Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Jun 28, 2020, 6 tweets

🌺இன்றைய கதைத் துளி...🌺

#செஞ்சுலக்ஷ்மி

யாரிவள்? பெயரே வித்யாசமாக இருக்கிறதே.... எனப் புருவம் உயர்த்துவோர்க்கும், ந்ருஸிம்ம பக்தர்களுக்கும்... படிப்பில் ஆவல் கொண்டவர்களுக்கும்.... ஒரு குட்டிக் காதல் கதை... இன்றைய நாள் இனிதே நடக்க....

ஸத்ய யுகம் எனப்படும் க்ருதயுகத்தில், ந்ருஸிம்ஹ (நரசிம்ம) அவதாரம் எடுத்தார் பகவான். அவர் அவதாரம் எடுத்து, பூலோகம் வந்து ஹிரண்யனை வதைத்தும், உக்ரம் குறையாததால் தவமியற்ற ஆரம்பித்தார் யோக ந்ருஸிம்ஹராக..

பல காலமாகியும் பகவான் திரும்பாததால், ப்ரபஞ்சம் நினைத்துக் கவலையுற்றாள் லக்ஷ்மி.

அகோபிலத்தின் அருகே அவர் தவத்திலிருப்பது கண்டாள். அவரை தவத்தினின்று கலைக்க பயந்து, அங்கிருந்த #செஞ்சு என்னும் ஒரு வனவாசியர்களிடத்தில் மகளாகப் பிறந்து வளர்ந்தாள்.

ந்ருஸிம்ஹரின் தவம் முடிந்து, குஹா ந்ருஸிம்ஹராக வெளியில் வந்தவர் கண்ணில் பட்டுவிட்டாள். அவளைக் கண்டதும், தன் லக்ஷ்மி என

அறிந்த பகவான், அவளிடம் சென்றார். ஆனால் தாயாரோ கோபமாக இருப்பதாக, முகத்தைத் திருப்பிக் கொண்டு பாவனை செய்தார். லக்ஷ்மி தேவியின் சினம் தனிக்க, பகவான் அவளைக் கொஞ்சு மொழியில் கெஞ்சினார்....

பின்னர் மனம் இறங்கிய லக்ஷ்மி தேவிக்கும், பகவானுக்கும், அம்மலைவாழ் மக்களின் முறைப்படி,

திருமணம் இனிதாக நடந்தேறியது. பகவானும் (தன் மனைவியிடம்) காதல் கொண்ட கதை இது. அம்மலை வாசிகள் அகோபிலம் பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வருபவர்கள்.

அவர்கள் இனத்திற்கு #செஞ்சு என்று பெயர். அங்கே வளர்ந்ததால், தாயார் #செஞ்சுலக்ஷ்மி ஆனார்.

இன்று ஜாதி பேசி ப்ரச்சனை பண்ணும் ஜந்துக்களுக்கும், மதம் மாற்றும் ஜென்மங்களுக்கும், இது போல் அதிகம் மக்கள் அறியாத கதை பல உள்ளது... என்பதை செருப்பால் அடித்தாற்போல் கூறி அவர்கள் வாயை மூடுவது நமது கடமையில் ஒன்று...

🍁வாஸவி நாராயணன்🍁

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling