மளிகை கடைக்காரன் Profile picture
Part time Grocer | Full time IT Guy | Aspiring Entrepreneur
Mar 11, 2022 4 tweets 1 min read
காங்கிரஸ் அழிந்து விட்டதாக எப்படி சொல்லமுடியும்...?

நேற்று ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 55 தொகுதிகள்தான் வென்றிருக்கிறது. ஆயினும் காங்கிரஸிடம் 682 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மொத்த எண்ணிக்கை 4036. அதாவது 20%.

1/4
அதேநேரம் இன்றைய தேர்தல் முடிவில் 357 உறுப்பினர்களை பெற்றிருக்கும் பாஜகவிடம் 1385 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். 2019 தேர்தலில் கூட 11 கோடி வாக்குகளை பெற்றிருக்கும் கட்சிதான் காங்கிரஸ்.
8 ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்வதாக நம்பப்படும் அல்லது நம்ப வைக்கப்படும்

2/4
Feb 5, 2022 15 tweets 2 min read
"I feel insecure!"

பதிவுகளுக்கு தலைப்பிடுவது என் வழக்கமில்லை. ஆனால் இன்று தலைப்புதான் முதலில் தோன்றியது. ஆம்! நான் பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன். என்னைப்போன்றவர்களும் உணர்வார்கள். சுற்றி 1000 எதிரிகள் இருந்தாலும் ஒரு நண்பன் கூட இல்லாதபோது மனிதனுக்கு இப்படித்தான் தோன்றும்.

1/15 பாபர் மசூதி இடித்ததிலிருந்து நேற்று கர்நாடக ஹிஜாப் பிரச்சனை வரை சங் பரிவார் அமைப்புகள் சொல்வது ஒன்றைத்தான்:

"இந்நாட்டில் நாங்கள் எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்வோம். நீங்களும் எங்களுக்கு பிடித்தமாதிரிதான் வாழவேண்டும். இல்லாவிட்டால் வாழாதீர்கள்!". அவ்வளவுதான்!

2/15
Feb 3, 2022 8 tweets 1 min read
ராகுலின் பேச்சை பார்த்து அரண்டு போயிருக்கிறது பாஜக. இரவில் இருந்து புலம்புவதிலேயே தெரிகிறது. பட்ஜெட் மீதான பதிலுரையில மோடியும் எதையாவது கட்டாயத்தில் தள்ளிவிட்டிருக்கிறார் தலைவன்...

ராகுல் தமிழ்நாடு பற்றி பேசியத்தைத்தான் நம் ஊடகங்கள் காட்டியிருக்கிறது.

1/8
ராகுல் பேச்சை முழுமையாக பார்த்தேன். உண்மையில் பாஜக அரண்டு போகும் அளவுக்கு 45 நிமிடங்கள் பேசியிருக்கார். அதை தொகுத்திருக்கிறேன்.

1. ராகுல் பேசிய மாநில உரிமை. மாநில உரிமை, கலாச்சாரம், பண்பாடு குறித்து மாநில கட்சிகள்தான் எப்போதும் பேசும்.

2/8
Apr 18, 2021 18 tweets 2 min read
2020 மார்ச், வழக்கமாக நடக்கும் தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான குஜராத்திகள் திரண்டு ட்ரம்பை வரவேற்றனர். (1/17) கூடுதலாக தப்லீக் ஜமாத் மாநாடு நடந்த பொழுது கொரோனாவின் தாக்கம் குறித்து அரசுக்கே தெளிவான அறிவில்லை. ஆனால் முஸ்லீம்களுக்கு அந்த அறிவு இருந்திருக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டது. (2/17)
Apr 14, 2021 22 tweets 3 min read
#காதரும்_மஹ்மூதாவும் #சிறுகதை

"ஏங்க.. புள்ள தல நோம்பு புடிச்சிருக்கான்.. வரும்போது அவனுக்கு திங்கறதுக்கு எதாவது வாங்கிட்டு வாங்க..! அப்புறம் நீங்க கவனமா போய்ட்டு வாங்க.. வெயில் தாங்கல.. நோம்ப மறந்து எதும் சாப்டுறாதிய..! (1/22) " என்ற மஹ்மூதாவை பார்த்து புன்னகைத்து விட்டு சைக்கிளை தள்ளினார் காதர்..!

நோன்பின் காரணத்தினால் வலுத்து குரலெடுத்து சப்தமிட முடியாமல், "கேஸ் அடுப்பு பழுது பாக்குறதே..!" ன்னு சன்னமா குரல் கொடுத்து கொண்டே ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தார்..!

