கலைஐஞரின் மறுபக்கம்-கண்ணதாசன் பார்வையில்(பகுதி-3)
கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார்.(1/15)
#வனவாசம் #கண்ணதாசன்
போலி சீர்திருத்தவாதிகள்:
அந்த அரசியலிலேயே அவன் ஊர்ந்து சென்றாலும் சில விஷயங்களில் அவன் எச்சரிக்கையாக இருந்தான்.கழகத்திற்கு என்றே ஒரு தனித்தமிழ் நடை உண்டு.அண்ணாத்துரையின் நடையை பின்பற்றி,எல்லோருமே ஒரே மாதிரி ‘துள்ளு தமிழ்’ எழுதுவார்கள்.(2/15)
எழுதியவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது.கதை ஒன்றில் தொடங்கி,பிறகு அதை கட்டுரையாக விரிக்கும் அலுத்துப்போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.
அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை.காரணம் அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்ளக்கூடாது என்பதுதான்.(3/15)
தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்திய கோபம் வரும். ஒருநாள் அவர்,புதிதாக வெளியாகியிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.ஒரு புத்தகத்தை விரித்தான்.நல்ல பண்பாடு உள்ள கதை அது.(4/15)
“வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகிருந்தது. கதையென்ன தெரியுமா?விவரமாக சொல்கிறேன்.
மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன்.வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு.மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள். (5/15)
கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள்,தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறி கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்கும் அவள் திருமணத்திற்காக காத்துக் கிடக்கிறாள்.இரவுகள் வந்துபோகின்றன.திருமணம் வரவில்லை.(6/15)
ஒவ்வொர் இரவிலும்,தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர்.அவளோ கல்யாணமாகாதவள்.அப்பனோ மனைவியை இழந்தவன்.தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறார்.
பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்து கதையெழும்போது,பண்பாட்டோடு எழுதினார்கள்.(7/15)
ஆனால் மகளைக்கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் ‘முற்போக்கு' கதாசிரியர்.தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான்.(8/15)
அந்த நூல்களில்,பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத்தலைவர்.சமுதாயத்தில் தாழ்ந்துகிடப்போர்,மேலெழ வேண்டும் என்ற நன் நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமே அல்லாது,நாட்டுக்கு என்ன பயன் தரும்?(9/15)
பொது இடத்திலோ,குலமகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்கு,பகுத்தறிவு வீரர்கள் புத்தகம் எழுதுவானேன்?
பண்பு குன்றாத பங்கிம்சந்திரர்,சாகாவரம் பெற்ற சரத்சந்திரர், நாடக அமைப்பில் கதையெழுதிய ரவீந்திரநாத் தாகூர் இவர்களெல்லாம்,வங்காளம் போற்றிப் புகழும் இலக்கிய மேதைகள்.
(10/15)
இவர்களுடைய கதைகளையெல்லாம் படிக்கும்போது, பண்பாட்டுக்கு பெயர்போனது உலகத்திலேயே வங்காளம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.வங்கத்தின் இருண்ட பகுதியை அவர்கள் காட்டவே இல்லை.ஒளி மிகுந்த குடும்ப வாழ்க்கையையே உன்னதமாகச் சித்தரித்தார்கள்.(11/15)
கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஒருவன்,தன் குடும்பம் முழுவதும் தன்னிடத்தே பக்தி கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவன்,தான் வங்காளத்தில் பிறந்திருக்கக்கூடாத என்று ஆசை கொள்ளும் அளவுக்கு,வங்க இலக்கிய ஆசிரியர்கள் கதைகளை சமைக்கின்றனர்.(12/15)
மாளிகையை பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பதுபோல்,ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள்.அவற்றை ‘ஆபாசம்’ என்ற கணக்கில் அவன் சேர்க்க வரவில்லை.அவை என்ன பயன் தரும் என்பது தான் அவன் கேள்வி.(13/15)
அன்றிலிருந்தே, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை, கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.ஓடிப்போனவள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும்,ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும்,அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும்,நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள்,ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.14/15
இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை வெறுத்து ஒதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள். நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவுக் காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம்.(15/15)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
