#இரட்டைமலைசீனிவாசன்
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரித்தானிய நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார்.
ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கிக் கொண்டனர். ஒரே ஒரு மனிதர் மட்டும் கைகுலுக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டார், திகைத்து நின்ற மன்னர், ஏன் ?- என்று காரணம் கேட்டார்.
அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தொடக்கூடாது, நான் இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், 'தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தாராம்.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார்.
ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார்.
அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார்.
“ஆமாம்; உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்று பதில் மொழி பகன்றார். மேலும், அன்று நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பேசுகிறபோது, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டாமைக் கொடுமை ஒழியும்.
சட்டமன்றத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” என்று வலியுறுத்தினார்.
அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆங்கிலயே தேசத்தில் உயர்ந்து ஓங்கி ஒலித்த அந்த குரலுக்கு சொந்தமான இரட்டைமலை சீனவாசனார்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
