ஜூலை மாத பூவுலகு இதழ் வெளிவந்துவிட்டது:-
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சுற்றுச்சூழல் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாகச் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் EIA2020 க்கு எதிராக இன்று வெமக்களிடம் வெளிப்படும் விழிப்புணர்வும் ஒருங்கிணைப்பும் பிரம்மிப்பூட்டுகிறது. தனிமனிதர்களாகவும்
சமூகமாகவும் பெரும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டிருக்கும் நிலையிலும் சூழல் விரோதச் சட்டத்துக்கு எதிரான இந்திய தேசத்தின் மக்களிடமிருந்து எழும் அறச்சீற்றம் நம்பிக்கையூட்டுகிறது. இந்நிலையில் EIA2020 சிறப்பிதழாக வெளிவருகிறது ஜூலைமாத பூவுலகு இதழ்.
சிறப்பிதழின்
முதன்மையானக் கட்டுரையாக வெளிவந்திருக்கிறது தோழர். பிரபாகரனின் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?’ என்ற கட்டுரை. சூழல் தாக்க அறிக்கையின் அச்சுறுத்தும் அம்சங்களை விரிவாகவும் ஆழமாகவும் அலசுகிறது இக்கட்டுரை.
இன்றைய நெருக்கடியான சூழலில் நமது
வேளாண்மைக் கொள்கைகள் மற்றும் உணவு உற்பத்தி எப்படியானதாக இருக்கவேண்டும் என்று தனது “ஒற்றை அறுவடைப் புரட்சியில்” விவரித்திருக்கிறார் தோழர் மணிஷங்கர்.இந்தியாவின் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டங்கள்,காட்டுயிர்க் குற்றத்தரவுகள் அவற்றைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களைப் பேசுகிறது முனைவர்
பட்ட ஆய்வாளர். சங்கர் பிரகாஷ் அவர்களின் கட்டுரை.சமீபத்தில் மத்தியப் புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ‘இந்தியாவின் முதல் காலநிலை அறிக்கை’யின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன்அபாய அறிவுப்புகளைப் பற்றி விவரிப்பதோடு அரசை நோக்கியக் கவலைதரும் கேள்வியோடு முடிகிறது சின்னக் கண்ணன்
அவர்களின் காலநிலை மாற்றத்தால் ‘கொதிக்கும் பெருங்கடல்கள், அதிகரிக்கும் பேரிடர்கள் கட்டுரை’.
அமரபாரதியின் ஒரு வானம்பாடியின் பாடல் மற்றும் யானைக் காதலர் ஜெகதீஷின் யானைகளின் உலகம் பகுதியும் இயற்கையின் மியச்சிறியதும் மிகப்பெரிதுமான உயிரினங்கள் குறித்த சுவாரசியத் தகவல்களை தருகின்றன.
அப்படியே சூழல் மற்றும் காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வுதரும் ‘சூழல் அறிவோம்’ குழு குறித்த அறிமுகத்தைத் தருகிறது இன்னொரு கட்டுரை.நாம் கசக்கியெறியும் காகிதங்களை சூழல் மற்றும் கலாச்சாரப் பார்வையில் அணுகுகிறது ஜீயோ டாமினின் ‘காகித நினைவுகள்’ கட்டுரை. தோழர் சமந்தாவின் ‘பவன்
சுக்தேவும் பசுமைப்பொருளாதாரமும் கட்டுரைத் தொடர்பசுமைப் பொருளாதாரம் குறித்த அறிமுகத்தையும் பவன் சுக்தேவ் அவர்களின் பங்களிப்பையும் பற்றிப் பேசுகிறது.நண்பர்களே!தமிழகத்தின் முழுமையான சுற்றுச்சூழல் இதழானப் பூவுலகு இப்போது உங்கள் கைகளில்.இதை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும்
அறிமுகப்படுத்துங்கள். மட்டுமின்றி கல்விக்கூடங்கள் மற்றும் நீங்கள் பங்கேற்கும் அமைப்புகளில் வாசியுங்கள் விவாதியுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அது எங்கள் பங்களிப்பை இன்னும் செழுமையாக்கும்.
இதழை பதிவிறக்கம் செய்ய :-
poovulagu.org/wp-content/upl…
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
