படிக்கும் வாத்தியார் Profile picture
பிறப்பால் மனிதன்*இனத்தால் திராவிடன்*மொழியால் தமிழன்*விருப்பால் முனைவர்*நினைப்பால் இயற்பியலாளன்* கல்விசார் உதவிகளுக்கு எப்போதும் செவிகள் தயார்.

Jul 28, 2020, 7 tweets

தேவதைகளின் திமிர்.....என்னை போன்ற பல செயின்ட் ஜோசப் மாணவர்கள் வெள்ளிக்கிழமை என்றாலே பயங்கர குஷி ஆகிவிடுவோம். நன்கு தலைகுளித்து அதில் இரண்டாய் மடித்த மல்லிப்பூவுடன் நெற்றியில் சிறு கீற்றாய் விபூதி குங்குமத்துடன் அழகான சேலையுடன் அதைவிட அழகான வெட்கத்தை

அணிந்து எங்களை கடக்கும் சீதாலட்சுமி ,இந்திராகாந்தி கல்லூரி மாணவிகள் எங்களின் தேவதைகள். நிற்க வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தான். ஆனால் இது எதையும் பொருட்படுத்தாத ஒரு குரூப் உண்டு. அவர்கள் தான் ஹோலிக்ராஸ் கேர்ள்ஸ். ப்ப்பா. அந்த போனி டைலுடன் சாதாரன சிந்தடிக் சுடிதாரிலேயே தெறிக்க .

விடுவார்கள். அவர்கள் பார்வையிலேயே மெல்லிய திமிரும் அலட்சியமும் இருக்கும். அவர்களை சைட் அடிக்க நாங்கள் கூடும் இடம் சோபீஸ் கார்னர், ராஜேஷ்வரி ஜெராக்ஸ், சீகிங்ஸ் ஐஸ்கிரீம் ஷாப். இதில் காயின் பாக்ஸ் போன் வைத்த சோபிஸ் எப்போதும் பெண்களால் நிரம்பி வழியும்.

பட் நம்மள ஒரு பென்சில் வாங்க கூட உள்ள விடமாட்டானுங்க தவிர அங்க வேலை பாக்குறது முழுக்க பொண்ணுங்க. அடுத்த அட்டெம்ப்ட் ராஜேஷ்வரி சேம் பிளட் கடை ஓனர் நம்ம ஐடி கார்ட பாத்த உடனே விரட்டிடுவார் தீபம் ஜெராக்ஸ்கு. கடைசியாய் சீகிங்ஸ் உள்ளயே நுழையமாட்டோம். காரணம் பொருளாதாரம்.

அப்பவே ஒரு வென்னிலா 35 ரூபாய் பக்கம். தவிர பலுடா98 ரூபாய்(2007)ரேட். இப்டியே இருந்துடுவோமானு பயந்தப்போ தான் ப்ரண்ட் சொன்னான் மச்சி பேன்ஸி ஸ்டோர். பெயர் நினைவில் இல்லாத அந்த கடையில் சைட் அடிக்க அனுமதி தாராளமாய் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அந்த வழியே செல்லும் போதுதான்

கவனித்தேன், சோபீஸ் கார்னர் கடையே அங்கு இல்லை, ராஜேஸ்வரி ஜெராக்ஸ் காத்து ஓடியது,சீகிங்ஸ் கேட்கவே வேனாம். ஆசையாய் பேன்ஸி ஸ்டோரை பார்க்க போனால் அங்கு வரவேற்றது ஒரு மெடிக்கல் ஷாப். என்னடா கொடுமைனு சோகமா இருந்தப்போ தான் சொன்னாங்க பெமினா ஹைப்பர் பக்கமாதான் இருக்குனு.

பட் ரோட்ல நின்னு சைட் அடிச்ச எங்க தேவதைகளை மால்ல பார்க்குற அளவுக்கு தைரியம் எங்களுக்கு இல்லை. ஹோலிக்ராஸை சுற்றி எல்லாமே மாறிவிட்டது அந்த மாணவிகளின் திமிரையும் அலட்சியத்தையும் தவிர. வளர்ச்சி சில நல்ல நினைவுகளையும் பிரித்து எடுத்துவிடுகிறது
#நினைவுகள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling