Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Jul 21, 2020, 14 tweets

21/07/2020 இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள். *

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அக்டோபர் 1, 1928 அன்று விழுப்புரத்தில்
சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார்.

திரைப்பட வாழ்க்கை :

சிவாஜி கணேசன், திரையுலகுக்கு - 1/14

வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட - 2/14

தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும் - 3/14

நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் -4/14

தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.

அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன் - 5/14

கப்பலோட்டிய தமிழன் போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார்.

மேலும் புராணகால கடவுள்கலான அனைத்து கடவுளின் கதாபத்திரங்களில் நடித்துள்ளார். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் கந்தன் கருணை, திருமால் பெருமை மேலும் திரைப்படத்தில் இவர் - 6/14

சிவபெருமாளாக நடித்தபோது அந்த லிங்கமாக பார்த்த மக்கள்யாவும் சிவபெருமாளுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால் புகழ பெற்றவர். ஆனால் பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பலே பாண்டியா, ஆலயமணி, பார் மகளே பார், குலமகள் ராதை, இருவர் உள்ளம் - 7/14

பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, சாந்தி, பழநி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, செல்வம், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, இரு மலர்கள், கலாட்டா கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், தங்கச் சுரங்கம், தெய்வமகன், சிவந்த மண், எங்க மாமா, வியட்நாம் வீடு - 8/14

எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, பாரத விலாஸ், கர்வம், ராஜபார்ட் ரங்கதுரை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை - 9/14

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற - 10/14

கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

பெற்ற விருதுகளும், சிறப்புகள் :

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது - 11/14

கலைமாமணி விருது (1962 - 1963)

பத்ம ஸ்ரீ விருது, 1966

பத்ம பூஷன் விருது, 1984

செவாலியர் விருது, 1995

தாதாசாகெப் பால்கே விருது 1996

1962இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார் - 12/14

சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.

21 சூலை 2001 ஆம் ஆண்டு இம்மண்ணிலிருந்து மறைந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.

🏵️🏵️🏵️ #புகழ்_வணக்கம்
#புகழ்_வணக்கம் - 13/14

நடிகர்_திலகம்_சிவாஜி_கணேசன்_அவர்களுக்கு
#புகழ்_வணக்கம் 🏵️🏵️🏵️

தமிழனின் அரசியல் புஞ்சை ஆதித்தியன்
#நாம்_தமிழர்_கட்சி
காஞ்சிபுரம் தொகுதி - 14/14

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling