#சீமானை இயக்குவது யார்..?????
எனது பதில்:
கோடாரிக்கு பயந்த மரங்கள் அவரை இயக்குகிறது..
வெடி குண்டுகளுக்கு அதிர்ந்த மலைகள் அவரை இயக்குகிறது.
கடலில் வீணாய் கலக்கும் மழை நீர் அவரை இயக்குகிறது..
கதிரியக்கங்களுக்கு இறந்த சிட்டுகுருவிகளும், பறவைகளும் அவரை இயக்குகிறது.. +
வாழ்விடங்களை இழந்த விலங்குகள் அவரை இயக்குகிறது.
சாக துடிக்கும் மொழியும், பண்பாடும், அவரை இயக்குகிறது..
படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களின் அழுகுரல்கள் அவரை இயக்குகிறது...
சாதி, மதம் எனும் தீய நெருப்பினால் பொசுங்கிய சமத்துவம் அவரை இயக்குகிறது.. +
கல்வி வியாபாரம் ஆக்கியதால் ஒசந்த படிப்பை படிக்காத ஏழை குழந்தைகளின் கனவுகள் அவரை இயக்குகிறது....
காசில்லாமல் உயர் வைத்தியம் பார்க்காமல் இறந்தவர்கள் அவரை இயக்குகிறார்கள்..
தூக்கில் தொங்கிய விவசாயி, மன அழுத்தத்தில் இறந்த காவலர்கள், படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் +
தற்கொலை செய்த அனைவரின் கனவுகளும் அவரை இயக்குகிறது.
நீங்கள் அவரை இசுலாமிய, கிருத்துவ மிசினரிகள், ஆர்.எஸ்.எஸ், அதிமுக இயக்குவதாக நினைத்து கொள்ளுங்கள்.
என்னை பொறுத்தவரை தமிழ்த்தேசியம் எனும் மாற்று புதிய அரசியலை படைக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் உயிர்த்துடிப்பும் +
தமிழை, தமிழனாக உணர்ந்த நல் உள்ளங்கள்..
மனிதநேயம் கொண்ட அனைத்து உயிர்களும், காடுகளும், மரங்களும், செடிகளும், நீரும், நெருப்பும் அவரை இயக்குவதாகத் தான் நினைக்கிறேன்..
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
