Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani

Aug 14, 2020, 5 tweets

அஞ்சல் துறையில் ஆள் எடுப்பு வடவர்களைத் திணிக்க சூழ்ச்சி. கடந்த ஆண்டில்
தமிழகத்தில் நடந்த தேர்வில் தமிழ் தெரியாத இந்தி மாணவர் தமிழ் இலக்கணத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். #மாநிலசுயாட்சியைமீட்போம்

அதே போல் மலையாள மொழித் தேர்வில் அரியானா மாணவர் ஒருவர் வினாக்கள் அடங்கிய கேள்வித்தாளை அலைபேசியில் படம் பிடித்து கொண்டு வந்துள்ளார். இந்த இரு சம்பவங்கள் மூலம் அஞ்சல் துறையில் மிகப்பெரும் மோசடிகள் நடைபெற்றுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. #மாநிலசுயாட்சியைமீட்போம்

ஆனால், இது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட அஞ்சல் துறை எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.

இதன் பின்னணியில் அஞ்சல் துறையின் சில அதிகாரிகள் இருப்பதும், மிகப் பெரிய மோசடி இத்தனை நாட்களாக நடந்து வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
#மாநிலசுயாட்சியைமீட்போம்

இதைப் பார்க்கும்போது தென் மாநிலங்கள் அனைத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களைத் திணிக்கும் சூழ்ச்சி பின்னப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இரயில்வேயில், அஞ்சலகங்களில், வங்கிகளில் எல்லாம் தமிழ் தெரியாத இந்திக்காரர்கள் வந்து குவிந்து விட்டனர். #மாநிலசுயாட்சியைமீட்போம்

ஏற்கெனவே ஒட்டு மொத்த வணிகங்கள் எல்லாம் வடவர்கள் கைகளில் குவிந்த நிலையில், மத்திய அரசு அலுவலகங்களிலும் வடவர் ஆதிக்கம் என்பது அபாயகரமானதாகும். மறுபடியும் வடவர் எதிர்ப்பை முன்னிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. #மாநிலசுயாட்சியைமீட்போம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling