Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Jun 26, 2020, 19 tweets

எல்லாம் முடிந்துவிட்டது..

இனி என்ன?

நாளை உயர்நீதிமன்றம்தான் முடிவு செய்யும்..

பிரேதப் பரிசோதனை அறிக்கை சீலிட்ட கவரில் சமர்ப்பிக்கப்படும்..

அதை ஏன் அவ்வளவு ரகசியமாக வைக்க வேண்டும்?

அது இறந்தவர் பற்றிய ஆவணம்..

#JusticeforJayarajAndFenix

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு சொந்தமான ஆவணம்..

இறந்து போனவர்களின் மனைவியும்.. தாயாரும்.. சகோதரிகளுக்குமான ஒரு ஆவணம்..

தன் கணவன் மற்றும் தன் மகன் எப்படி இறந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் முதல் உரிமை அவர்களுக்கே உரியது..

அவர்களிடம் அதை முதலில் கொடுத்தால்தான் என்ன? +

சரி.. பரவாயில்லை..

உயர்நீதிமன்றம் தலையிட்டதினால்தான் போஸ்ட்மார்ட்டம் வீடியோவாகவாவது பதிவாக்கப்பட்டது..

இல்லையென்றால் அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போயிருக்கும்..

மூன்று மருத்துவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

ஒருவேளை, பிரேதப்பரிசோதனையில் இவர்கள் இருவரும் +

துன்புறுத்தப்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது உறுதியானால்..

உயர்நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்..

காவல்நிலைய ஆய்வாளர்..
உதவி ஆய்வாளர்கள்..
உடன் பணியாளர்கள்..

இவர்கள் அனைவரும் மாத்திரம் தண்டிக்கப்பட்டால் போதாது..

மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் +

மாவட்டக் கண்காணிப்பாளரும்கூடத் தங்கள் கடமையைச் சரியாகச் செய்திருக்கவில்லை..

சாத்தான்குளம் நீதிபதி..
அரசு மருத்துவர்..
கோவில்பட்டி ஜெயிலர்..

இவர்கள் அத்தனை பேருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது..

வழக்கறிஞர்கள்தான் நீதிபதிகளாக வருகின்றார்கள்.. +

வழக்கறிஞர்களாக பணியாற்றுகிற பொழுது காவல்துறையினரின் எத்தனையோ அத்துமீறல்களைத் தன்தன் கட்சிக்காரர்கள் வழியாக கேட்டும்.. பார்த்தும் உணர்ந்திருப்பார்கள்..

அப்படி இருக்கிற பொழுது, நீதிபதியாக வந்து உட்கார்ந்த பிறகும், இது போன்ற எந்திரத்தனமான ரிமாண்ட்கள் நடைபெறுவது என்பது +

துரதிர்ஷ்டவசமான ஒன்று..

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இதே அதிகாரிகள் மீது பல்வேறு அத்துமீறல் புகார்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது..

அதில்.. ஏதேனும் ஒரே ஒரு புகார் பற்றி மாவட்ட துணைக் கண்காணிப்பாளரோ அல்லது கண்காணிப்பாளரோ விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்கூட, +

இந்த இரண்டு உயிர்கள் தப்பியிருந்திருக்கும்..

தண்டிக்கக்கூட வேண்டாம்.. குறைந்தபட்சம் ஒரு காவலர் தவறு செய்து விட்டால்.. அதை சக காவலர்கள் கண்டிக்க ஆரம்பித்துவிட்டால்கூட போதும்.. இது போன்ற அத்துமீறல்கள் நடக்காது..

ஒரு பள்ளிப் பேருந்திலிருந்து தவறி விழுந்து ஒரு குழந்தை +

இறந்துவிடுகிறது..

அந்தப் பள்ளித் தாளாளரின் அலட்சியத்தால் நடந்த ஒரு விபத்து அது..

ஆனால் அதை ஒரு கொலைக் குற்றமாகத்தான் மக்கள் கருதினார்கள்..

கொந்தளித்தார்கள்..

காவல்துறையும் அப்படித்தான் அந்தப் பிரச்சனையைக் கையாண்டது..

உடனே பள்ளித் தாளாளர் கைது செய்யப்பட்டார்..+

ஜாமீன் மறுக்கப்பட்டது..

சிறையில் அடைக்கப்பட்டார்..

ஒரு அலட்சியத்தினால் நடந்த தவறுக்கே அவ்வளவு பெரிய தண்டனை..

ஆனால் சாத்தான்குளத்தில் நடந்தது என்ன?

கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய குற்றச்செயலில் அவர்கள் இருவரும் ஈடுபட்டிருந்தார்களா?

அவர்களைச் சொந்த ஜாமினில் +

விடுவிக்க முடியாத அளவு குற்றமா அது?

அப்படியே இருந்தாலும் கைது செய்தஉடனேயே ரிமாண்ட் செய்திருக்க வேண்டாமா?

இதெல்லாம் அலட்சியமா? அத்துமீறலா?

அடித்தார்களா? ஆசனவாயிலில் லத்தியை நுழைத்தார்களா என்பதெல்லாம் பிறகு.

முதலில் அந்தக் கேள்விகளுக்கு விடை தேட அரசு முன் வந்திருக்க வேண்டாமா?+

அமெரிக்காவில் ஒருவர் கொலை செய்யப்பட்டதும், அந்த தேசத்தில் பல காவல்துறை அதிகாரிகளின் மனச்சாட்சி உறுத்தப்பட்டு, சக காவலர் செய்த தவறுக்கு வருத்தப்பட்டு நடுரோட்டில் முழங்காலிட்டு மன்னிப்பு கோரினார்கள்..

ஆனால்.. இங்கே ஒரே ஒரு அதிகாரியின் மனச்சாட்சிகூட இதுவரை +

உறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை..

இந்த நிலைமை மாற வேண்டும்..

பொதுமக்கள் அத்தனை பேரையுமே குற்றவாளிகளாகக் கருதி நடத்தும் போக்கு மிகவும் அபாயகரமானது..

இவர்கள் இருவருக்குமாவது இப்போது பலரும் குரல் கொடுத்தார்கள்..

ஆனால் குரலே வெளிவராமல் நசுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? +

தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவரைக் கற்பழித்து எரித்துக் கொன்ற வழக்கில் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றதும் நம்மில் பலரும் அதைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்..

அப்பொழுதே நான் எச்சரித்தேன்..

இது தவறான அணுகுமுறை என்று..

அந்த நான்கு பேர்தான் குற்றவாளிகள் என்று யார் முடிவு செய்தது? +

அதற்கு என்ன ஆதாரம்?

அதை யார் சரி பார்த்தது?

அந்த நான்கு பேர்களின் குரல் வெளிவராமலேயே போய்விட்டது..

ஒருவேளை ஏதோ ஒரு செல்வந்தர் அல்லது செல்வாக்கு மிக்க அரசியல்வாதி அந்தக் குற்றவியல் காரியத்தில் சம்பந்தப்பட்டிருந்தால்?

அவர்களைக் காப்பாற்ற நான்கு அப்பாவிகள் பலி +

கொடுக்கப்பட்டிருந்தால்.?

அது பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா என்ன?

தெலுங்கானா அரசுக்கு, நான்கு பேரைச் சுட்டுக் கொன்றதும் பிரச்சனை முடிந்துவிட்டது.

மக்கள் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

உண்மையில் அங்கு பிரச்சனை என்ன?

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழல்..+

அதைத் தவிர்க்கத்தான் அந்த அரசு ஓடியிருந்திருக்க வேண்டும்..

ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல்.. மற்றவர்களையும் யோசிக்க விடாமல், என்கௌண்டரை நடத்தி பிரச்சனையை அரசு புதைத்துவிட்டது..

இங்கே ஹெல்மெட் போடாமல் போன வண்டியை மறித்து அடித்ததில் விழுந்து இறந்துபோன கர்ப்பிணிப் பெண்..+

அவருக்கான நியாயம் என்னவாயிற்று?

ஹெல்மட் போடாமல் போனால்.. நடுரோட்டில் அடிக்கத்தான் செய்வார்கள் என்பதுதானே சட்டமாயிற்று?

அடித்த காவலர் காமராஜ் இப்போது நாகப்பட்டிணத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றாராம்..

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், நம்மால் செய்ய முடிவதெல்லாம் ஒரே +

ஒரு R.I.Pயைப் பதிவிடுவது மட்டும்தான்..

வேறு என்ன செய்துவிட முடியும்..அதைத் தாண்டி?

வக்கற்ற எங்களை மன்னித்துவிடு பென்னிக்ஸ்..

R.I.P..

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling