Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Aug 15, 2020, 6 tweets

சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

இந்தியாஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.

இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?+

• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.

• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு. +

• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு. +

• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு போலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக போலிசுக்கு சுதந்திரம் உண்டு. +

• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.

• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு +

சுதந்திரம் உண்டு. ஆனால் பலவருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.

• திபெத் அகதிகள் இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழீழ உறவுகளை மட்டும் முகாமில் அடைத்து வைக்க தமிழகஅரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.

#தமிழா

நீ அடிமையாக இருக்கிறாயா?? சுதந்திரமாக இருக்கிறாயா??

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling