டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
Senthil Ponnusamy Profile picture Sundar Vasudevan Profile picture பங்காளி Profile picture 3 added to My Authors
Jan 17,
1. வெள்ளையன் முதலில் இங்கு வியாபாரியாய் நுழைந்தான்.

பிறகு வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்கள் போட்டான்.

ஒப்பந்தங்கள் மூலம் கடன்கள், சலுகைகள் கொடுப்பதாய் நம்ப வைத்தான்.

அதன் மூலம் அதிகார மையங்களை வசியப் படுத்தினான்.

பிறகு, கடனுக்கு பதிலாய் நிலப் பரப்புகளை வாங்கிக் கொண்டான். 2. அங்கு வரி விதிக்கும் உரிமை பெற்றான்.

பிறகு அவனே இந்தியா முழுமைக்கும் ஆளும் சக்தியாய் உருவெடுத்தான்.

தமிழகமே சேர சோழ பாண்டியர் எனவும் சிற்றரசுகள் பலவாகவும் பிரிந்து கிடந்த காலம்.

இந்தியா எத்தனை துண்டுகள் இப்படி இருந்ததுவோ தெரியாது.

வெள்ளையன் வராமல் இருந்திருந்தால் இன்னும்
Read 12 tweets
Jan 17,
1. புத்தம் புது காலை விடியாதா...
என்றொரு அந்தாலஜி அமேசான் ப்ரைமில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதில் "மெளனமே பார்வையாய்" எனும் மூன்றாவது எபிசோட் மதுமிதா இயக்கத்தில், நதியா - ஜோஜு ஜார்ஜ் நடிப்பில், கிட்டத்தட்ட வசனமே இல்லாமல் அசத்தி... பரவலாய் கவனத்தை பெற்றிருந்தது.

ஒரு சாதாரண Image 2. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிணக்கு, அதன் பிறகான வீம்பு, அது உடையும் அந்தத் தருணம், யாரும் யாரிடமும் மன்னிப்புக் கூட கோர வேண்டியிராத அவர்கள் உள்ளாடும் காதல். இதையெல்லாம் பகிர வார்த்தை கூடத் தேவையில்லை என்பதை மிக அழகாக காட்டியிருந்தனர்.

கதையே இல்லாத இந்த Image
Read 6 tweets
Dec 27, 2021
1. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இது இந்தப் படத்திற்கான விமர்சனம் அல்ல.

ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்' (பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து Image 2. விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும் விலக்களிக்கப் படுவார். சில சமயம் இந்தப் பணத்தை அவர்கள் மறுத்து விடுவதும் உண்டு.

இந்தக் கருவை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் இந்த ப்ளட் மணி.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக மாட்டிக் Image
Read 12 tweets
Dec 5, 2021
1. பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.

எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் 2. வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.

உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட்
Read 11 tweets
Nov 23, 2021
1. நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
-சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ்

முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும் 2. சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.

கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித்
Read 8 tweets
Sep 25, 2020
1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும் 2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு
Read 11 tweets
Sep 25, 2020
நிர்வாகம் என்பது...
🙊🙊🙊

1. அந்த அரசனிடம் கொடூரமான 10 வேட்டைநாய்கள் இருந்தன.

எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்ல மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் 2. கொல்ல முடிவுசெய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.

"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை.. தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள்
Read 7 tweets
Sep 15, 2020
1. எதுவும் கேட்காத என்ஜினியர்ஸ்…

❤️

நான் சவூதி அரேபியாவில் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களுக்கு மேலாகப்போகிறது.

ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.

உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும் 2. வாய்ப்பு.

இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான டிக்கெட் விலையைக் கொடுத்தாக வேண்டும்.
Read 12 tweets
Sep 1, 2020
1. திருவிளையாடல்

கொரண்டைன் சமயத்தில் டேனிக்கு இன்று புதிதாய் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து, ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க் (hard work, smart work) பற்றிச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன்.

ஏதாவது ஒரு உதாரணத்தோடு சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று யோசித்த 2. போது, வாட்சப்பில் அந்த வீடியோ வர, அந்தக் காட்சியையே அன்றைக்கு அதற்கான உதாரணம் ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தேன்.

திருவிளையாடலில் முருகனும், விநாயகரும் மாம்பழத்துக்காக சண்டை போடும் காட்சிதான் அந்த வீடியோவில் இருந்தது.

முருகனை ஹார்ட் வொர்க்கிற்கும், விநாயகரை ஸ்மார்ட்
Read 6 tweets
Aug 31, 2020
1. தில்லுதுரயின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், இனிமேல் அவர் எதற்குமே கவலைப்படக் கூடாது... எதற்காவது கவலைப்பட்டால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்.

கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குடுக்க முடியாத நிலை. எப்படி கவலைப்படாமல் இருக்க Image 2. முடியும் என்று யோசித்தவர் கடைசியாய் ஒரு வழியையும் கண்டுபிடித்து விட்டார்.

ரெண்டொரு நாளில் பேப்பரில் விளம்பரம் கொடுத்து, இன்டர்வியூ செய்து, இவருக்காக கவலைப்படுவதற்கென்றே இப்போது ஒரு ஆளை மாதம் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.

அன்று
Read 5 tweets
Aug 21, 2020
1. டேனியின் அடக் கழுத.!
🙈🙉🙊

பஸ் அந்த மெய்ன் ரோட்டுத் திருப்பத்தில் இறக்கி விட்டது எங்களை.

நண்பர் வந்து அவர் வீட்டுக்கு கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்த நேரம்.

போய்க் கொண்டிருந்த கார் பஸ்களை இடைஞ்சல் செய்வது போல் சாலையில் இங்கும் அங்குமாக குறுக்கே துள்ளிக் குதித்து ஓடிக் Image 2. கொண்டிருந்தது ஒரு அழகான கழுதைக் குட்டி.

போகிற வருகிற கார் பைக்குகளெல்லாம் அந்த குட்டிக் கழுதைக்காக நின்று தயங்கிச் செல்வதை சந்தோஷமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் டேனி.

பார்த்துக் கொண்டிருந்த நானும் மெல்ல டேனியைச் சீண்டும் நோக்கில், “அந்தக் குட்டிக் கழுதைதான் டேனி.!’
Read 5 tweets
Aug 13, 2020
1. டேனிக்கு இந்த பிறந்தநாளுக்கு என்ன வாங்கித் தருவது என்று ஒரு மாதமாய் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

13வயதுப் பையனுக்கு சுவராஸ்யமாய் இருக்கும்படி என்ன வாங்குவது என்று முடிவெடுக்க பெரும் குழப்பமாய் இருந்தது.

அதுவும், கடந்த நான்கைந்து மாதங்களாய் வீட்டிலேயே அடைந்து கிடப்பவனுக்கு Image 2. எதாவது உற்சாகமாய் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்று தோன்றியதால் மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஏதாவது ப்ளே ஸ்டேசன் வாங்கிக் கொடு என்று அட்வைஸ் செய்தார்கள்.

சும்மா இருக்கற சிங்கத்தை சொறிந்து விட்ட கதையாய் ஆகிவிடக் கூடாதே என்று அதை முற்றிலும்
Read 9 tweets
Aug 10, 2020
1.
அன்று சனிக்கிழமை.

டேனி கோபமாய் அபார்மென்ட் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான்.

வேலை முடித்து சாயங்காலம் வந்து சர்க்கஸ் கூட்டிப் போகிறேன் என்று சொன்ன அவனுடைய அப்பா, ஏதோ அலுவலக மீட்டிங் என்பதால் வரமுடியவில்லை.

லேட்டாகிறதே என்று கோபமாய் இருந்த டேனிக்கு, இப்போது சர்க்கஸே இல்லை Image 2.
என்றதும் ஏமாற்றத்தில் அழுகையே வர ஆரம்பித்து விட்டது.

சர்க்கஸ் போகிறோம் என்று நண்பர்களிடம் பெருமையாய் சொல்லிவிட்டதால், இப்போது சர்க்கஸ் போகவில்லை என்று சொல்லி நண்பர்களோடு விளையாடப் போகவும் மனம் ஒப்பவில்லை.

கவலையுடன் இருந்த அவனுடைய மனதை மாற்ற அவன் அம்மா ஹோம் வொர்க்கை முடிக்கச்
Read 5 tweets
Jul 23, 2020
1. சேவையை வியாபாரமாக்கும் நாட்டில் வியாபாரத்தை கூட சேவையாக செய்யும் மனிதர்கள்...
❤️

30நாற்பது வருடமாக ஒரு கடையை வைத்து நடத்திகிட்டு இன்னும் அந்த கடை ஒரு வெயில் மழை ஒழுகும் கூரையின் கீழ் செயல் படுகிறது என்றால் நிச்சயமாக சொல்ல முடியும் அவர்கள் அங்கே வியாபாரம் எல்லாம் செய்யவில்லை Image 2. ஒரு மாபெரும் மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று. ஏழை எளியவர்களுக்கு பசி போக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கடையை வைத்து நடத்தும் மனிதர்கள்.

நாளை ஞாயிற்றுக் கிழமை இந்த வார புரதத்தேவையை இன்றே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தோணிசாமிக்கு தமிழ் நாட்டில் எங்கே விலை
Read 14 tweets
Jun 17, 2020
"கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊர்களும் அவற்றின் வழங்கு சொற்களும்" கற்றுக் கொள்வோம் வாருங்கள்
-எழுத்தாளர் பிரபு தர்மராஜ்

🌑கன்னியாகுமரி - கன்னியாமறி, கன்னியாரி
🌑நாகர்கோவில் - நாரல், நாரோல், நாரியலு
🌑திருவெண்பரிசாரம் -த்ருப்சாரம், திருப்பேசாரம்
🌑கோதைகிராமம் -கோச்சப்பிளாரம்
1/n
🌑அழகியபாண்டியபுரம் -அழயாண்ட்ரம்
🌑பூதப்பாண்டி -புப்பாண்டி புவப்பாண்டி
🌑இறச்சகுளம் -எறச்சோளம்
🌑பன்றிக்குழி -பண்ணுளி
🌑பார்வதிபுரம் -பாரேயொரம், பாரியுரம்
🌑சுங்கான்கடை -சுங்கியாங்கட
🌑குமாரகோவில் -குமாரோல்
🌑மார்த்தாண்டம் -தொடுவட்டி
🌑கருங்கல் -கருங்க

2/n
Read 8 tweets
Jun 12, 2020
குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி.! #WorldChildLabourDay

சினிமா ஆசையுடன் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் டைரக்டராகும் ஆசையில் எங்கள் அறைக்கு வந்திருந்தார். எங்களது நீண்ட நெடிய பேச்சு ஒரு
1/n கட்டத்தில் திருப்பூர் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றித் திரும்பியது. அப்போது அந்தத் திருப்பூர் நண்பர், `சார்.. குழந்தைத் தொழிலாளர்னு சொல்றீங்க. அங்கே, ஒரு சிறுவன் சம்பாதிக்கற காசை பெரியவங்களாலகூட சம்பாதிக்க முடியாது, தெரியுமா?' என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்
2/n
Read 27 tweets
Jun 12, 2020
ஒரு பிலிப்பைன்ஸ் விவசாயி.!

என்னவோ சத்தம் என்றுதான் வெளியே எட்டிப் பார்த்தேன்.

அலுவலக டாய்லெட் வாசலில் அந்த முரட்டு நைஜீரிய என்ஜினியர் அங்கே பாவமாய் நின்றுகொண்டிருந்த நேபாளித் தொழிலாளிகள் இருவரையும் பயங்கரக் கோபத்துடன் அடிக்கப் பாய்ந்து கொண்டிருந்தான்.
ஓடிப்போய் அவனைத்
1/n தடுத்தால்... காலையிலிருந்து டாய்லெட் அடைத்திருப்பதை சரிசெய்யாமல், அவசரத்திற்கு உள்ளே போகவிடாமல் அந்த நேபாளிகள் தடுப்பதாய் அந்த நைஜீரியன் கோபமாய்த் தெரிவிக்க, முக்கியமான இடத்தில் அடைத்திருப்பதால் தண்ணீர் போக மாட்டேன் என்கிறது, இன்ஸ்பெக்‌ஷன் சேம்பர் வழியாக எவ்வளவு குத்தியும்
2/n
Read 28 tweets
Jun 9, 2020
பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்.!

