Avvai 🇮🇳 Profile picture
Retweets & Likes are not Endorsements
8 subscribers
Jan 17, 2024 10 tweets 2 min read
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை விற்காதே. ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்' என்றார். அவனும் அப்படியே செய்தான். Image காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப-புண்ணிய கணக்கை பரிசீலித்து, "ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ கேள்" என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே' என்று கூறியது
Dec 30, 2023 6 tweets 2 min read
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்:

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்.

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க,செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். Image 3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.விவசாயம் செழிக்கும்.

4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்.
Dec 21, 2023 10 tweets 2 min read
கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை:

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும். Image சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்ட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு
Dec 16, 2023 13 tweets 2 min read
பல ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் சூரியக்காலடி என்று அழைக்கப்பட்ட நம்பூதிரி இல்லம் ஒன்று இருந்தது.வசதிமிக்க இந்த நம்பூதிரிக்கு தென்னந்தோப்பு ஒன்று,மூத்த செக்கன் என்னும் காவலாளியின் பொறுப்பில் இருந்து வந்தது.அவனும் எஜமானர் மீது விசுவாசம் கொண்டவன்.உண்மையே பேசுவான்.மற்றவர் பொருளுக்கு Image ஆசைப்பட மாட்டான்.எஜமானரின் பொருளை,தன் பொருளாக பாதுகாத்தான்.தென்னை மரத்தில் இருந்து முற்றிய நெற்றுக் காய்கள் காற்றில் அடித்து விழும்.அந்த காய்கள் காவலாளிக்கு உரியதாகும்.ஒருநாள் மார்கழி மாத இரவில் செக்கனுக்கு குளிர் தாங்க முடியவில்லை.தென்னை மட்டைகளை குவித்துத் தீ மூட்டினான்.
Dec 14, 2023 7 tweets 1 min read
சிவன் அர்ச்சனையில் புஷ்பங்களின் பலன்கள்:

செல்வம் வேண்டுபவன் தாமரை,வில்வம்,திருநூற்றிப்பச்சை,சங்குப்பூ கொண்டு சிவபூஜை செய்யவேண்டும்.

முக்தி விரும்புபவன் தருப்பை புல்லினால் ஒரு லட்சம் முறை சிவார்ச்சனை செய்யவேண்டும்.

ஒரு லட்சம் முறை ரோஜாவினால் அர்ச்சிக்க பகைவர்கள் அழிவர். Image நீண்ட ஆயுள் வேண்டியவன் அருகம்புல்லினால் ஒரு லட்சம் முறை ஜபிக்கவேண்டும்.

புத்திரப்பேறு வேண்டுபவன் ஊமத்தம்பூவினால் ஒரு லட்சம் முறை ஜபிக்கவேண்டும்

அகஸ்திய புஷ்பத்தால் லட்சம்முறை ஜபிப்பவன் நிலைத்த புகழைப் பெறுகிறான்.

துளசிதளத்தால் சிவனை பூசிப்பவன் போக மோட்சங்களை எளிதில் பெறுகிறான்
Dec 13, 2023 5 tweets 1 min read
சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்.
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
Image
Image
பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும், கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை  'அவசர திருக்கோலம்' என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
Dec 12, 2023 12 tweets 2 min read
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர்படுத்திக்  கொண்டிருந்தனர்.ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று,தன் நான்கு குஞ்சுகளுடன் Image வசித்து வந்தது.அந்த மரம் அகற்றப்படும்போது,பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்துவிட்டது. தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது,அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும்,அர்ஜுனனும் தென்பட்டனர்.சிட்டுக்குருவி பறந்து போய்,ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின்
Dec 10, 2023 9 tweets 2 min read
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான். Image அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
Dec 7, 2023 5 tweets 1 min read
ஒரு ஊரில் ஒரு கோயிலுக்கு வெளியே பலர் கூடி கடவுளைப்பற்றியும்,எது நிஜமான பக்தி என்றும் சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள்.பெரும் கூச்சல் எழுந்த அந்த இடத்தின் வழியே சென்றார் ஒரு துறவி. நடக்கும் எல்லா விஷயங்களையும் கவனித்தார்.அவர் ஏதாவது தீர்வு சொல்வார் என்று எதிர்பார்த்தார்கள் அங்கு Image மக்கள் எல்லோரும்.ஆனால் எதுவும் பேசாமல் இறைவனை வழிபட்டு முடித்தார் துறவி.அதன் பின்னராவது கூறுவார் என நினைத்தார்கள். அப்போதும் அவர் மவுனமாகவே இருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு கோயிலில் அன்னதானத்துக்கான பந்தி தொடங்கப்பட்டது. விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பந்தியில் வந்து அமரத்
Dec 6, 2023 10 tweets 2 min read
மீனாட்சி அம்மனின் பச்சை நிறம்:

