SKP KARUNA Profile picture
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
Twitter author Profile picture சுவாமி Profile picture Haja Mohaideen Profile picture Sundar Vasudevan Profile picture Vimalkumar Profile picture 11 subscribed
Mar 30, 2023 9 tweets 2 min read
"அட்சயபாத்திரா" எனும் தொண்டு நிறுவனம் மூலம் மிகப் பெரிய தில்லாலங்கடி வேலை நடந்திருப்பதை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் @ptrmadurai விளக்கினார்.
முதலில் அந்த பேச்சு வந்தது உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதன்முதலில் எடப்பாடி அரசுதான் கொண்டு வந்தது என்று பேசினார். உடனே அமைச்சர் மா.சு எழுந்து, காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு இதற்கு முன்பு தொடங்கவில்லை. உறுப்பினர் கூறுவது அட்சய பாத்திரா எனும் என்.ஜி.ஓ சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் செய்த தொண்டு பணியை தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார். பல்வேறு NGO
Mar 15, 2023 12 tweets 2 min read
கடவுளின் குழந்தைகள் :
#Autism பற்றி டைம்லைனில் நிறைய கருத்துகளைக் காண்கிறேன். இந்தக் குறைபாட்டை பொதுப்படையாக ஒற்றைச் சொல்லில் அடைத்து விட முடியாது. பிறவி குறைபாடுகள் பல வகை உண்டு. ஆட்டிசமே ஐந்து வகை., அது போக CP.,
மிகவும் உற்று கவனித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளக் கூடிய சிறிய அளவிலான பாதிப்பு முதல் உடலின் எந்த அசைவையும் கட்டுப்படுத்த இயலாமல் motor movements கட்டுப்பாடு அற்றவர்கள் வரையில் பல விதமான குறைபாடுகள் உள்ளன. இது நோய் அல்ல! குறைபாடு மட்டுமே! Stephen Hawking பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் ஆகச் சிறந்த அறிவியிலாளரான அவர் கூட இதே வகையில்
Feb 28, 2023 21 tweets 3 min read
#Thread
"ஒரு சாதாரண இடைத்தேர்தலுக்கு ஆளும்கட்சியான திமுக இத்தனை மெனக்கெட வேண்டுமா? செய்த சாதனைகளைச் சொல்லிட்டு காலாட்டிக் கொண்டே ஜெயித்திருக்கலாமே!" - இந்த வசனத்தை வெவ்வேறு குரல்களில் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் கேட்டிருப்பீர்கள். அதற்கான பதிலை இதில் சொல்கிறேன். ஒரு சாதாரண இடைத்தேர்தலைக் கொண்டு என்னவெல்லாம் பகடை ஆட்டங்கள் நடத்தப்பட்டன என்பதைப் பாருங்கள்.
1. ஈரோடு கிழக்கில் 2021 தேர்தலில் வென்றது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, திமுக தலைவர், காங்கிரஸ் தலைவரை அழைத்து, அது உங்கள் இடம். நீங்கள்
Feb 21, 2023 9 tweets 3 min read
மீண்டுமொரு முறை சொல்கிறேன். கிருஷ்ணகிரியில் நடந்த ராணுவ வீரர் கொலை இரு தரப்பினருக்கு இடையே நடந்த அடிதடியின் விளைவே தவிர வேறில்லை. கிராமப்புற வாழ்வைப் பற்றி குறைந்தபட்ச அறிவு இருந்தால் கூட நடந்ததைப் புரிந்து கொள்ள முடியும். ஏதோ இராணுவ ரகசியத்தை களவாட முயன்றபோது எதிரிகளால் கொல்லப் பட்டதைப் போல தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவின் சதி திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது.
பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கிய வாய்த்தகறாறு இரு தரப்புக்குமான பெரும் மோதலாக முடிந்துள்ளது. யாருக்கு ஆள் பலம் அதிகம் எனும் வழக்கமான ஈகோதான் பல நுறு கிராமவாசிகளை சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகளாக
Feb 20, 2023 12 tweets 3 min read
தற்போது state level registry வச்சிருக்கோம். மாற்று உடல் உறுப்புகள் தேவைப்படுவோர் அதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மூளைச் சாவு, விபத்தினால் இறப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் கிடைக்கும்போது, அந்த ரெஜிஸ்டிரியில் உள்ள வரிசைப்படி அந்த உறுப்புகள்
அளிக்கப்படும். இந்தப் பணியை மாநில சுகாதாரத் துறையின் கீழ் உள்ள உயர்மட்டக்குழு நிர்வகித்து வருகிறது. ஒருவேளை உடல் உறுப்புகள் கிடைத்து, நமது மாநிலத்தில் அதற்கான தேவை இல்லாத பட்சத்தில் பக்கத்து மாநிலங்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதும் வழக்கம். முன்னுரிமை நமது மாநிலத்து நோயாளிகளுக்கு! தமிழ்நாடு கண் தானத்திலும், உடல்
Jan 31, 2023 16 tweets 3 min read
#Thread : நினைவுச் சின்னங்கள் :
தமிழ்நாட்டில் ஐயன் வள்ளுவர் முதல் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், எம்ஜிஆர் முதல் கி.ராஜநாராயணன் வரை அத்தனை ஆளுமைகளுக்கும் நினைவுச் சின்னங்கள், சிலைகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் என எண்ணற்ற அடையாளங்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அத்தனையும் அரசு செலவில்தான் நடந்தது.
அமைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். அண்ணல் அம்பேத்கர் பெயரில் பல்கலை தொடங்க அவர் பிறந்த மஹாராஷ்டிராவிலேயே முடியாமல் தவித்தபோது, இங்கே தமிழ்நாட்டில் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணலின் பெயரை சூட்டியவர் தலைவர் கலைஞர். அண்ணா என்றால்
Oct 29, 2022 6 tweets 1 min read
பாஜக தலைவர் அண்ணாமலை அபாண்டமாக குற்றம்சாட்டும் அந்த உளவுத்துறை ஏடிஜிபி டேவிட் ஆசிர்வாதம் தனது பணிக்காலத்தில்,
உளவுத்துறையில் எஸ்.பி, அங்கேயே டி.ஐ.ஜி, அதிலேயே ஐஜி., இப்போது உளவுத்துறை ஏடிஜிபி. அதிமுக, திமுக என இரு ஆட்சி முதல்வர்களாலும் விரும்பி அழைக்கப்பட்ட அதிகாரி. கலைஞர், ஜெயலலிதா இருவரின் நம்பிக்கையையும் பெற்றவர்.,
இந்தியாவிலேயே உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஒரு ரோல் மாடலாக மதிக்கப்படுபவர்.,
மத்திய அரசு போதைத் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக அழைக்கப்பட்டவர்,
ஐ.நா பாதுகாப்புப் படையில் கொசாவா நாட்டில் பணிபுரிய அழைக்கப்பட்டவர்,
சென்ற தேர்தலில் கூட
Sep 16, 2022 20 tweets 3 min read
#Thread
நேற்று இரண்டு நிறுவனங்கள் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. முதலில் நீதிமன்றம் : குற்றவியல் தண்டனைச் சட்ட நடைமுறை இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானதுதான்.
ஒரு கையில் தலையுடனும், இன்னொரு கையில் அரிவாளுடனும் ரத்தம் சொட்ட காவல்நிலையத்தில் போய் நின்று நான் தான் வெட்டினேன்னு சொன்னாலும் அவனை அங்கிருந்தே நேரா சிறைக்கு அனுப்பி விட முடியாது. அந்த அரிவாள்தான் தலையை வெட்டியதா? அந்த அரிவாளை அவன்தான் பிடிச்சிருந்தானா? என பல நிரூபணங்கள் தேவை. The burden of proof belongs to the prosecution. ஒருவேளை கொலையாளி வெட்டிய தலையோட நேரா நீதிமன்றம் சென்றாலும் இதே வழிதான்
Sep 8, 2022 8 tweets 2 min read
#NeetResult
தமிழ்நாட்டில், 1.32,167 பேர் நீட் தேர்வு எழுதி, 67787 பேர் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவம் & சார்ந்த படிப்பில் ஆர்வம் கொண்டவர்கள். இதில் தேர்ச்சி அடையாத 64380 பேர்களில் சராசரியாக 40000 பேர் மீண்டும் NEEt Repeater Coaching சேருவார்கள். அது போக அடுத்த பேட்ச் 1.30 லட்சம் பேர்கள் வேற...
அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது தேர்ச்சியடைந்த 67787 பேர்களுக்கும் மருத்துவ சீட் கிடைக்குமா என்றால் அதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில் இருப்பது 5300 இடங்கள்தான். அந்த இடங்களிலும் 4000 இடங்களை இதற்கு முன் பல பேட்ச்
Aug 31, 2022 7 tweets 2 min read
#Thread
விமலா டீச்சர் இன்று மாலை இறந்து விட்டாரென செய்தி வந்தது. ஐந்தாம் வகுப்பு வரை அரசு உதவிப் பள்ளியில் படித்த என்னை ஆறாவது டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியம் சேர்த்து விட்ட போது எனக்கு இங்கிலீஷ் பாடபுத்தகங்கள் மீது வெறுப்பே வந்து விட்டது. சின்ன சின்ன சொற்களுக்கு Image கூட பொருள் தெரியாமல் முழிப்பேன். வகுப்பே சிரிக்கும். (அவர்களுக்கும் தெரியாது என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்) அவமானமா இருக்கும். Lifco dictionary வைத்து பாடபுத்தகத்தில் மேலே தமிழில் எழுதி வைத்துப் படித்தை ஒரு நாள் டீச்சர் பார்த்துட்டாங்க. அவர்தான் எனக்கு வகுப்பாசிரியர்.
Aug 23, 2022 6 tweets 2 min read
#Thread
"நடங்க! ஓடாதீங்க" என்பதுதான் மருத்துவர்களின் post covid கால அட்வைஸ். புதுசா ஜிம்லே சேருபவர்கள் நிச்சயம் இதைக் கடைபிடியுங்க.
Cardio Exercises are the basic requirement for the Wight loss program in any Gym.
இதிலே டிரெட்மில் ஜாகிங், ரன்னிங் இரண்டுமே குறைந்த நேரத்தில் அதிக கலோரி எரிப்பு என்பதாலும், ஜிம் டைம் அதிகபட்சம் ஒரு மணி நேரமே என்பதாலும் பெரும்பாலும் இவைகளையே பரிந்துரைப்பார்கள். Cardio exercise means making your heart pump blood faster into your system. எனவே, கார்டியோ பயிற்சி செய்பவர்கள் படிப்படியாக தனது இதயத்தைப் பழக்கிட வேண்டும்.
Jul 12, 2022 8 tweets 2 min read
#Thread
ஒரு மாதத்தில் இரண்டு பொதுக்குழுக்களை அதிமுக நடத்தியது. இரண்டுமே வாரநாட்களின் முற்பகலில், தேசிய நெடுஞ்சாலை அருகே நடத்தப்பட்டது. முதல் கூட்டத்தில் இரு அணிகளும் கலந்து கொண்டு கூட்ட அரங்கில் பேனர் கிழிப்பு முதல் தண்ணீர் பாட்டில் வீச்சு வரை சகலமும் நடத்தினர். ஆனால், வெளியில் ஒரு அசம்பாவிதமும் இன்றி மிகச் சிறப்பான பாதுகாப்பை அளித்து பொதுக்குழுவை நடத்திய காவல்துறை ஒத்துழைப்பு தந்ததை மக்கள் பார்த்தனர். ஆனால், அதிமுக தலைவர்கள் யாருக்கும் காவல்துறைக்கு நன்றி சொல்லும் குறைந்தபட்ச பண்பு கூட இல்லை. முதல் பொதுக்குழுவில் நடந்த கலாட்டாவை காட்டி அடுத்தப்
Jun 25, 2022 6 tweets 1 min read
#thread
அறம் என்பது யாதெனில்...
ஒரு முறை எழுத்தாளர் பவா செல்லதுரை சாகித்ய அகாடமியின் போர்ட் மெம்பராக இருந்தார். அவருடைய இறுதி ஆண்டில், அப்போது மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட "சிதம்பர நினைவுகள்" புத்தகம் வந்திருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அதைப் போலொரு பேசப்பட்ட மொழியாக்கப் படைப்பு தமிழில் வந்ததில்லை என உறுதியாக சொல்வேன். சில ஆயிரம் புத்தகங்கள் இன்று வரையில் அச்சிடப்பட்டு பல ஆயிரம் தமிழ் வாசகர்களை சென்றடைந்த புத்தகம் அது. அதை எழுதிய மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் மிகப் பிரபலமான மனிதராகவே மாறிவிட்டார். உண்மையில் மனதை
Apr 21, 2022 4 tweets 1 min read
பகலில் அதிகபட்சம் ரூ 3.50 க்கு கிடைக்கும் தனியார் மின்சாரத்தின் விலை இரவில் யூனிட் 20 ரூபாய்! நேற்றிரவு மட்டும் 35 கோடிக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி உள்ளோம். இதே விலையில்10 நாளைக்கு வாங்கினா ரூ 350 கோடி போச்சு. அதிலும் கணிசமான பில் அதானிக்கு போகும் என்பது வேற விஷயம். மத்தியத் தொகுப்பில் இருந்து இதேபோல மின்சாரம் குறைவாக தந்தாலோ, நமக்குத் தேவையான நிலக்கரி அளவைக் குறைத்தாலோ வரும் மே மாதம் மிக அதிகமான பவர் கட் மற்றும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இரவில் நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை இயன்றவரை குறைத்து சிக்கமாக இருந்து அரசுக்கு ஒத்துழைக்க
Jan 3, 2022 20 tweets 3 min read
ஆர்.எஸ்.எஸ் vs ஜெயலலிதா : போன திரெட்லே சிலர் ஜெ ஆட்சியில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் முகாம்களை நடத்த விடலையே! அவர்தானே இரும்புப் பெண்மணி என்றெல்லாம் சிலாகித்திருந்தார்கள். அதைக் கண்டு நீங்களும் வியந்திருப்பீர்கள்!
அதைப் பற்றி விரிவா பார்ப்போம். ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் அமைப்பாக 1980 ஆம் ஆண்டில் பாஜகவை தொடங்கிய போது அதற்காக வைத்த சில முக்கிய செயல்திட்டங்களில் முதல் மூன்று செயல்திட்டங்கள்
1. பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில்
2. காஷ்மீர் மாநிலத்தின் தனிச் சலுகையான 370 பிரிவு நீக்கம்
3. இந்தியாவில் பொது சிவில் சட்டம்.
34 ஆண்டுகள் கழித்து 4ஆம் முறையாக (முதல்முறை
Jan 1, 2022 8 tweets 2 min read
#TwitterAddiction
டிவிட்டர் ஒரு நேரந்தின்னி என்பதை நாம் அறிவோம். அண்மையில் எனது Twitter Screen time data பார்த்தபோது நான் அதிர்ந்தே போனேன். ஏறத்தாழ 6 முதல் 7 மணி நேரம் சராசரியாக செலவிட்டிருக்கிறேன். இது தூங்கும் நேரத்துக்கு இணையானது. டெக்னிகல்லி டிவிட்டருக்கு இடையேதான் இயல்பு வாழ்க்கையே நடந்திருக்கிறது. இழந்தது வெறுமனே நேரம் மட்டுமல்ல! படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. எழுத்து அறவே நின்றே போனது. இசை கேட்பதே இல்லை என்றாகிவிட்டது. சினிமா தியேட்டரில் கூட பலமுறை டிவிட்டரை திறந்து பார்க்குமளவு கை பழகி விட்டது. நடுநிசி, அதிகாலை என நேரங்காலம்
Dec 31, 2021 10 tweets 2 min read
கோவையில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை ஏன் திமுக அரசு தடுத்து நிறுத்தலை என்றொரு கேள்வி. அவர்களுக்காக இல்லைன்னாலும் நண்பர்களின் புரிதலுக்காக சில விளக்கங்கள் சொல்கிறேன்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பயிற்சி முகாமோ, தனிக்கூட்டமோ நடத்துவது சட்டப்படி பெருங்குற்றம். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தைப் பயன்படுத்துவதையோ, புலிகள் இயக்கத்தின் முக்கிய நாளான மாவீரர் தினக் கொண்டாடத்தையோ தமிழ்நாட்டில் நாம் தடுத்து நிறுத்துவதில்லை. காரணம் தனி ஈழப் போராட்டம் நமக்கு
Dec 22, 2021 7 tweets 1 min read
வன்முறை : நாதக தம்பிங்க, தமிழ்த்தேசியவாதிகளுக்கு என எப்போதும் தனி அகராதி உண்டு. அதிலும் சீமான் தினமும் புதுபுது சொற்களை அதற்கு கொடை அளிப்பார்.
