சிவாஜி ராவ் கெய்வாட் என்கின்ற #ரஜினி தலைவர் என்பவர்களிடம் சில கேள்விகள் முடிந்தால் பதில் அளிக்கவும்.
1.R.V.உதயகுமார் எஜமான் பட இயக்குனர். அவர் ஒரு பேட்டியில் ரசினி , எஜமான் படம் 1993ல் வந்தது அப்போதிலிருந்தே அரசியலுக்கு வரப்போகிறேன் என்றார். +
இப்போதும் படம் வெளிவரும் போது மட்டும் சொல்கிறார் உண்மையா? இல்லையா?
2. தமிழகத்தில் சம்பாதிக்கும் பணத்தை கர்நாடகத்தில் நிறுவனங்களாக மாற்றி உள்ளார். ஆனால், உயிரினும் மேலான ரசிகர்களுக்கு என்ன செய்துள்ளார்?
3. கோடம்பாக்கத்தில் உள்ள ரசினியின் ராகவேந்திரா திருமணமண்டபம் உள்ள இடம், +
MGR தலையீட்டால் ரசினிக்கு வாங்கித் தரப்பட்டது. MGR யிடம் சொன்னது திருமணமண்டபம் கட்டி, ஏழைகளுக்கு பயன்படுத்தும்படி செய்வேன் என்று , ஏழைகள் உள்ளே செல்ல முடியுமா திருமணம் நடத்த?
4. காவிரி விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கர்நாடகத்தை கண்டித்துப் பேசிவிட்டு, கர்நாடகம் சென்று +
மன்னிப்பு கேட்டது உண்டா? இல்லையா?
5. ரசினியின் மனைவி நடத்தும் பள்ளியில் , ரசினியை வாழ வைத்த தமிழ் மொழிக்கு இடம் உண்டா? இல்லையா? தமிழில் பேச முடியுமா? முடியாதா?
6. சென்னையில் IPL போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காவிரி மேலாண்மை அமைக்க போராடியவர்களை காவல்துறை அடித்தது, +
ரசினி சொல்கிறார் சாமானியன், காவலரை அடிப்பது மிகப்பெரும் ஆபத்து என்றாரா? இல்லையா?( திருச்சி யில் ஒரு கர்பிணிப் பெண்ணை உதைத்து தள்ளிய காவலர் அப்பெண் மற்றும் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது, மதுவுக்கு எதிரான போராட்டத்தில், ஒரு பெண்ணை போலிஸ் உயர்அதிகாரி , அப்பெண்ணை காதில் அடித்து +
அப்பெண்ணுக்கு காது கேட்காமல் போனது, T Nagar ல் ஒரு பையனை helmate போடவில்லை என்று மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர், சேலத்தில் மாமூல் தரவில்லை என்று கடையை அடித்து உடைத்தார் காவலர், எத்தனை லாக்கப் டெத் , எத்தனை பொய் வழக்கு) இதற்கெல்லாம் வேண்டாம் எதாவது ஒன்றிற்கு கேள்வி +
கேட்டாரா? இல்லையா?
7. சமீபத்தில் இலங்கை போரில் உயிர் நீத்த நம் சொந்தங்களுக்கு, நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வீடு திரும்பிய இடும்பவன் என்பவரை காவலர்கள் கைது செய்தனர்.(ஆனால், பத்திரிக்கை யாளர்கள் விபச்சாரிகள் என்ற கருத்தில் பேசிய S.V.சேகரை கைது செய்யவில்லை +
கோர்ட் உத்தரவிட்டும் இதற்கு எதாவது பதில் சொன்னாரா ? இல்லையா?
8. ஜெயலலிதா உயிருடன், கருணாநிதி சுயநினைவுடன் இருக்கும் போது அரசியல் கட்சி பற்றி பேசினாரா? இல்லையா?
9. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய மோடி அரசைப் பற்றி எதேனும், பேசினாரா? இல்லையா? +
10. ரஜினியின் மகள் தன் தந்தை ஒரு மராத்தியர்
என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி தருகின்றார் ஆனால் ரஜினியை பச்சை தமிழன் என்று சொல்கின்றார் ! எது உண்மை சிவாஜி ராவ் கெய்வாட் தமிழ் பெயரா? ரஜினி தமிழனா?
இவற்றிற்கு பதில் சொல்லவும் #மெண்டலான்ஸ் 🤷🤷
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
