டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்

Sep 1, 2020, 6 tweets

1. திருவிளையாடல்

கொரண்டைன் சமயத்தில் டேனிக்கு இன்று புதிதாய் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து, ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க் (hard work, smart work) பற்றிச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன்.

ஏதாவது ஒரு உதாரணத்தோடு சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று யோசித்த

2. போது, வாட்சப்பில் அந்த வீடியோ வர, அந்தக் காட்சியையே அன்றைக்கு அதற்கான உதாரணம் ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தேன்.

திருவிளையாடலில் முருகனும், விநாயகரும் மாம்பழத்துக்காக சண்டை போடும் காட்சிதான் அந்த வீடியோவில் இருந்தது.

முருகனை ஹார்ட் வொர்க்கிற்கும், விநாயகரை ஸ்மார்ட்

3. வொர்க்கிற்கும் உதாரணமாய்க் காட்டி, ஹார்ட் வொர்க்கை விட ஸ்மார்ட் வொர்க் எவ்வளவு சுலபமாய், குறைந்த காலத்தில் வெற்றியைத் தரும் என்று சொல்லிக் கொடுப்பதுதான் திட்டம்.

ஹார்ட் வொர்க், ஸ்மார்ட் வொர்க் வித்தியாசம் எல்லாம் சொல்லி, எது சிறந்தது எப்படிச் சிறந்தது என்பதெல்லாம் விளக்கிச்

4. சொல்லிவிட்டு, வீடியோவையும் போட்டுக் காட்டினேன்.

வீடியோவைப் பார்க்கப் பார்க்க, குழந்தை முருகனை ஏமாற்றிவிட்டார்கள் என்ற ரூட்டில் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்குத் தயாராய், எதையாவது பதிலைச் சொல்ல வேண்டுமே என்று யோசித்துக் கொண்டே இருக்கையில், டேனி வீடியோவை முடித்துவிட்டு

5. நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

சரி.. ஆனது ஆச்சு. இனி அவன் என்ன கேட்கிறானோ, அதற்கு பதிலைச் சொல்வோம் என்று நினைத்த படியே, “இப்ப பார்த்த வீடியோல இருந்து என்ன தெரிஞ்சுகிட்ட.?” என்று கேட்டதும், யோசித்தபடியே

6. டேனி என்னைப் பார்த்துக் கேட்டான்.

“அப்ப மொத மொத வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய ஆரம்பிச்சது விநாயகர்தான். இல்லையாப்பா.?”

🙄🙄

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling