1. டேனியின் அடக் கழுத.!
🙈🙉🙊
பஸ் அந்த மெய்ன் ரோட்டுத் திருப்பத்தில் இறக்கி விட்டது எங்களை.
நண்பர் வந்து அவர் வீட்டுக்கு கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்த நேரம்.
போய்க் கொண்டிருந்த கார் பஸ்களை இடைஞ்சல் செய்வது போல் சாலையில் இங்கும் அங்குமாக குறுக்கே துள்ளிக் குதித்து ஓடிக்
2. கொண்டிருந்தது ஒரு அழகான கழுதைக் குட்டி.
போகிற வருகிற கார் பைக்குகளெல்லாம் அந்த குட்டிக் கழுதைக்காக நின்று தயங்கிச் செல்வதை சந்தோஷமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் டேனி.
பார்த்துக் கொண்டிருந்த நானும் மெல்ல டேனியைச் சீண்டும் நோக்கில், “அந்தக் குட்டிக் கழுதைதான் டேனி.!’
3. என்றதும்...
“நான் ஒண்ணும் கழுதையில்ல...” என்று சிணுங்கினான் டேனி.
“அது டேனிதான். பாரு எப்படிக் குறும்பு பண்ணுதுனு.!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே... ஒரு பஸ் அந்தக் கழுதைக்குப் பக்கத்தில் பெரிதாய் ஹார்ன் செய்தது.
பஸ் ஹார்னின் அலறலில் அது பயந்து வாலைக் காலுக்கும்
4. மடக்கியபடி அலைபாய... எங்கிருந்தோ ஓடி வந்த அம்மா அந்தக் குட்டியின் அருகே ஓடி அது ரோட்டின் ஓரத்திற்கு வர உதவ ஆரம்பித்தது.
இதுதான் சான்ஸ் என்று நான் அவனை இன்னும் சீண்டலாம் என்று, “ஹைய்யா... டேனிக் கழுதை, பக்கத்துலயே அம்மாக் கழுதை.!” என்றேன்.
சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்க்க..
5. எதையோ யோசித்த டேனி என் முகத்தைப் பார்த்துச் சொன்னான்.
“அப்ப... இப்ப இன்னும் ஒரு கழுதை வரணுமே.!”
🤐🤐🤐
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