"இந்தாங்க பழுது பாக்குறஹலே.. (2/22)
Dec 21, 2020 18 tweets 2 min read
-- சீதக்காதி --

தென்தமிழகத்தில் 1650 - 1720 காலகட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளலாக அறியப்படும் சீதக்காதியின் இயற்பெயர் ஷெய்க் அப்துல் காதர். நாளடைவில் இப்பெயர் செய்தக்காதிர், செய்தக்காதி, சீதக்காதி என மருவியிருக்கிறது. இவர் பிறந்த ஊர் கீழக்கரை, காயல்பட்டினம் இன்னும் சில

1/n
ஊர்கள் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் பரம்பரை தொழிலான வணிகத்தையே தொழிலாக கொண்டவர். மிளகு ஏற்றுமதியில் பெரும் செல்வம் சேர்த்தவர். இஸ்லாத்தின் மீதும் தமிழின் மீதும் தீராக்காதல் கொண்டவர். அதனாலேயே இந்து - முஸ்லீம் வேற்றுமை பாராது அனைத்து புலவர்களையும் ஆதரித்தார். மக்களுக்கு

2/n
Nov 10, 2020 9 tweets 2 min read
குழப்பத்துல/கோவத்துல எழுதுனா தப்பாகிரும்ன்னு நைட் வரை வெய்ட் பண்ணேன். காலைல எனக்கும் ஒவைசி பிஜேபி டீம்ன்னுதான் தோனுச்சு. நாம தமிழ்நாடு என்கிற சேஃப் ஜோன்ல இருக்கோம். அதனால அங்குட்டு படிக்காத ஏழை முஸ்லீம் சமூகம் பட்ற பாட்டை நேரடியா ரியலைஸ் பண்ண முடியலன்னு நெனைக்கிறேன்.

1/9
வரப்போற காலங்கள்ல ஆயிரம் லெட்டர்பேட் கட்சிகள் இருந்தாலும் முஸ்லீம்களுக்கு ஒற்றை தேசியத்தலைமை அவசியம்ன்னு நினைக்கிறேன். அது இன்னைக்கு டெம்ப்ரவரியா ஜெயிக்கறதை விட ரொம்ப அவசியம். ஏன்னா பாஜக 2039 வரை பிரதமர் வேட்பாளர்களை முடிவு செய்து வைத்திருக்கிறது...

2/9
Oct 3, 2020 4 tweets 1 min read
நிர்பயா ஞாபகம் இருக்கிறதா? அதுவும் கேங் ரேப் டு மரணம்தான்.

சப்தர்ஜங் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஆளும் கூட்டணியின் தலைவி போய் பார்த்தார். உறவினர்களுக்கு உறுதி அளித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவர்களையும் சந்தித்தார். போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் தடை போடவில்லை.

1/4
அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மீது சிலர் சந்தேகம் கிளப்பினர். அரசு அவர்களை மிரட்டவில்லை. நிர்பயாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. என்றாலும் பலன் இல்லை.

சடலம் கொண்டுவரப்பட்டது. பிரதமரும் கூட்டணி தலைவியும் ஏர்போர்ட்டில் காத்திருந்து பெற்று, குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
Aug 12, 2020 5 tweets 2 min read
நபியை இழிவு படுத்திட்டான். சரி கம்ப்ளைண்ட் குடுத்துருக்க. போலீஸ் கண்டுக்கல. உடனே ஆயுதம் எடுத்து அடிக்க போயிட்ட... இதான் வழியா..?

கர்நாடகாவுல 13% முஸ்லீம்கள் இருந்தும் உன்னால ஒரு கம்ப்ளைண்ட் கூட (தண்டிக்கிறது கிடக்கட்டும்) எடுக்க வைக்கமுடியலன்னா அது படுதோல்வி.

1/5 Thread.. அதை நினைச்சு கோவம் வந்தா அதை எப்படி காட்டனும்..?

மக்கள் பிரதிநிதித்துவ அடிபபடையில் 30 MLAs இருக்கவேண்டிய இடத்துல 7 பேர்.4 MPs இருக்கவேண்டிய இடத்துல பெரிய முட்டை. இந்த லட்சணத்துல IAS, IPSல மட்டும் கிழிச்சுருப்போமாக்கும்..?
30 வருசத்துக்கு முன்னாடி இந்தியாவுலயே கல்வியில்...

2/5
Jul 16, 2020 9 tweets 2 min read
திருட்டில் புதிய உச்சம் தொட்ட ஹேக்கர்ஸ்:

நேற்றிரவு Apple, Elon Musk, Bill Gates, Warren Buffett, Jeff Bezos, Mike Bloomberg, Barack Obama, Joe Biden, Kanye West, Kardashian, Benjamin Netanyahu ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன.

Thread அதன் மூலம் ஒரே ஒரு ட்வீட் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த பிட்காயின் கணக்கில் $1000 போட்டால் நான் $2000 திரும்பத்தருவேன் எனபதே அந்த ட்வீட்.
சில நிமிடங்களில் இந்த ஹேக்கை ட்விட்டர் கண்டுபிடித்திருந்தாலும் அதற்குள்ளாக ஒரு லட்சம் டாலர்கள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு விட்டன.