புராணங்களின்படி, மதுரையை ஆண்ட மீனாட்சி அம்மன் மங்கலான நிறம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. மங்கலான பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசும்போது, அவர்களுக்கு பச்சை நிறம் கிடைக்கும். அதனால் தான் மீனாட்சி அம்மன் பச்சை நிறமாகக் காட்டப்படுகிறார். Image மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது.ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.அன்னை கையில் ஏந்திய கிளி, அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும்.
Dec 1, 2023 12 tweets 2 min read
மஹாலக்ஷ்மி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்:

1. திருமால் மார்பு:
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன்-ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். Image திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

2. பசுவின் பின்புறம்:
பசு தேவராலும்,மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா.காரணம்,பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு
தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி
Nov 30, 2023 10 tweets 2 min read
நரசிம்மர் வழிபாடு பற்றிய 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா? Image நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம்.
Nov 29, 2023 6 tweets 1 min read
ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது.மனதிற்குள் ராமநாமா ஜபித்த படி, ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். Image ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது.'நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து,கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன'எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை.அவை தண்ணீரில் அடித்துச் சென்றுவிட்டது.
Nov 26, 2023 8 tweets 1 min read
அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம்,
‘கடவுளைக் கண்ணால் காண முடியுமா?’ என்று கேட்டான் ஒரு மாணவன்.

“உன் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?” Image “என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை
முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”

“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “ஆம்! முழுவதும்
தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம்
தெரிகின்றதா?”

மாணவன் விழித்தான்.
Aug 30, 2023 7 tweets 1 min read
திருநாகேஸ்வரம் திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள்.

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருவடிகளே சரணம்.

பெருமாளுக்கு பக்தர்களை சோதித்து தடுத்தாட் கொள்வதில் அலாதி விருப்பம். Image துளசிவனத்தில் தோன்றிய குழந்தையை பூதேவி என்ற திருநாமமிட்டு வளர்த்து வந்தார் மார்க்கண்டேய முனிவர். பெண் சற்று வளர்ந்ததும் பெருமாள் கிழவர் வேடத்தில் வந்தார். மார்கண்டேயரிடம் " உங்கள் பெண் அழகாக இருக்கிறாள் . அவளை எனக்கு மனம் முடித்து வையுங்கள் " என்றார்.
Aug 15, 2023 9 tweets 2 min read
மகாராஷ்டிர மாநிலத்தில் இது செய்தால் பாவம்,இது செய்தால் புண்ணியம் என்று சொல்லி, பாவத்தில் இருந்து விடுபட இந்த பரிஹாரம்,ஹோமம்,யாகம், பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறி மக்களை செய்யவைத்து அதற்காக தானமாகவும், தக்ஷணையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர். Image இதைக்கண்டு சற்றும் சகியாத 'சந்து ராமதாசர்' என்னும் ராமபக்தர் ஒரு யோசனை செய்தார்.ஒருநாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு,அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்துச்சென்றார். அங்கு அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம் உண்டிகோலால் குறிபார்த்து அடித்து,
Jul 29, 2023 10 tweets 2 min read
கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை:

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும். Image சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பெருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த
Jul 20, 2023 14 tweets 2 min read
ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், பீமன்,அர்ஜுனன், நகுலன் சகாதேவன் ஆகிய நால்வரும் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.அதற்கு மாதவன், நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றைக் கொண்டு வருமாறு நால்வரிடமும் ஆணையிட்டார். Image கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.முதலில் பீமன்,அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான்.அங்கு மத்தியில் ஒரு கிணறு அதை சுற்றி நான்கு கிணறுகள் இருந்தன.சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது.
Jul 14, 2023 13 tweets 2 min read
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர்படுத்திக்  கொண்டிருந்தனர்.ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று,தன் நான்கு குஞ்சுகளுடன் Image வசித்து வந்தது.அந்த மரம் அகற்றப்படும்போது,பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்துவிட்டது. தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது,அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும்,அர்ஜுனனும் தென்பட்டனர்.சிட்டுக்குருவி பறந்து போய்,ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின்
Jul 12, 2023 9 tweets 2 min read
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான். அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
Jul 11, 2023 14 tweets 2 min read
மகாபாரதப் போர் முடிந்து கிருஷ்ணர் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார். "ஸ்வாமி,தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.பாவம் போக்க என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.இதற்கு பீஷ்மரே சரியானவர் எனக்கூறி அவரிடம் அழைத்துச்சென்று, வந்த விவரத்தைக் கூறினார் கண்ணன். பீஷ்மர் சொல்லத் தொடங்கினார், "ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்.உன் அருகில் நிற்கிறானே கண்ணன்,அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள். 10வது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்கு தலைமைத் தாங்கி புறப்பட்டேன்.