Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani

Aug 14, 2020, 10 tweets

தமிழ்நாடு கதவு இல்லாத வீடா - வட நாட்டுக்காரர்களின் வேட்டைக்காடா?
உரிமைக்காகப் போராடும் இளைஞர்கள் வெற்றி பெற திராவிடர் கழகம் வாழ்த்துகிறது!

#மாநிலசுயாட்சியைமீட்போம்

‘‘தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்புக் கூட்டமைப்பின்'' சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! #மாநிலசுயாட்சியைமீட்போம்

தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை வாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கே கொடுக்க தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும். #மாநிலசுயாட்சியைமீட்போம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம்-2016 என்ற சட்டத்தின் பிரிவுகள் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் தமிழ்நாடு அரசுப் பணிகளில் வேலைக்கு எடுக்க வழிவகை உள்ளது. இச் சட்டத்தால் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பு பறிபோகின்றது. #மாநிலசுயாட்சியைமீட்போம்

எனவே, அவ்விதிகளை (2016) உடனடியாக ரத்து செய்து தமிழக அரசுப் பணிகளில் தமிழக மக்களுக்கு 100 விழுக்காடு வேலை வாய்ப்பை கொடுக்க அரசாணை வெளியிட்டு தமிழக இளைஞர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க கேட்டுக் கொள்கிறோம். #மாநிலசுயாட்சியைமீட்போம்

இரயில்வே துறையில் தொழில் பழகுநர் (Act Apprentice) பயிற்சி முடித்து இரயில்வே வேலையை மட்டுமே நம்பி காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் உடனடியாக வேலைக்கு எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம். #மாநிலசுயாட்சியைமீட்போம்

பொன்மலை இரயில்வே பணிமனையில் கரோனா பேரிடர் தொற்று காலத்தையும் பொருட்படுத்தாமல் 500 க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர்களை வேலைக்கு எடுக்க சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருவதால், இங்கு பல்வேறு விதிமீறல்கள் நடந்தபடி உள்ளன. #மாநிலசுயாட்சியைமீட்போம்

ஆகையால் பொன்மலை பகுதியில் கட்டுப்பாடின்றி 500க்கும் மேற்பட்டவர்கள் விதிமுறைகளைக் கடந்து ஒன்று கூடுவதால், இங்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. #மாநிலசுயாட்சியைமீட்போம்

இந்த நெருக்கடி காலத்தில் பொன்மலை ரயில்வே பணிமனை தொழிலாளர்களே நிர்ணயிக்கப்பட்ட அளவில் வேலை செய்யும்போது வெளி மாநிலத்தவர்களின் வருகை அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதால் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். #மாநிலசுயாட்சியைமீட்போம்

பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை செய்து பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் குடும்பத்து இளைஞர்கள் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமாறு சமூகப் பொறுப்புணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம். #மாநிலசுயாட்சியைமீட்போம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling