1. சேவையை வியாபாரமாக்கும் நாட்டில் வியாபாரத்தை கூட சேவையாக செய்யும் மனிதர்கள்...
❤️
30நாற்பது வருடமாக ஒரு கடையை வைத்து நடத்திகிட்டு இன்னும் அந்த கடை ஒரு வெயில் மழை ஒழுகும் கூரையின் கீழ் செயல் படுகிறது என்றால் நிச்சயமாக சொல்ல முடியும் அவர்கள் அங்கே வியாபாரம் எல்லாம் செய்யவில்லை
2. ஒரு மாபெரும் மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று. ஏழை எளியவர்களுக்கு பசி போக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கடையை வைத்து நடத்தும் மனிதர்கள்.
நாளை ஞாயிற்றுக் கிழமை இந்த வார புரதத்தேவையை இன்றே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தோணிசாமிக்கு தமிழ் நாட்டில் எங்கே விலை
3. குறைவாக தரமாக என்னவெல்லாம் கிடைக்கும் என்பது அத்துபடி. அப்படி போனவாரம் யானை பார்க்க போனபோது தொண்டாமுத்தூரில் 1கிலோ மட்டன் 500ரூ. தான்.. நான் வாங்கி தருகிறேன் வாங்க என்று கூப்பிட்டது நினைவில் இருந்தது.
இன்று காலை அதற்கான தேவை வந்துவிடவும் இருவரும் கிளம்பினோம் தொண்டாமுத்தூரை
4. நோக்கி. காலை மணி 10 தாண்டி விடவும் வயிற்றில் பசி கிள்ள ஆரம்பித்து விட்டது.
“பசிக்கிறது அந்தோணி..”
“தொண்டாமுத்தூர்ல ஒரு பாட்டி கடை இருக்கு... கிராமத்து சமையல். வாங்க உங்களுக்கு இட்லி, தோசை வாங்கி தாரேன்” னு கூட்டிகிட்டு போனார்.
தொண்டாமுத்தூர் பிருந்தாவன் சீனியர் சிடிசன்
5. பவுண்டேசன் பிரிவில் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.
மிகவும் எளிமையான ஒரு கடை உள்ளே வெளிச்சம் இல்லை. உள்ளே போனவுடன் எல்லாம் இருட்டாக இருந்தது. சிறிது நேரத்தில் கண்கள் பழகி இருட்டுக்குள் கண் தெரிய ஆரம்பித்தது. எங்களுக்கு முன்னால் இரண்டு மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
6. உள்ளே நுழைவதற்கு முன்னரே அந்த தோசை சுடும் மணம் எனது நெஞ்சை நிறைக்க ஆரம்பித்தது.
உளுந்தும் அரிசியும் அரைத்து முதல் நாள் ஒன்றாக கலந்து வைத்துவிட்டால் உற்பத்தி ஆகும் ஈஸ்ட் தோசையில், முட்டை முட்டையாக கோலம் போட்டுவிட்டு காற்றில் கலந்துவிடும் அந்த வாசம். கிராமத்தில் அம்மா தோசை
7. சுடும்போது இதற்கு முன் வந்த அந்த இனிமையான மணம் நகர வாழ்க்கையில் நுகர்ந்து பார்க்கவே இல்லை.
சமையல் அறை சாப்பிடும் டைனிங் எல்லாமுமே ஒரே இடத்தில்தான். அந்தோணி சாமி அடுப்பு பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். “குளிர் நேரத்தில் இங்கே உக்காந்து சாப்பிட்டால் நல்ல
8. இதமாக இருக்கும்” அவர் அங்கே ஒரு நிரந்தர வாடிக்கையாளர் என புரிந்தது. அடுப்பில் தென்னை மட்டை எரிந்து கொண்டிருந்தது விறகு அடுப்புதான் சமையலுக்கு.
10மணிக்கே 5இட்லிதான் இருந்தது. எங்களுக்கு ஆளுக்கு 2இட்லியும் முட்டை தோசை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம். நீண்ட நாட்களாக
9. அளவாகவே காலை உணவை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால் அதிகம் சாப்பிடவில்லை. ஆனாலும், சாப்பிட்ட 2இட்லியும், முட்டை தோசையும் மனதில் இன்னும் இனிமையாக நிற்கிறது. சாம்பாரும் சட்டினியும் வேற லெவல் சுவை. கிராமத்து மணம் கமழும் சுவையுடன் இருந்தது. முட்டை தோசை வீட்டு தோசையின் மேல்
10. இந்திய வரைபடம் வரைந்தது போல இருந்தது.
முட்டை தோசையை இலையில் வைத்துவிட்டு சட்டினி சாம்பார் வரவில்லை. அங்கே உக்காந்துகிட்டு செல்போனை முறைத்துக் கொண்டிருந்த பையனை பார்த்து “டேய் தம்பி வாட்சப்பை நோண்டியது போதும்... கஸ்டமரை கவனி சட்டினி சாம்பார் ஊத்து” அதட்டினார் அந்தோணி.
11. “தம்பி தம்பி அந்த பையனும் உங்கள மாதிரி சாப்பிட வந்தவன் தான்” னு பாட்டி சொல்ல, “உங்க பேரன் இல்லையா இது.? நான் அவன் தான்னு நெனச்சேன்” என்று சிரித்தார் சமாளிப்பதில் வல்லவரான அந்தோணி. பல்பு வாங்குறது எல்லாம் சர்வ சாதாரணம் எங்களுக்கு அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை... அலட்டிக்
12. கொள்வதும் இல்லை. குப்புற விழுந்தாலும் மீசையில் எங்களுக்கு ஒருநாளும் மண் ஒட்டவே ஒட்டாது. என் தவறை நீ மறைத்து எனக்காய் அர்ச்சனை வாங்கினாய் டைப் எனக்கு அவர்.
சாப்பிட்டு விட்டு “அம்மா நான் ஒரு படம் எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்க சிரித்துக் கொண்டே சம்மதித்தார்கள். அவர்கள்
13. கல்லில் தோசை ஊற்றும் அழகை படமாக எனது மொபைலில் பதிவு செய்து கொண்டே “இந்த கடைக்கு என்ன பெயர்.? உங்கள் பெயர் என்னம்மா.?” என்று கேட்டதற்கு “கடைக்கு பெயர் எல்லாம் வைக்கலைங்க... என் பெயர் சோமசுந்தரி” என்று வெள்ளந்தியாய் சிரித்தார்கள்.
நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா காலத்தில் ஒரு
14. சுவையான உணவை ருசித்த மகிழ்ச்சியில் இருவரும் மட்டன் வாங்க கிளம்பினோம்.
-முகநூலில் ஒரு நண்பரின் பதிவு
❤️❤️❤️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
