மளிகை கடைக்காரன் Profile picture
Part time Grocer | Full time IT Guy | Aspiring Entrepreneur

Aug 12, 2020, 5 tweets

நபியை இழிவு படுத்திட்டான். சரி கம்ப்ளைண்ட் குடுத்துருக்க. போலீஸ் கண்டுக்கல. உடனே ஆயுதம் எடுத்து அடிக்க போயிட்ட... இதான் வழியா..?

கர்நாடகாவுல 13% முஸ்லீம்கள் இருந்தும் உன்னால ஒரு கம்ப்ளைண்ட் கூட (தண்டிக்கிறது கிடக்கட்டும்) எடுக்க வைக்கமுடியலன்னா அது படுதோல்வி.

1/5 Thread..

அதை நினைச்சு கோவம் வந்தா அதை எப்படி காட்டனும்..?

மக்கள் பிரதிநிதித்துவ அடிபபடையில் 30 MLAs இருக்கவேண்டிய இடத்துல 7 பேர்.4 MPs இருக்கவேண்டிய இடத்துல பெரிய முட்டை. இந்த லட்சணத்துல IAS, IPSல மட்டும் கிழிச்சுருப்போமாக்கும்..?
30 வருசத்துக்கு முன்னாடி இந்தியாவுலயே கல்வியில்...

2/5

மோசமா இருக்கறது முஸ்லீம்கள்தான்னு பல கமிஷன்கள் அறிக்கை குடுத்தாங்க. அப்ப அப்படி இருந்தது தப்பில்ல. இப்பவும் அப்படியே இருக்குறதுதான் கொடுமை.‌‌

இன்னும் தெளிவா சொல்லனும்னா பாபர் மசூதியை இடிச்சப்ப முஸ்லீம்கள் சார்பா வாதாட ஒரு சிறந்த முஸ்லீம் வக்கீல் கூட இல்ல.

3/5

28 வருசம் கழிச்சு தீர்ப்பு வந்தப்பையும் அதே நிலைதான்.

உண்மைலயே நபி மேல பற்று இருந்தா போய் படி. நீ படிச்சு மேல போய் யார் கம்ப்ளைண்ட் குடுத்தாலும் தப்புன்னா நடவடிக்கை எடு.
அதை விட்டுட்டு வன்முறைல இறங்குனா சுடத்தான் செய்வான்.

4/5

இப்ப இறந்துபோன 3 பேர் குடும்பமும் தெருவுல நிக்கிறதுதான் பதில். வேற ஒண்ணும் பெருசா நடந்துறாது. கொஞ்சநாள் கழிச்சு அடுத்து ஒருத்தன் கார்ட்டூன் போடத்தான் செய்வான். திருப்பி 3 பேரை சாவக்குடுக்கணுமா..?

5/5
#prophetmuhammad #bangalore #Bangaloreriots

--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling