Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani
®️anger Profile picture AMSARAJ Profile picture 2 added to My Authors
Jul 30, 2021 5 tweets 1 min read
சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து
இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை பூஜை என்ற பெயரால், அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக நடைபெற்ற நிகழ்வினைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன. திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (30.7.2021) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
Jul 28, 2021 6 tweets 1 min read
தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!
முதலமைச்சருக்கு தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டு - நன்றி! நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், நீண்ட நாள் - மாணவப் பருவந்தொட்டு, கொள்கை, லட்சியம் இவற்றிற்காகப் போராடி 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் செய்தவரும், எளிமையும், தொண்டும் இரண்டறப் பிணைந்த சீரிய தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்கள்
Jun 4, 2021 16 tweets 2 min read
உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
1/16 ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத்துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், 2/16
Jun 3, 2021 14 tweets 2 min read
சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?
தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல் மாணவர் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்! மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
Jun 3, 2021 10 tweets 3 min read
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98 கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
Jun 1, 2021 6 tweets 2 min read
நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87 இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
May 21, 2021 17 tweets 3 min read
ஏழு பேர் விடுதலை சட்ட நிலை என்ன?
குடியரசு தலைவர் அளவுக்குச் செல்லாமலேயே அரசமைப்புச் சட்டம் 161 பிரிவின்கீழ் மாநில அரசே விடுதலை செய்ய சகல அதிகாரமும் உண்டு! @mkstalin @CMOTamilnadu பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் - 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொள்கை முடிவு எடுத்த நிலையில்,
May 20, 2021 4 tweets 1 min read
சரியாக ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனரல்லாத திராவிட இளைஞர்கள் - ‘‘பஞ்சம, சூத்திர'' - ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை மனுவின் கல்வி மறுப்பு தீக்குழியினின்று காப்பாற்றி, பெருமை வாய்ந்த (சென்னை) மாநிலக் கல்லூரி- ‘பிரசிடென்சி காலேஜ்' (1/3) (உயர்ஜாதியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும், வெள்ளைக்காரரும் மட்டுமே கல்வி பயில உரிய கல்விக் கூடமாக இருந்த மாநிலக் கல்லூரி) - திராவிடர் ஆட்சியான, பனகால் அரசர் தலைமையில் அமைந்த ஆட்சியில், பார்ப்பனரல்லாத மாணவர்களைச் சேர்க்க - தனிக் கமிட்டி அமைத்து, (2/3)
Feb 28, 2021 15 tweets 2 min read
ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும்
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?

தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில்
உதயசூரியனை உதிக்கச் செய்வீர்!

உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!! கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏராளமான கடன்வாங்கி, இப்போது அளிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.
Feb 26, 2021 5 tweets 1 min read
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராக, மத்தியக் குழு உறுப்பினராக, ‘ஜனசக்தி'யின் ஆசிரியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, தலைசிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராகப் பரிணமித்தவர் தோழர் தா.பா. உடலால் தோழர் தா.பா. மறைந்தாலும், அவரின் உரைவீச்சு என்னும் சங்கநாதம் - முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பிரிவு - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு எவ்வளவு துயரமோ, அதே அளவு துயரத்தை திராவிடர் கழகம் வெளிப்படுத்துகிறது.
Feb 26, 2021 4 tweets 1 min read
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் பல முக்கிய ஊர்களில் எல்லாம் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகள் ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்'' எனும் நூலாக நாம் வெளியிட்டோம் - பல பதிப்புகளாக வெளிவந்துள்ளன. Image எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட அனைத்து மாநாடுகள் - நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற சமூகநீதியாளர் அவர்!
Feb 25, 2021 7 tweets 1 min read
வேலியே பயிரை மேய்வதா? பாலின சீண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல்துறை தலைவரை பதவி நீக்கம் செய்க!

பாலின குற்றச்சாட்டுக்கு ஆளான சட்டம் - ஒழுங்கு சிறப்பு காவல்துறை தலைவரை (டி.ஜி.பி.) பதவி நீக்கம் செய்யவேண்டும். முதலமைச்சர் சுற்றுப்பயணத்துக்குச் சென்றபோது, பாதுகாப்புக்குச் சென்ற பெண் அய்.பி.எஸ். அதிகாரியான ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு (டி.எஸ்.பி.), சிறப்பு டி.ஜி.பி. என்ற பதவியில் இடையில் சொருகப்பட்ட ராஜேஷ் தாசின் பாலின சீண்டல் குற்றச்சாட்டு மிகவும் அருவருக்கத்தக்க செய்தியாகும்.
Feb 25, 2021 4 tweets 1 min read
கரோனா புதிய அலை மீண்டும்
பெரு உருவெடுக்கும் அபாயம்!
கவனம்! கவனம்!! முழு கவனம்!!!

