இந்திய விடுதலையில் தமிழர்கள் என்றாலே சற்றும் சிந்திக்காமல் பூலித்தேவன், மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்றோர்களை சொல்லிவிடலாம்!
ஆனால், விடுதலைபோரில் வீரம் கொண்டு செயலாற்றிய தமிழகத்தின் வீரஞ்செரிந்த பகுதிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா? 👇
#சுதந்திரதினம்
இந்த நாடு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது 1755-ல் நெல்லையின் நெற்கட்டும்சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், பிரிட்டிஸ் படைகளையும் விரட்டியடித்து தமிழகத்தில் முதன் முறையாக விடுதலைக்கான விதையிட்டவரே மாவீரன் #பூலித்தேவன்
#வேலுநாச்சியார்
1780ல் முப்படைகளைத் திரட்டிய வேலு நாச்சியார் சிவகங்கையில் ஆங்கிலேய படையுடன் போரில் ஈடுபட்டார். அப்போது, வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தது மருது சகோதரர்கள்
இரு மாபெரும் வீரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் சிவகங்கையை விட்டு வெளியேறினர்கள்
#மருதநாயகம்
1725 ஆம் வருடம் பிறந்து 1764 வரை பல வீரச் செயல்கள் புரிந்து 40 வயதியில் வீரமரணம் அடைந்தவர் நம் மருதநாயகம். கிழக்கிந்திய கம்பெனியின் கூலிப்படைத் தளபதியாக இருந்த கான்சாகிப் மருதநாயகம், பின்னாளிலேயே பிரிட்டிசாரின் சூழ்ச்சிகளை அறிந்து அவர்களை எதிர்த்து போரிட்டார்.
அதன் விளைவு, தன் நம்பர்களாலேயே சூழ்ச்சியில் சிக்கி தூக்குக் கயிற்றில் வீரமரணத்தை எய்தினார். இன்றும், கொடைக்காணல் சாலையும், மதுரை மீனாட்சி அம்மன், கள்ளலகர் கோவிலும் #மருதநாயகம் பெயரை போற்றுகிறது
#தீரன்சின்னமலை
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மூன்று பெரும் போர்கள் நடைபெற்றது என்றால் அது தீரன் சின்னமலைக்கு உரியதுதான். கிழக்கிந்திய படையை தீரன் சின்னமலை தனது சிறியபடையைக் கொண்டு போரிட்டு வெற்றி பெற்றது வரலாற்றுச் சான்று.
1801யில் காவிரிப் போர், 1802யில் ஓடாநிலைப் போர், 1804யில் அறச்சலூர்ப் போர் என மூன்று முறை ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையிடம் படுதோல்வியடைந்து விரக்தியுற்றனர்கள்!!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.