இன்னைக்கு அவங்க டாபிக் வன்முறை. நேத்திக்கு கருத்துரிமை.
வன்முறைக்கு ஒரே பொருள் வன்மையான முறையில் ஒரு செயலை செய்வது. ஆனா,
1. பெல்ட் பாம் கட்டிட்டு முன்னாள் பிரதமர் உட்பட 16 பேரை கொன்ற போது அதுக்கு பழிக்கு பழி என பெயர்.
2. எதிர் நிலையில் இருந்த போராளிகளை கொன்றபோது அதுக்கு பேர் சீரமைத்தல்.
3. இஸ்லாமியர்களை கொன்ற போது அது இனச் சுத்திகரிப்பு.
4. சிங்களவர்களைக் கொன்ற போது அது விடுதலைப் போர்.
5. நெய்தல் படை அமைத்து
Dec 19, 2021 10 tweets 2 min read
வதந்திகளின் வீரியம் :
உண்மை நடந்து போனால் வதந்தி விமானத்தில் போகும் என்பார்கள். அப்படியொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேண்டீன் தந்த தரமற்ற உணவு உண்டதினால் பலருக்கு வாந்தி, மயக்கம். ஒரே நேரத்தில் பல பெண்கள் உடல்நலம் குன்றியதாலும் அந்த உணவுத் தரத்தின் மீது தொடர் கோபம் இருந்த காரணத்தாலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் தொடங்கினர். உடனடியாக அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போதே, மருத்துவமனைக்கு சென்ற பெண்கள் இறந்து விட்டதாக வதந்தி
Dec 19, 2021 4 tweets 1 min read
1. அனைத்துப் பள்ளிகளிலுமே இந்த life style management வகுப்பு தொடங்கி இவைகளைக் கற்றுத் தரணும். 5 ஆம் வகுப்புக்குள் ஒரு பிள்ளை தங்கள் வீடுகளில் டாய்லெட் கழுவும் பணியை விரும்பிச் செய்யும்படி அதன் அவசியம், செயல்முறை, பயன்படுத்தும் முறைகளை பயிற்றுவிக்கணும்.
2. வேலைக்காரம்மா தாங்கள் பயன்படுத்தும் டாய்லெட்டை சுத்தம் செய்ய பிறந்தவர் எனும் பொதுபுத்தியை மாற்றணும்.
3. பொது இடங்களில் Uni Sex Toilet களில் பெண்களும் பயன்படுத்தும் வகையில் அதை சுத்தமாக பயன்படுத்த வேண்டும் எனும் அறிவை ஆண்பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
4. தனது வகுப்பறை, தங்கள் கழிவறைகளை சுத்தமாக
Dec 18, 2021 5 tweets 2 min read
#Maanaadu
"Listen.. Watch #Maanaadu in theatre" என நண்பன் செய்தி அனுப்பி இருந்தான். அவன் பேச்சை நான் கேட்பேன் என்பதால் சத்யம்லே பார்த்தேன்.
1. முதல்வரை கொன்னுட்டு இன்னொருத்தர் முதலமைச்சராக ஆக சதி செய்யும் அரதப் பழசான கதை.
2. வெடிகுண்டு, சதி என்றாலே கலவரம், முஸ்லீம் ஆங்கிள் கொடுக்கும் அதைவிட அரதப் பழசான கண்ணோட்டம்.
3. இதைச் சொல்ல தேர்த்தெடுத்த புத்தம் புதிய திரைக்கதை அசத்தல்.
4. இதைப் பயன்படுத்தி நெடுநாட்களாக இஸ்லாமியர் மீது இருந்த தவறான பார்வையை சமன் செய்யும் அந்த அக்கறை அதை விட அசத்தல்.
5. ஹீரோ வில்லன் ரேஞ்சுலும், வில்லன் ஹீரோ ரேஞ்சுலும்