நம் நாட்டில் சுமார் 7, 8 மாநிலங்களில் கரோனா (கோவிட் 19) புதிய அலை மீண்டும் பெரு உருவெடுக்கும் அபாயம் உள்ளது.
தமிழ்நாட்டிலும் அது தொடங்கியுள்ளது என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய செய்தியாகும்! இதற்கு முக்கிய காரணம், முகக்கவசம் அணிவது முதல் மற்ற தனிநபர் இடைவெளி, அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுதல், கிருமிநாசினிகளைத் தவறாமல் பயன்படுத்துதல் முதலியவற்றைக் 30% பேரே கடைப்பிடிக்கிறார்கள். மீதியுள்ள 70% பேர் மேற்கண்டவற்றை கடைப்பிடிக்காமல் சகஜமாக நடமாடுவதும், பழகுவதுமாக உள்ளனர்
Feb 21, 2021 9 tweets 1 min read
மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் மூலம் நடத்தப்படும் எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், திருவள்ளுவரை ஒரு புரோகிதப் பார்ப்பனர்போல், காவியுடனும், பூணூல், குடுமியுடன் சித்தரிக்கப் பட்டுள்ள கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளதைக் கண்டு நம் நெஞ்சம் கொதிக்கிறது! திருவள்ளுவர்மீது ஆரியக் கோலம் திணிக்கப் பட்டுள்ள இந்த விஷமச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்ற வள்ளுவரை இப்படிக் கொச்சைப்படுத்துவதா?
Oct 7, 2020 6 tweets 1 min read
‘‘தமிழகத்திற்கு என்ன பிச்சை போடுகிறீர்களா? ஆயுதத் தொழிற்சாலை பணிக்கான எழுத்துத் தேர்வின் விடைத்தாள் 3 நாளில் அழிக்கப்பட்டது ஏன்?
பணி நியமனம் எந்த அடிப்படையில் மேற்கொள் ளப்பட்டது என்பது தொடர்பாக ஆயுதத் தொழிற்சாலை பொது மேலாளர் பதில் தர வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளனர். - ஒரு மாநில அரசு கடமை தவறியது (Dereliction of Duty) என்பதை எவ்வளவு நாசுக்காக உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழ்நாட்டு ஆட்சி தமிழ் மக்கள் உரிமைகளை பலி பீடத்தில் வைப்பதை இனியாவது- காலந்தாழ்ந்த நிலையிலாவது உடனடியாக ‘‘விழித்துக்கொண்டு'' ஆவண செய்ய முன்வரட்டும்.
Oct 7, 2020 8 tweets 1 min read
‘‘பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலத்தவர்களை அதிக அளவில் அரசு பணிகளில் நியமிப்பது ஏன்?'' என்ற நியாயமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர் - ஒரு வழக்கு விசாரணையின்போது. நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் ரசாயன பிராசசிங் பணிக்கு 140 பேரை நியமிக்க 2015 இல் அறிவிப் பாணை வெளியிடப்பட்டது. இப்பணி இடங்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Oct 7, 2020 5 tweets 1 min read
மற்ற மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அந்தந்த மாநிலத்தவர்க்கே என்ற நிலையில் - தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக்காடா?
தமிழ்நாடு அரசு உறக்கம் கலையட்டும் - இல்லையெனில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து கடும் போராட்டம்! viduthalai.page/2WAAkX.html பெயரளவில்தான் இது ‘தமிழ்நாடாக' இருக்கிறது இன்றைய ஆட்சியின்கீழ்! நடைமுறையில் பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், பிற இனத்தவர், மொழியினர் - செம்மொழி தமிழைப் புறந்தள்ளி அதற்குரிய முக்கியத்துவத்தையும் தராது ஹிந்தி, சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பை, படையெடுப்பைச் செய்து வருகின்றனர்;
Oct 6, 2020 13 tweets 2 min read
சமீப காலமாக தந்தை பெரியார் சிலைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவமதிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், எம்.ஜி.ஆர். சிலைகளும்கூட சிறுமைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலைவர்களின் சிலைகளுக்குக் கூண்டு போடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம். மக்களால்மதிக்கப்படும் தலைவர்களின் சிலைகளுக்குக் காவல்துறையினர் கூண்டுபோட்டு வருகிறார்கள். சில ஊர்களில் இது பெரிய பிரச்சினையாகி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சரியான அணுகுமுறைதானா? இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கமுடியவில்லை என்று காவல்துறை ஒப்புதல்வாக்குமூலம் கொடுக்கும் செயல்தானே இது!
Oct 5, 2020 4 tweets 1 min read
உ.பி. ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகப்பெண்மணி மீது ஜாதி ஆதிக்க மனப்பான்மையுடன் பாலின வன்கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு கொலைசெய்ததுடன், அவரது சடலத்தைக் கூட அவரது பெற்றோர்களுக்குக் காட்டாமல் நடுநிசியில் பெட்ரோல் ஊற்றி சுடுகாட்டில் உ.பி. காவல்துறையே எரித்தது கொடுமை! பாதிக்கப்பட்ட அந்த ஒடுக்கப்பட்ட சமூகப்பெண்ணின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் மீது உ.பி. காவலர்கள் மிக மோசமாக நடந்து கொண்டு, அவர்களைக் கீழே தள்ளியதும், காங்கிரஸ் தொண்டர்களைத் தடியில்அடித்ததும் கண்டிக்கத்தக்கது.
Oct 5, 2020 4 tweets 1 min read
மொழித் திணிப்பு என்னும் உணர்ச்சிபூர்வ பிரச்சினையில் 80 ஆண்டுகால வரலாற்றைக் கூட மறந்துவிட்டு, ஏனோதானே என்று ‘‘பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்’’ என்ற விலாங்கு அரசியல், பாசாங்கு அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, இரயில்வேயிலும் மற்றும் பல முயற்சிகளும் தேவையற்ற கிளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்; அந்த மத்திய அரசு, தமிழக அரசின் மாநிலக் கொள்கையை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்று துணிவுடன் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தவேண்டாமா? வன்மையாகக் கண்டிக்கவேண்டாமா?
Oct 5, 2020 4 tweets 1 min read
அரசமைப்புச் சட்டம் 22 மொழிகளை அங்கீகரித்துள்ளதை ஏனோ ‘‘வசதியாக’’ மத்தியில் ஆள்வோர் மறந்துவிடுகிறார்கள்! ரயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவுச் சீட்டை ஹிந்தியில் அச்சடித்து, அதை குறுஞ்செய்தியாக தமிழ்நாட்டுத் தொடர் வண்டி பயணிகளுக்கு அனுப்புவதும் 1/3