1. தில்லுதுரயின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், இனிமேல் அவர் எதற்குமே கவலைப்படக் கூடாது... எதற்காவது கவலைப்பட்டால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்.
கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குடுக்க முடியாத நிலை. எப்படி கவலைப்படாமல் இருக்க
2. முடியும் என்று யோசித்தவர் கடைசியாய் ஒரு வழியையும் கண்டுபிடித்து விட்டார்.
ரெண்டொரு நாளில் பேப்பரில் விளம்பரம் கொடுத்து, இன்டர்வியூ செய்து, இவருக்காக கவலைப்படுவதற்கென்றே இப்போது ஒரு ஆளை மாதம் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.
அன்று
3. இரவு வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மனைவி கேட்டாள்.
"இப்பத்தான் உங்களைப் பாக்கவே நல்லாருக்கு. கவலைப்படறதுக்குனு ஒரு ஆளைப் போட்ட உடனே, பாக்க நல்ல தெளிவா இருக்கீங்க. கம்பெனி நல்லாப் போகுதா இப்ப.?"
கேட்ட மனைவியிடம் தில்லுதுர சொன்னார், "எங்க... முன்னைவிட நெலமை ரொம்ப
4. மோசமா இருக்கு. இதோ இந்த மாசம் கவலைப்படறதுக்குனு ஒருத்தன் வேலைக்குச் சேர்ந்தானே... அவனுக்கு சம்பளம் குடுக்கக் கூட காசு இல்ல.!"
சொன்ன தில்லுதுரயிடம் மனைவி வருத்தத்துடன் கேட்டார், "என்னங்க... அதுக்கு கொஞ்சம் கூட கவலையில்லாம சொல்றீங்க.?"
கேட்ட மனைவியை எந்த உணர்ச்சியும் இல்லாமல்
5. நிமிர்ந்து பார்த்த தில்லுதுர சொன்னார்.
"நான் ஏன் கவலைப்படணும்.? அதுக்கும் சேத்து அவன்தான கவலைப்படணும்.? அதுக்குத்தான அவனை வேலைக்கு வெச்சிருக்கு.!" என்றார்.
😂
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