அநாதை அநாதை என்று நாயகன் நாயகி சொல்லும் ஆயிரம் படங்களைப் பார்த்திருப்போம் நாம். ஆனால் உண்மையில் யார் அநாதை என்பதை இந்தப் படம் பார்க்கையில் தான் முதன்முதலில் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையில் தோற்றுத் தோற்று எழுந்து மறுபடி தோற்பார்களே... அப்படி ஒரு
1/n மனிதன் நமது படத்தின் நாயகன் கார்ட்னர். விற்கவே விற்காத மெஷினை விற்கும் வேலை பார்த்துப் பார்த்து தோற்றுப்போய், அதிலிருந்து தப்பிக்க அடுத்து சம்பளமே இல்லாத வேலைக்குப் போகத் துணியும் ஒரு பரிதாப ஏழை அவன்.!

மனைவியின் சொற்ப சம்பளத்தில் தானும் வாழ்ந்து, தனது குழந்தையையும் படிக்க
2/n
Read 12 tweets
Jun 6, 2020
ஆங்கிலமும் நாப்பழக்கம்.!
😋😋😋

பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில வாத்தியார் சொன்னார்.

"கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம். இங்க்லீஷ் எவ்வளவு நல்லாப் பேசறீங்களோ.. அவ்வளவு முன்னேற்றமும் நிச்சயம்.!"

சொன்னப்பவே எதாவது முயற்சி செஞ்சிருக்கலாம். நாமதான் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்
1/n பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளர்ப்பாச்சே.

தமிழ்ல தள்ளாடுவமே தவிர, இங்க்லீஷ் இருக்கற பக்கமே போமாட்டம்ல.
அப்பிடியே விட்டாச்சு.

டிப்ளமோ முடிச்சு வேலை தேடறப்ப, செய்ன்ட் தாமஸ் மவுன்ட்ல கேட்டர்பில்லர் என்ஜின் டீலர் கம்பெனில இன்டர்வ்யூ போனப்ப க்ரூப் டிஸ்கஷன்ல டெபுடி
2/n
Read 10 tweets
May 29, 2020
உலக தம்பதிகள் தினத்தில் தம்பதிகள் பற்றித்தான் எழுத வேண்டுமா என்ன.? நம்மைத் தம்பதிகளாய்ச் சேர்த்து வைத்தவர்கள் பற்றியும் சொல்லலாம் அல்லவா.?

நானும் பத்மினியும் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரே ஊர்தான்.. பொள்ளாச்சி. கல்லூரிக் காலங்களில் எனது நண்பன் வீட்டுக்கு அருகிலேயே தான் அவர்
1/n
வீடும் இருந்தது. நண்பர்கள் எல்லாம் அவன் வீட்டருகே இருக்கும் கிரவுண்டில் விளையாடப் போகையில், பத்மினியின் வீட்டுக்கு எதிரே உள்ள டீக்கடையில்தான் டீ குடிப்போம். ஆனால், திருமணத்திற்கு முன்புவரை அங்கே ஒரு பெண் இருந்ததே எனக்குத் தெரியாது.

தம்பியின் நண்பர் மூலமாக தகவல் தெரிந்து,
2/n
Read 11 tweets
May 19, 2020
ஐயா,
நான் தங்களின் மிதிவண்டியை தங்கள் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்கிறேன். மன்னித்து விடுங்கள். எனது மகன் ஒரு சிறப்புக் குழந்தை. அவனை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற எனது கிராமத்திற்கு
அழைத்துச்செல்ல எனக்கு வேறு வழி தெரியவில்லை.

-இப்படிக்கு
குற்றவாளியான ஒரு தொழிலாளி
1/n வறுமையில் வாழ வழியில்லாமல் பிழைப்புக்காக ராஜஸ்தானிற்கு வந்து வேலை செய்த ஒரு தொழிலாளி , கொரோனாவில் வேலையில்லாமல் ஊருக்குத் திரும்புகையில், சூழ்நிலை காரணமாக தன் முதலாளியின் சைக்கிளை எடுத்துக் கொண்டு (திருடிக்கொண்டு என்று எழுத நிஜமாகவே மனம் வரவில்லை) செல்கையில் தன் முதலாளிக்கு
2/n
Read 24 tweets