G. Sundarrajan Profile picture
Climate activist, environmentalist, Social activist, Entrepreneur, books, travel. views are personal
®️anger Profile picture jagan babu Profile picture tnwatch Profile picture Jessayen Thangaraj Profile picture AMSARAJ Profile picture 5 added to My Authors
Jun 15 4 tweets 2 min read
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததை அடுத்து ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பதாக சிலர் பேசித்திரிந்தனர்,அதுவும் தமிழக பாஜகவினர் சத்தம் அதிகமாகயிருந்தது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியும் இந்த மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதே நமக்கு துரோகம் விளைவிக்க என்று . இதோ அந்த துரோகம் வெளிவந்துவிட்டது. “காவிரியில் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாதது மட்டுமல்ல, இப்போது உச்சநீதி மன்ற தீர்ப்பை துச்சமென மதித்து மேகதாட்டு திட்டம் குறித்து, வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள 16வது காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் விவாதிக்கவுள்ளார்கள்”. காவிரி
Jun 14 9 tweets 2 min read
எண்ணும் எழுத்தும்:அன்பும் வாழ்த்துகளும் முதல்வரே

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் “கல்வித்துறை”சார்ந்த செயல்பாடுகளை தரவரிசைபடுத்தி (PGI)ஒன்றிய கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. பல அளவீடுகளில் மாநிலத்தில் உள்ள கல்வித்துறையை தரவரிசைப்படுத்தி இந்த மதிப்பீடுகள் வெளிவந்தன. Image அந்த அளவீடுகள் பலவற்றில் தமிழக பள்ளி கல்வித்துறை முதல் ஐந்து இடங்கிளில் வந்தாலும், “கற்றல் அடைவில்” (learning outcomes)இந்தியளவில் தமிழகம் 23வது இடத்தில் இருந்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது குறிப்பிட்ட வகுப்பை முடித்த பிள்ளைகளுக்கு அந்த வகுப்பிற்கு ஏற்ற பெருக்கல்,ஆங்கிலம் Image
May 19 4 tweets 1 min read
நெல்லை குமரி மாவட்டங்களிலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கற்கள், எம்-சாண்டு குறித்து செய்தியாளர்களுக்கு வருவாய் துறை செயலர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிக்கிறது. அண்டை மாநிலத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இயற்கை வளத்திற்கு 20% வரி போடப்படுவதாகவும், தமிழ்நாட்டில் அதற்கு 10% மட்டுமே வரி என்று குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் இயற்கை வளம் பரிபோகிறதே என்கிற கவலையில்லாமல் செயலர் சொல்லியுள்ள பதில் பொறுப்பற்ற தன்மையின் உச்சம்.மலைகளும் குன்றுகளும் யாரும் உற்பத்திசெய்தது அல்ல, அவை இயற்கையின் கொடை. உங்களிடம் ஒரு பந்தயம் வைக்கிறோம், கேரளாவில்
Nov 22, 2021 4 tweets 2 min read
கன்னியாகுமரி மாவட்டம் தற்போது மிதப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், அங்குள்ள மலைகள் உடைக்கப்பட்டு அது குவாரிகளாக மாற்றப்பட்டு, கேரளாவிற்கு கல் கடத்தப்படுவதுதான். மலைகளில் உள்ள மரங்கள், தாவரங்கள், புதர்கள், புல்வெளிகள் எல்லாம் மழை பொழியும் போது தண்ணீர் வேகமாக சென்றுவிடாமல் மெதுவாக தடுத்து அனுப்பும், கீழே உள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் தவிர்க்கப்படும். இப்போது மலைகள் தகர்க்கப்படுவதால் தண்ணீர் விரைவாக ஓடி, வெள்ளம் ஏற்படுத்தி, கடலுக்குள் சென்று கலந்துவிடும். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளிலிருந்து பாறைகள் கேரளாவில் உள்ள
Nov 15, 2021 9 tweets 2 min read
நேரு பிரதமராக பொறுப்பேற்றவுடன், பெரிய பெரிய திட்டங்களின் மூலம்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும், பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது மூலம் வளம் மக்களிடமே இருக்கும் என்று எண்ணி் பல நிறுவனங்களை கட்டமைத்தார். ஹிராகுட் மற்றும் பக்ரா அணைகள் புதிய இந்தியாவின் கோயில்கள் என்றார். மத்திய இந்தியாவில் மிகப்பெரிய சுரங்கங்கள் அமைத்தார் அது 1950களின் பார்வை. நேரு, சாஸ்திரிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி “அமைதி பள்ளதாக்கில் திட்டமிடப்பட்ட புனல் மின் திட்டத்தை ரத்து செய்தார், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற புவி மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே
Nov 14, 2021 6 tweets 2 min read
காலநிலை உச்சபுள்ளிகள் (tipping points) ஒன்பதுள்ளன. உச்சபுள்ளிகளை இயல்பாக புரிந்துகொள்வதென்றால், மலை உச்சியில் ஒரு பாறாங்கல்லை வைத்து, உருண்டோடிவிடாமல் இருப்பதற்காக சிறிய கல்லை அடைப்பாக வைப்பார்கள், இந்த சிறிய கல்லை உச்சப்புள்ளியாகவும் பாறையை காலநிலையாகவும் யூகித்துகொள்ளவும். அடைப்பாகவுள்ள சின்ன கல்லை எடுத்துவிட்டால் பாறை எப்படி உருளும் என யாராலும் கணிக்கமுடியாது. அதைப்போலதான், காலநிலை புள்ளிகள் ஒன்பதும் உச்சத்தை தொட்டுவிட்டால் அதன் பிறகு காலநிலையை யாராலும் கணிக்கவோ மட்டுப்படுத்தவோ முடியாது.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர், புவியின் சராசரி வெப்பநிலை 5
Nov 14, 2021 4 tweets 1 min read
2015 சென்னை வெள்ளத்திற்கு பிறகு, நீரியல் நிபுணர் பேரா.ஜனகராஜன் ஒருங்கிணைப்பில், சென்னையை வெள்ளத்திலிருந்தும், வறட்சியிலிருந்தும் காப்பாற்ற “மக்கள் வரைவு சாசனம்” (People’s Charter) வெளியிடப்பட்டது.

“இது எங்கள் சென்னை” என்ற கூக்குரலுடன் பள்ளி மாணவ-மாணவியர் 15,000பேர் பேரணியாக மெரினா கடற்கரையில் சென்றனர், இந்த பேரணியை @poovulagu மற்றும் SBOA பள்ளிகள் ஒருங்கிணைத்தன.

மக்கள் சாசனத்தை தூக்கி கொண்டு இரண்டு நாட்கள் கருத்தரங்கம் sboa பள்ளியில் நடத்தினோம்.

சென்னை வளர்ச்சி குழுமத்துடன் இணைந்து சென்னை வெள்ளம் தொடர்பான கருத்தரங்கம்
Nov 13, 2021 8 tweets 2 min read
சமூக நீதியோடு சூழலியல் நீதிக்கான எங்கள் பயணம் தொடரும் …

• 2019 ஆம் ஆண்டில் மொத்த உலகமும் உமிழ்ந்திருக்கும் கார்பன் டை ஆக்சைடு 36.4 Gt. தற்போதைய பொருளாதார உற்பத்தி முறைகள் இப்படியே தொடரும் பட்சத்தில் இது தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

• இந்நிலையில் 2030 க்குள் இந்த கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 18.22 Gt க்குள் குறையாவிட்டால் புவியைக் காலநிலைப் பேரழிவிலிருந்து (Catastrophic Climate events) தடுக்க முடியாது என்று ஐநாவின் காலநிலை மாற்றத்துக்கான அதிகாரப்பூர்வமான அமைப்பான ஐபிசிசி அறிவித்திருக்கிறது.

• மேலும் ‘இனி இயல்புநிலை என்பதே பேரிடர்களுக்கு
Oct 20, 2021 9 tweets 4 min read
*பத்திரிக்கைச் செய்தி*
*அனைத்துக் கட்சி தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*
அக்டோபர் 20, 2021
[1] கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டின் பெரும் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2021 ஜூன் மாதம் 22 அன்று வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட முதலாவது அணுஉலை, 70 நாட்கள் மூடப்பட்டு,செப்டம்பர் 2 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. வெறும் 35 நாட்கள் கழிந்ததும் முதலாவது அணுஉலை பழுதுபட்டு அக்டோபர் 8,2021அன்று மீண்டும் மூடப்பட்டது.இந்த கூடங்குளம் கோளாறு வேடிக்கையான விடயமென்பதைத் தாண்டி, விபரீதமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுவரை முதல் இரண்டு உலைகள்
Aug 9, 2021 21 tweets 5 min read
”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” வெளியானது ஐ.பி.சி.சி.யின் அறிக்கை.
கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்து பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டோ இருந்தது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த
Jul 22, 2021 4 tweets 1 min read
கெத்தான_மனிதர்கள்:-

ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் டாலர்கள் சம்பாதிக்கும் "Sadio Mane of Senegal" (West Africa) என்றழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் தனது டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் ஆங்காங்கேத் தோன்றினார்.
ஒரு நேர்காணலில் அதுகுறித்துக் கேட்கப்பட்டபோது நான் அதைச் சரி செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார். மீண்டும் “ஏன் நீங்கள் அதைச் சரிசெய்வதற்குப் பதிலாகப் புதிய மொபைலை வாங்கக்கூடாது?” என்று கேட்கப்பட்டபோது “என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 பெராரி கார்கள், 2 ஜெட் விமானங்கள், வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை வாங்கமுடியும்.
Jul 12, 2021 5 tweets 2 min read
கடந்த வாரம்தான் பாக்கிஸ்தானில் உள்ள ஒரு நகரமும், ஐக்கிய அரபு எமீரகத்தில் ஒரு நகரத்திலும் “வெட் பல்பு வெப்பநிலையை” (wet-bulb) எட்டிவிட்டது என்று கவலையோடு @Poovulagu குழுவில் விவாதித்து கொண்டிருந்தோம்,ஆனால் இன்று சென்னை நகரமே அந்த வெப்பநிலையை நெருங்கி கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு நகரத்திற்கும் பகுதிக்கும், அதன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் (humidity) இவற்றைக்கொண்டு இந்த வெட் பல்பு வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. இந்த வெப்பநிலையை ஒரு பகுதி எட்டிவிட்டால் அதன்பிறகு நம் உடல் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் தன்மையை இழந்துவிடும். அதற்குபிறகு
Jun 19, 2021 7 tweets 1 min read
தமிழ்நாட்டை இராணுவமயமாக்க ஒன்றிய அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் அணுவுலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான், உலகமே கைவிட்ட ஈனுலைகள் மூன்று கல்பாக்கத்தில் அமைக்கப்படுகின்றன. ஈனுலைகள்தான் ப்ளுட்டோனியத்தின் ஊற்று, இந்தியாவில் உள்ள கனநீர் உலைகளின் அணுக்கழிவுகள் கல்பாக்கத்தில்தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இரண்டாவது மறுசுழற்சி மையமும் கல்பாக்கத்தில் அமைகிறது, மறுசுழற்சி மையங்களில் அணுக்கழிவுகளில் இருந்து ப்ளுட்டோனியம் பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. கூடங்குளத்தில் 6உலைகளும் அமைக்கப்படும்
Jun 6, 2021 5 tweets 2 min read
ஆண்டிபயாடிக்ஸ் பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த நெறிமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக்ஸால் நம் உடம்பில் உள்ள “நோய்க் கிருமி எதிர்ப்பு கட்டமைப்பு” வலுவிழக்கிறது. ஆங்கிலத்தில் Anti-microbial resistance (AMR) என்று அறியப்படும் இந்த கட்டமைப்புதான் பல்வேறு கிருமிகளால் நமக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது. ஏஎம்ஆர்தான்“சுகாதார துறையின் காலநிலை மாற்றம் என்கின்றன” ஆய்வுகள்.அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் 1கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில்
Jun 5, 2021 4 tweets 2 min read
கொரோனா தொற்று நமக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இனிமேல் மனித நலன் என்ற ஒன்று தனியாக கிடையாது, காட்டுயிர் நலன், தாவர நலன், சூழலியல் நலன் இவை எல்லாமும் இணைந்ததுதான் மனித நலனாக இருக்க முடியும். காலநிலை மாற்றம் தாவரங்களின் ஊட்டச்சத்து அளவை (Nutritional value) சுமார் 10-12% வரை குறைக்கிறது, அதனால் நமக்கு தேவைப்படும் உணவின் அளவு அதிகரிக்கும். காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர்களின் வாழ்விடங்கள் சுருங்குகின்றன, இவை எல்லாம் மனித நலனில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
உலகநாடுகள் எல்லாம் "ஒருங்கிணைந்த நலன்" (One Health) குறித்த முன்னெடுப்புகளைதான்
Jun 2, 2021 4 tweets 1 min read
மீண்டும் பீட்டா:-மாட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு பதிலாக“தாவரப் பாலை”(plant milk)பயன்படுத்துமாறு @Amul_Coop க்கு @PetaIndia கடிதம் எழுதியுள்ளது.இந்த அறிவுரைக்கு சொல்லப்பட்டுள்ள காரணம்,“உலகம் முழுவதும் வீகன் (vegan)உணவை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான்”என்று சொல்லப்பட்டுள்ளது. பீட்டா சொல்லும் தாவர பால், மரபணு மாற்றப்பட்ட சோயாவிலிருந்து(GM Soya) உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பயிர்களுக்கு எதிரான மனநிலை உருவாகிவரக்கூடிய நிலையில் தங்கள் நிறுவனங்களின் மரபணு விதைகளுக்கு புதிய சந்தையை தேடும் முகமூடிதான் இந்த தாவரப் பால்.
May 31, 2021 6 tweets 2 min read
இந்தியாவில் இதுவரை 12% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,3.2% பேர் மட்டுமே இரண்டு டோஸ்களும் போட்டுள்ளனர்.
நம் நாட்டில் உள்ள 18 முதல் 44 வயது உள்ள 59.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு சுமார் 119கோடி டோஸ் தேவை.
இதைத்தவிர 45 வயதிற்கு மேற்பட்ட 34கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு 68.8 கோடி டோஸ் வேண்டும். இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பாதுகாக்க கிட்டத்தட்ட 180 கோடி டோஸ் தடுப்பூசிகள் வேண்டும், தலையே சுற்றுகிறது.
இன்றைய நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் இரண்டையும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி
Apr 30, 2021 5 tweets 1 min read
கொலைகார இந்திய அரசு:-

