டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்

Aug 13, 2020, 9 tweets

1. டேனிக்கு இந்த பிறந்தநாளுக்கு என்ன வாங்கித் தருவது என்று ஒரு மாதமாய் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

13வயதுப் பையனுக்கு சுவராஸ்யமாய் இருக்கும்படி என்ன வாங்குவது என்று முடிவெடுக்க பெரும் குழப்பமாய் இருந்தது.

அதுவும், கடந்த நான்கைந்து மாதங்களாய் வீட்டிலேயே அடைந்து கிடப்பவனுக்கு

2. எதாவது உற்சாகமாய் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்று தோன்றியதால் மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஏதாவது ப்ளே ஸ்டேசன் வாங்கிக் கொடு என்று அட்வைஸ் செய்தார்கள்.

சும்மா இருக்கற சிங்கத்தை சொறிந்து விட்ட கதையாய் ஆகிவிடக் கூடாதே என்று அதை முற்றிலும்

3. தவிர்த்து விட்டு, வேறு என்ன வாங்கலாம் என்று இணையத்தைத் தேடும்போது, அலெக்ஸா வாங்கினால் அவனுக்கு உபயோகமாய் இருக்கலாம் என்று முடிவு செய்து, அதை ஆர்டரும் போட்டு விட்டேன்.

இந்த அமேசான் எல்லோரையும் விட மோசம். 12ந்தேதி டெலிவரி என்று காட்டியவன், அலெக்ஸாவை மறுநாளே அதாவது பிறந்த

4. நாளுக்கு நான்கு நாள் முன்னாடியே டெலிவரி செய்துவிட, வந்த அன்றே அதைப் பிரித்துப் பார்த்துவிட படு பயங்கர ஆர்வத்துடன் இருந்தான் டேனி.

எனக்கோ, அதை அவன் பிறந்த நாளன்றே பிரிக்கட்டும் என்று தோன்றியதால், நீ அந்த ட்ராயிங் செய்தால் பிரிக்கலாம், இந்த யோகா முடித்தால் பிரிக்கலாம் என்று

5. அவனால் சட்டென்று செய்ய முடியாத டஃப் டார்கெட்டுகளாக் ஃபிக்ஸ் செய்ய, மனதில் கடுப்பாய் இருந்தாலும் எப்படியாவது அலெக்ஸாவைப் பார்க்கும் ஆசையில் நான் சொல்வதையெல்லாம் பர்த்டே வரை செய்து கொண்டே இருந்தாலும், அலெக்ஸாவைப் பிரிக்க முடியாத கடுப்பிலேயேதான் நான் சொல்வது அனைத்தையும் செய்து

6. கொண்டிருந்தான்.

பிறந்த நாள் அன்று அவன் தூங்கவேயில்லை. அன்று இரவு 12 மணி வரை விழித்து அதை பிரித்து, அதற்கு வாய்ஸ் ப்ரொஃபைல் செட் செய்து அவன் அன்று தூங்கப் போனபோது மணி இரவு இரண்டு இருக்கும்.

மறுநாள் மாலை அலுவலகம் முடித்து ரூமுக்கு வந்ததும், வீடியோ காலில் அவனுக்கு வந்த கிஃப்ட்

7. எல்லாவற்றையும் மகிழ்வுடன் காட்டிக் கொண்டே வந்தான்.

“எல்லாத்தையும் காட்டற… அப்பாவோட கிஃட்டைக் காட்டலியே.!” என்றதும் ஆர்வமுடன் அலெக்ஸாவை எடுத்துக் கொண்டு வந்தவன்,” அலெக்ஸா ப்ளே ம்யூசிக்…. அலெக்ஸா ஸ்டாப் ம்யூசிக்... அலெக்ஸா டெல் மீ டுடே நியூஸ்… அலெக்ஸா ஸ்டாப் ரீடிங் நியூஸ்.!”

8. என்று அவன் உற்சாகமாய்ச் சொல்லச் சொல்ல அது செய்து கொண்டே இருந்தது.

சற்று நேரம் அவன் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்துவிட்டு, “அலெக்ஸா புடிச்சதா டேனி.?” என்று கேட்டதும் சந்தோஷமாய்ச் சொன்னான்.

9.

“புடிக்காமயா இருக்கும்.? கடைசியா நான் சொல்றதக் கேக்கறதுக்கும் இப்ப இந்த வீட்டுல ஒண்ணு இருக்கில்ல.!” என்றான்.

🙄🙄

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling