 tweets
10 May 20
எனக்கு சின்ன வயசில் இருந்து ஒரு சராசரி "Middle Class"க்கு என்ன ஆசை இருக்குமோ,அது இருந்தது!

"அப்பா-அம்மா-நான்" Flight-ல போகனும் என்பது தான் அது!
2015'ல் வேலைக்கு சேர்ந்த புதுசுல,அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
மதுரை-தூத்துக்குடிக்கு Fight-ல அழைச்சிட்டு வர. Image
அப்போ அப்போ கொஞ்சம் பணப்பிரச்சனை அந்த குறிப்பிட்ட தேதியில் Flight Ticket -ரேட்,அதிகமானதுல நான் இந்த தடவை வேண்டாம் அடுத்த தடவை பார்த்துக்கலாம் என அந்த வாய்ப்பை தவறவிட்டேன்!

காலம்-February 17-2016'ல் அம்மாவை அழைத்துச்சென்றது! Image
இன்னைக்கு நான் நல்ல சம்பளம் வாங்குகிறேன்.இப்போ என்னால் "International Flight Trip"-கூட அழைச்சிட்டு போக முடியும் ஆனா கூட அம்மா?

இன்னைக்கு யோசிச்சி பார்த்தா அந்த அதிகமான பணத்தை ஈசியா அன்னைக்கே திரட்டி இருக்க முடியும்.ஏன் அந்த பணம் அவங்ககிட்ட கூட இருந்தது! தவறவிட்டேன் வாய்ப்பை!
Read 9 tweets
7 May 20
தமிழ்நாடு-டாஸ்மாக்-காமெடிகள்!

காட்சி :உயர்நீதிமன்றம்.

தமிழ்நாடு அரசு-டாஸ்மாக் மே 17க்கு முன்னாடி திறக்க முடிவு எடுக்க அதை எதிர்த்து போட்டது தான் இந்த வழக்கு!

நீதிமன்றத்தில் தமிழ்நாடு சொன்னது என்ன? Image
டாஸ்மாக் திறக்க வேண்டும் என்ற முடிவு தமிழ்நாடு எடுத்த "கொள்கை" முடிவாம்! (கொள்கைக்கு வந்த சோதனை காலம்).

நாங்க பொருளாதாரம் நிதி இது எல்லாம் கணக்கு போட்டு தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறோம்.

கண்டிப்பாக மே17'க்கு பின்பும் கொரோனோ மறைந்து போக போவதில்லை! Image
ஆக,அத நம்பி எல்லாம் தமிழ்நாடு இருக்க முடியாது! மே 17'க்குகு பின்பும் கொரோனா போகாது என தெரியும் எனில் அன்னைக்கு இன்னும் 3 நாளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என அரசு சொன்னது எந்த கணக்கு? Image
Read 11 tweets
5 May 20
கொரோனா மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் தான்!
-அமெரிக்கா

இன்னும் அமெரிக்கா கொரோனா அங்க (CHINA) இருக்கும் லேப்'ல் உருவாக்கப்பட்டது தான் என்ற குற்றச்சாட்டை சொல்லி வருகிறது.
Switzerland போன்ற கடுமையான குளிரான நாடுகளிலும் இது வாழ்கிறது. Image
இந்தியா போன்ற கடுமையான வெப்பம் கொண்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அப்படி தான் இதை எடுத்துக்கவேண்டும் என சொல்கிறது அமெரிக்கா!

கொரோனா உருவாக்கப்பட்டதா?

இதை ஒரு பக்கம் வச்சிகிட்டாலும் #Netflix "Corona Explained"என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறது Image
அதில் WHO-September 2019 மாதம் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு உள்ளனர்!

WHO-September 2019 அறிக்கை என்ன சொல்கிறது?

ஒரு மிக பெரிய "Pandemic"உருவாக வாய்ப்பு இருக்கிறது என சொல்லும் அந்த WHO அறிக்கை.குறிப்பா சுவாச மண்டலத்தை பாதிக்கும் எனவும். Image
Read 7 tweets
3 May 20
First Year Wedding Anniversary :

காலம் தான் எவ்வளவு வேகமா கடந்து போகிறது!

திருமண போட்டோவில் சிரிச்ச மாதிரி இருக்கேன்ல அப்படியே,இன்னும் இருக்க உதவிக்கொண்டு இருக்கும் மனைவி @Sangeethaapl'வுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவன் ஆகிறேன்!(பிழைக்க தெரிஞ்சவன்)😝
1/4 ImageImage
இதே ஆண்டு தான், மகள் தங்க யாழினி❤️ பிறந்தாள்! இரட்டிப்பு மகிழ்ச்சி!

தொடர்ந்து அன்பை பொழியும் நண்பர்களுக்கு என்றும் அன்பும் நன்றி :)
திருமணத்க்குபல நண்பர்கள்(குறிப்பாக பார்த்தா) உதவியாக இருந்தார்கள்,வரவேற்ப்பு தொடங்கி பல வேலைகளில்!
அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவன் நான்!
திருமணத்துக்கு மக்கள் செல்வன் திரு விஜய்சேதுபதி,தமிழிசை(தமிழக பாஜக தலைவர்-அப்பொழுது) புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் திரு கார்த்திகைச்செல்வன் திராவிட சிந்தனையாளர் திரு நாஞ்சில் சம்பத் என முக்கிய ஆளுமைகள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது இன்றும் நினைவில் இன்பமாய் நிற்குதப்பா! ImageImageImage
Read 6 tweets