இந்தியா ஆக்சிஜனுக்காக தத்தளித்த போது தேவையை விட நான்கு மடங்கு ஆக்சிஜன் எஃகு உருக்காலைகளின் சேமிப்பு தொட்டிகளில் இருந்தது என உச்சநீதி மன்றத்தில் மத்திய எஃகு அமைச்சகம் தகவல்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் கொடுமை என்ன தெரியுமா?

கடந்த ஒருவாரமாக, அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் உச்சமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் உள்ள sail எஃகு ஆலைகளில் மட்டும் சுமார் 16,500
Apr 29, 2021 11 tweets 2 min read
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடே இல்லை என்கிறார் அம்மாநில முதல்வர் யோகி. ஆனால், அங்கு தொடர்ந்து இழப்புகள் அதிகரித்துவருகின்றன. உண்மையில் அந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் சமீராத்மஜ் மிஸ்ரா ஒரு அதிர வைக்கும் கட்டுரையை எழுதியிருக்கிறார். 1. மாநிலம் முழுவதுமே கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இடம் தேடி அலைகிறார்கள். அல்லது இடம் கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடோ மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாத நிலையோ கிடையாது என்கிறார் யோகி.
2. முதல்வரின் கூற்றுக்கு மாறாக,
Apr 24, 2021 13 tweets 2 min read
ராகுல் காந்தி இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி:-
கடந்த மார்ச் 15ஆம்தேதி The Hindu நாளிதழில் ராகுல் காந்தி குறித்த ஒரு கட்டுரையை Rajesh Mahapatraவும் Rohan D'Souzaவும் எழுதியிருந்தனர்.இந்திய அரசியலில் பிரதமர் மோதியின் ஆபத்தான அரசியலுக்கு மாற்று ராகுல் காந்தி மட்டுமே என்பதை அந்தக் கட்டுரையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது:
1. இந்தியாவில் இருவிதமான குடிசைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்று, ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரைகள் கூறுவது. மற்றொன்று, அவரெல்லாம் ஒரு ஆளா என்று ஒதுக்கித் தள்ளுவது.
Apr 24, 2021 7 tweets 3 min read
#கடல்_அட்டை (Sea cucumber):-
பார்ப்பதற்கு நீண்ட உருளையான உருவத்துடன் (உருண்டை வடிவ சிற்றினங்களும் உண்டு) காணப்படும் இக்கடலுயிரினம் ஆங்கிலத்தில் sea cucumber என அழைக்கப்படுகிறது. முட்த்தோலி வகையைச் சார்ந்த இவ்வுயிரினம் தமிழில் கடல் அட்டை, கடல் வெள்ளரி (தமிழ்ப்படுத்தப்பட்ட வார்த்தை என்று நினைக்கிறேன்) என்ற பெயர்களால் சுட்டப்படுகிறது. (வேறு வட்டாரப் பெயர்கள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள்)
கடல் தரையில் மிதவை உயிரினங்களையும் மட்கியத் தாவரங்களையும் உண்டு வாழும் இவ்வுயிரினத்தின் உடலானது நெகிழும் தன்மையுள்ள சதைப்பற்றான தோலால் போர்த்தப்பட்டிருக்கிறது.