டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்

Aug 10, 2020, 5 tweets

1.
அன்று சனிக்கிழமை.

டேனி கோபமாய் அபார்மென்ட் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான்.

வேலை முடித்து சாயங்காலம் வந்து சர்க்கஸ் கூட்டிப் போகிறேன் என்று சொன்ன அவனுடைய அப்பா, ஏதோ அலுவலக மீட்டிங் என்பதால் வரமுடியவில்லை.

லேட்டாகிறதே என்று கோபமாய் இருந்த டேனிக்கு, இப்போது சர்க்கஸே இல்லை

2.
என்றதும் ஏமாற்றத்தில் அழுகையே வர ஆரம்பித்து விட்டது.

சர்க்கஸ் போகிறோம் என்று நண்பர்களிடம் பெருமையாய் சொல்லிவிட்டதால், இப்போது சர்க்கஸ் போகவில்லை என்று சொல்லி நண்பர்களோடு விளையாடப் போகவும் மனம் ஒப்பவில்லை.

கவலையுடன் இருந்த அவனுடைய மனதை மாற்ற அவன் அம்மா ஹோம் வொர்க்கை முடிக்கச்

3.
சொல்ல, டேனி ஆற்றாமையுடன் தனது ஹோம் வொர்க் நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்திருந்தான்.

அப்போது அபார்ட்மென்ட் கீழேயே தனது மனைவி மக்களுடன் குடியிருக்கும் வாட்ச்மேன், அந்த மாத வாடகை வாங்க மேலே வந்தவர் டேனியிடம் எதோ கேட்க டேனி கோபமும் அழுகையுமாய் பதில் கொண்டிருந்தான்.

"போங்க அங்கிள்

4.
எனக்கு படிக்கவே புடிக்கல.!"

டேனி அப்படிச் சொன்னதும், வாட்ச்மேன் டேனிக்குப் புரியும்படி மெதுவாய் எடுத்துச் சொன்னார்.

"பாரு டேனி... நல்லாப் படிச்சாத்தான பெரிய ஆள் ஆனதும் அப்பா போல நல்ல ஆஃபிஸ் வேலைக்குப் போகலாம். இல்லாட்டி என்னைப் போல நீயும் வாட்ச்மேன் வேலைதான் பாக்கணும்.!"

5.
அவர் சொன்னதும் நிமிர்ந்து அவரைப் பார்த்த டேனி, எந்த சலனமும் இல்லாமல் சொன்னான்.

"நல்லாப் படிச்சு ஆஃபிஸ் போனா சாயங்காலம் வீட்டுக்கே வரமுடியாது அங்கிள். ஆனா, படிக்காம வாட்ச்மேன் ஆயிட்டா.. உங்க மாதிரியே வீடுதான் ஆஃபிஸ். ஆபிஸ்தான் வீடுனு ஜாலியா இருக்கலாம்ல.!" என்றான்.

#MSDannie

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling