கட்சிகள் தாண்டி பாருங்க மக்களே :
பாஜகவை ஆதரிக்கும் நண்பர் ஒருவரின் Timeline' ல் பார்த்த காட்சி (Video) இது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் போய்ட்டு இருக்காங்க.ரயில் பாதை பக்கத்திலே (Track) தங்கள் உயிரையும் துட்சமாக மதித்து சீக்கிய நண்பர்கள் ஜன்னல் ஓரமாக
அந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சாப்பாடு பார்சல் கொடுக்கிறார்கள்! வேகமாக ஓடும் ரயிலுக்கு ஈடு கொடுத்து,அவர்கள் வேகமாக ஓடுகிறார்கள்!
அந்த வீடியோவை "Share" செய்து மத்திய அமைச்சர் ஒருவரை Tag செய்து இது தான் "United India" என சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தார் அந்த நண்பர்..
ஆனால் நீங்க அந்த மத்திய அமைச்சரை Tag செய்து கேட்க வேண்டிய கேள்வி என்ன தெரியுமா?
அந்த தொழிலாளர்கள் உங்கள் ரயிலில் தானே போகிறார்கள்.நீங்கள் தானே அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்? ஏன் சீக்கிய நண்பர்கள் உயிரையும் துட்சமாக மதித்து ஓடிப்போய் சாப்பாடு கொடுக்கிறார்கள்??
ஏன் அந்த தொழிலாளர்களும்,அதை ஜன்னல் வழி அவசரமா வாங்குகிறார்கள் என தான் கேட்டு இருக்க வேண்டும்!..
அது தான் மனிதநேயம்! இது தான் கட்சி தாண்டிய பார்வை.அது தான் தேவை....
நீங்கள் கேட்கலாம் அவங்க ரயிலில் சாப்பாடு கொடுத்திருக்கலாம்,உங்களுக்கு தெரியுமா? என?
Google'ல் தட்டிப்பாருங்கள்,புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயிலில் எவ்வளவு சிறப்பாக சாப்பாடு கொடுக்கப்படுகிறது என்பது சிறப்பாக வரும்!
மனிதநேயம் இல்லாத,கட்சி விசுவாசம் பத்து பைசாவுக்கு பயன் இல்லை!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
