SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Profile picture
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi

Aug 15, 2020, 12 tweets

#இருவர் திரைப்படம் மீண்டும் பார்த்தேன். 23 ஆண்டு இடைவெளியில் பற்பல புரிதல் மாற்றங்களைத் தாண்டி அந்தப் படத்தின் திரைமொழியும், உடை,கலை, நிறம் போன்ற டெக்னிகல் மெனக்கெடல்களும் பிரமிக்க வைத்தன. ஓர் இயக்குநராக மணிரத்னம் வானுயர்ந்து நிற்கிறார். மோகன்லால், ப்ரகாஷ்ராஜ் இருவருமே

மகா கலைஞர்கள் என்பது தெளிவு. படத்தின் கதையை முன்னகர்த்தி செல்வதில் பாடல்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஏ.ஆர்.ரஹமான் பின்னியெடுத்துள்ளார். ‘நறுமுகையே’ பாடல் காலம் தாண்டி நிற்கும். பின்னணி இசையில்தான், காட்சிகளின் கனம் தாளாமல் சில நேரம் திகைத்துப் போய் நின்றதாகக் கருதுகிறேன்.

இத்தனை இருந்தும், திரைப்படமாக முழுமை பெறாமல் போனது கதையின் நிறைவின்மைதான் என கருதுகிறேன். கலைஞர்-எம்ஜிஆர் கதைதான் இது எனக் கொண்டால், அபாரமான துவக்கம் காணும் எம்ஜிஆரின் கதாப்பாத்திரம் போகப் போக தட்டையாக ஆகிவிடுகிறது. முதல்வர் ஆனவுடனே தன்னை ஒரு

கூட்டுக்குள் அடைத்துக் கொண்டதும், தனது பழைய திரையுலக ஆளுமை ஒன்றைக் கொண்டே ஆட்சி நடத்தியதும் கூட காரணமாக இருக்கலாம்! இதிலிருந்து சுவாரஸ்யமாக சொல்ல கதாசிரியருக்கு எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, கலைஞர் கதாப்பாத்திரம் ஜொலிக்கிறது. தொடர் தோல்விகள் கண்டாலும், கவிதை, கதை, கட்டுரை, மாநாடு

தொடர் கூட்டம், போராட்டங்கள் என வெகு சுவாரஸ்யமான வாழ்வை அவரே தகவமைத்துக் கொண்டதால் கதாசிரியரின் பணி இங்கு சுலபமாகிறது. கமிஷன் ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு, ரிப்போர்ட்டை முதல்வர் படிக்கிறாரா? அமைச்சர் படிக்கிறாரா? இல்லை நான் படிக்கட்டுமா என சட்டமன்றத்தில் கேட்கும் கெத்து 👌

நட்பை வெளிக்காட்டும் விதத்தில் மோகன்லால்தான் (எம்ஜிஆர்) சிறப்பு. பல தருணங்களில் கலைஞரின் நட்பை போற்றுகிறார். கலைஞரை சொல்லும் கட்சியினரை காரை விட்டு இறக்கியும் விடுகிறார். பிரகாஷ்ராஜோ, தமிழ்நாடு கண்ட, காணப்போகும் முதல்வர்களிலேயே தான் தான் சிறந்த முதல்வராக இருக்கணும் என்பதையே

திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆருக்கு அதாங்க.. மோகன்லாலுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்கும்போதே அதை தான் எதிர்த்ததாக கலைஞர் ஐ மீன் பிரகாஷ்ராஜ், எம்ஜிஆரிடமே சொல்கிறார். அதே போல கட்சி வென்று ஆட்சியைப் பிடித்ததில் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு முக்கிய காரணம் என்பதையும்

வெளிப்படையா சொல்கிறார். மோகன்லால் (எம்ஜிஆர்) தனக்கு அமைச்சர் பதவி கேட்கும்போது, தனது முதல் பட்டியலிலேயே எம்ஜிஆர் இருந்ததகவும், நடிப்பதை நிறுத்தினால் (ஐ மீன் சினிமாவில்) உடனே அமைச்சர் பதவி தருவதாகவும் சொல்கிறார். இப்படி கலைஞரின் கதாப்பாத்திரம் ஓரளவு நேர்மையாகவே உள்ளது. ஆனால்,

எம்ஜிஆர் கதாப்பாத்திரம் மவுனமாக இருந்து சிரித்தே காய் நகர்த்துகிறது. திரும்ப திரும்ப ஐஸ்வர்யா ராய் (ஜெயலலிதா) அவரது அரசியல் நோக்கம் குறித்து கேட்கும்போதும் சிரித்தே மழுப்புவார். பொதுக்கூட்டம் ஒன்றுக்குக்கு முதல்வர் பேச ஆரம்பித்தவுடன் போகலாம் என உதவியாளரிடம் சொல்வார். கட்சியை

விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என காத்திருந்ததைப் போல செய்தி வந்தவுடன் நிருபர்களுக்கு பாயாசம் தருவார். நிஜ எம்ஜிஆர் இத்தனை பூடகமானவரா என தெரியலை. ஆனால், அவருடைய தேர்தல் கணக்கு சரியானது என்பதை நிரூபித்தார். இரு கேரக்டர்களிலும் போட்டியே இன்றி தனித்து வெல்பவர் பிரகாஷ்ராஜ்தான்.

தேசிய விருதுக்கு முற்றிலும் தகுதியான நடிப்பு. இறுதிக் கட்டத்தில் தான் வெளிக்காட்டாத அத்தனை நட்பையும் தன்னந்தனியாக கவிதைவழியே கொட்டித் தீர்க்கும்போது ஜொலிக்கிறார்.
கலைஞர் - எம்ஜிஆர் கதை என்பது இரு மனிதர்களின் நட்புவழி கதை அல்ல. ஐம்பது ரூபாய் மாத காண்டிராக்ட்டில் ஸ்டூடியோவில்

வேலை செய்த இரு நண்பர்கள் இருவரும் தத்தமது தனித் திறமையாலும், உழைப்பாலும் அடுத்த 50 ஆண்டுகள் தமிழ்நாட்டையே கட்டி ஆண்ட சரித்திரம் அது. அதை அவர்களின் பலம், பலவீனத்தோட காட்சிப்படுத்தியதில் மணிரத்னம் டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆகியுள்ளார் என்றே சொல்வேன்.
A Must See Movie.
#AmazonPrimeVideo

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling