மொழி ஒரு பிரச்சனையா?
ஆமா,மொழி ஒரு பிரச்சனை தான் !அரசியல் செய்பவர்களுக்கு பிரச்சனையை உருவாக்கும் ஒரு கருவி "மொழி"
உண்மையிலே,மொழி ஒரு பிரச்சனையா என கேட்டா,அப்படி இல்லை!
Globalisation'க்கு பின் அதாவது.90'ஸ்க்கு பின் நிறைய மாற்றங்கள் இப்போ வரை,நாம எல்லாருமே "Global Citizens" தான்!
இன்னைக்கு பலர் கிராமத்தில் இருந்துட்டு,Import and Export பண்றாங்க,English ஆதிக்கம் இல்லாத நாட்டுக்கு கூட இப்படி வியாபாரம் பண்றாங்க,இன்னைக்கு Technology அதுக்கு கை கொடுத்து இருக்கு,அதனால் ஒரு மொழி தெரிந்தால் ஒரு Advantage ஆக இருக்கலாம்,ஆனால் தெரியவில்லை என்றால் பின்னைடவு இல்லை
எ.கா : 2019'ல் Thailand போய் இருந்தேன்,அங்க வியாபாரம்,தொழில் பார்க்கும் சிலருக்கு English தெரியாது,ஆனால் Technology தெரிந்து இருக்கு! நான் Swarna Bhoomi Airport'ல் இருந்து டாக்ஸி பிடித்து போகும் பொழுது,நான் புக் செய்த டாக்ஸி,Sedan Type வண்டி,வந்தது Suv! ஏன் இப்படி? என Driver
கிட்ட English'ல கேட்ட அது அவருக்கு புரியல,பதிலா Voice Recognisation வச்சி,நாம பேசுறது Thai மொழிக்கு மாற்றி,பின் அவர் Thai'ல் பேசி,அதை Translation செய்து ஆடியோ போட்டு காட்டினார்! இதெல்லாம் செய்ய 1/2 மணி நேரமெல்லாம் எடுக்கவில்லை,1-2 Mins தான்!
இதை வைத்தே,நான் போய் சேர்ந்த இடம்
வரை பல தகவல்களை கேட்டு தெரிஞ்சிகிட்டேன்,நான் போன Hotel'ல் கூட இருந்த Receptist எல்லாருக்கும் எல்லாருக்கும் கூட English அவ்வளவு தெரியல! ஆனா அவங்க தொழில் நிமிர்த்தமா படிக்குறாங்க,தெரிஞ்சிகிறாங்க!
English -Most Global Communication Language. அந்த மொழி தெரியாமலே
Communication Gap Bridge செய்ய முடிகிறது!
தாய் மொழி அவசியம்!
English-As it Serves Globally-Must!
அதனை தாண்டி ஒரு மொழி விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்! இன்னொரு.எ.கா.: கேரளா போனா கூட அங்க மலையாளியாக ஒருத்தர் இருந்தால் கூட அவர் தமிழக எல்லையில் கடை வைச்சி இருந்தா,தொழில் ரீதியா தமிழை
படிக்கலாம்,இல்லை வேண்டாம் என முதலில் நீங்க சொல்ல முடியாது,காலமும் தேவையும் உங்களை படிக்க வைச்சிடும்! 30 நாளில் ஹிந்தி,தொடங்கி பல மொழிகள் படிக்கலாம் என புத்தகம் இன்னைக்கும் நல்ல விற்பனை தானே? ஒரு மொழியை பேசு,புரிய தெரிந்தாலே அது "Survival Mode"தானே? அதில் படித்து பட்டம் பெற
வேண்டுமா இல்லையே? அப்போ தேவை இருப்போர் அதை படிப்பது தான் சிறந்தது!
"Necessity is Mother of Invention" இது போல தேவை வந்தா கூட இன்னும் Technology வளரும்! இப்போ நான் தமிழ்ல டூவீட் எழுதி இருக்கேன்,கீழே Translate Tweet Option இருக்கு,அதை க்ளீக் பண்ணா போதும்,
மற்ற மொழி நண்பர்கள் அவர்கள் தாய் மொழியில் இதை படிக்கலாம்!
தாய் மொழியை அழியாம பார்த்துக்க வேண்டும் என்பதே நம் ஒரே கடமை!
Technology இவ்வளவு வளர்ந்தும் ஒரு மொழி படித்தால் அறிவு என ஒருவன் சொன்னால்,அவன் தான் அந்த மொழியை படித்து அவனது அறிவை வளர்த்துகொள்ள வேண்டும்!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
