எனக்கு சின்ன வயசில் இருந்து ஒரு சராசரி "Middle Class"க்கு என்ன ஆசை இருக்குமோ,அது இருந்தது!
"அப்பா-அம்மா-நான்" Flight-ல போகனும் என்பது தான் அது!
2015'ல் வேலைக்கு சேர்ந்த புதுசுல,அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
மதுரை-தூத்துக்குடிக்கு Fight-ல அழைச்சிட்டு வர.
அப்போ அப்போ கொஞ்சம் பணப்பிரச்சனை அந்த குறிப்பிட்ட தேதியில் Flight Ticket -ரேட்,அதிகமானதுல நான் இந்த தடவை வேண்டாம் அடுத்த தடவை பார்த்துக்கலாம் என அந்த வாய்ப்பை தவறவிட்டேன்!
காலம்-February 17-2016'ல் அம்மாவை அழைத்துச்சென்றது!
இன்னைக்கு நான் நல்ல சம்பளம் வாங்குகிறேன்.இப்போ என்னால் "International Flight Trip"-கூட அழைச்சிட்டு போக முடியும் ஆனா கூட அம்மா?
இன்னைக்கு யோசிச்சி பார்த்தா அந்த அதிகமான பணத்தை ஈசியா அன்னைக்கே திரட்டி இருக்க முடியும்.ஏன் அந்த பணம் அவங்ககிட்ட கூட இருந்தது! தவறவிட்டேன் வாய்ப்பை!
நான் 2015'ல் "பணத்துக்கு" முக்கியத்துவம் கொடுத்தது போல தெரியலாம்.ஆனால் அன்னைக்கு இத விட சிறப்பா ஒரு பயணம் ஏற்பாடு பண்ணலாம் என தான் நினைத்தேன்.ஆனால் காலம் அதை விட்டு வைக்கவில்லை..
நண்பர்களே ஒரு காரியம், உங்கள் பெற்றோர்களுக்கு செய்ய முடிவு செய்தால் காலம் தாழ்த்த வேண்டாம்!
பணம் புகழ் என்னைக்கு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும்.ஆனால் "நினைவுகளை"?
இன்னைக்கு அன்னையர் தினத்துக்கு எல்லாரும்அம்மாவோடு எடுத்த போட்டோ போடுறாங்க.நினைவுகளை அசைப்போடக்கூட அம்மாவை Flight'ல கூட்டிட்டு போன நினைவுகள்
இல்லை எனக்கு!
நான் செய்த தவறை யாரும் திரும்பி செய்யக்கூடாது என தான்,இதை இங்க சொல்றேன்.இதற்க்கும் என் அம்மாவுக்க Flight'ல் போக வேண்டும் என்ற ஆசை அப்பொழுது வரை கிடையாது.ஒரு வேளை நான் அதை ப்ளான் செய்துக்கொண்டு இருப்பதை பார்த்து ஆனந்தம் அடைந்தாளோ என்னவோ..தவறவிட்டேன் வாய்ப்பையும் அவளையும்!
இன்னும் ஒரு நடந்த சம்பவத்தை சொல்கிறேன்:
வடிவேலு இன்னைக்கு கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்.ஆனால் அன்னைக்கு 10,000 RS இல்லாத காரணத்தால்,அவர் அப்பாவை காப்பாத்த முடியாம போய்ட்டு என்ற சோகம் இன்னைக்கு வரைக்கு அவருக்கு இருக்கு!
இதே போல தான் -ரங்கராஜ் பாண்டே!
அவர் எத்தனை Interviews எடுத்து இருப்பார்,அவர் வாதத்திறன் எப்படிப்பட்டது என நம் எல்லாருக்கும் தெரியும்!.ஆனால் அவர் அம்மாவுக்கு இது எதுவுமே தெரியாது!
அவர் தந்தி டிவியில் சேர்ந்த,சில நாட்களிலே அவர் அம்மா மறைந்ததர்.
காலம் எல்லாருக்கும் எல்லா பாக்கியத்தையும் கொடுப்பதில்லை!
-Wakeup-
*மதுரை-தூத்துக்குடி அல்ல!
மதுரை-சென்னை
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
