கிழிஞ்ச ரூவா நோட்டு!
#Banking
இந்த பிரச்சினைய சந்திக்காத மனுசனே இல்லை. வாழ்க்கைல ஏதாச்சும் ஒரு நாள் உங்ககிட்ட சிக்கி அத 'தள்ளிவிட' படாதபாடு பட்டு இருப்பீங்க. இந்த அனுபவம் எனக்கும் ஆகிருக்கு.
முதல்ல சட்டம் என்ன சொல்லுது பாக்கலாம்.
கிழிஞ்ச ரூவா நோட்டை எந்த வங்கி கிளையிலும்,
கணக்கு இருக்கோ இல்லியோ, ராசா 🤴 மாதிரி போயி மாத்திக்கலாம். இதை சொல்ற எனக்கே சிரிப்பு வருது. நீங்க? சொல்லவே வேணாம்.
இதில் வங்கிகளுக்கு உள்ள பிரச்னைய பத்தி பேச வேணாம். திசை மாறிடும். நாம கிழிஞ்ச ரூபா நோட்டை பத்தி பேசுவோம்.
இதை soiled மற்றும் mutilated னு 2 வகையா பிரிக்கலாம்.
Soiled Note னா அது லேசா, அதிகமா அல்லது இரண்டா கிழிஞ்சு இருக்கும். ரொம்ப அழுக்கா இருக்கும். நோட்டு எண் தெளிவா கிழியாம இருக்கும்.
Mutilated note னா 3 அல்லது மேற்பட்ட பாகங்களா கிழிஞ்சு இருக்கும். ஏதாவது ஒரு பகுதி இல்லாம கூட இருக்கலாம். நோட்டு எண்ணோட ஒரு பகுதி கிழிஞ்சு இருக்கலாம்
Soiled or mutilated நோட்டுகளை எல்லா வங்கி கிளைகள் (அ) ரிசர்வ் வங்கியில மாத்திக்கலாம்.
எவ்ளோ கிடைக்கும்?
நோட்டு லேசாவோ, 2 பகுதியாவோ கிழிஞ்சிருந்து, அதன் நம்பர் பாதிக்காம இருந்தா முழுசா வேற நோட்டு தருவாங்க.
நோட்டு 2க்கும் மேற்பட்ட துண்டா கிழிஞ்சா அங்க தான் இருக்கு ட்விஸ்டு! 🙊
கேஷியர் ஸ்கேல் எடுத்து அளப்பார். 😂😂😂
நீங்க ஒரு கிழிஞ்ச 500ரூவாயோட போறீங்க. அந்த நோட்டு மூணு துண்டா கிழிஞ்சுடுச்சு. ஏதாவது ஒரு துண்டு 80 சதுர செமீ இருந்தா மட்டுமே முழுசா கிடைக்கும். 40 - 79 சதுர செமீ இருந்தா பாதி கிடைக்கும். 40க்கு கீழ இருந்தா மாமா பிஸ்கோத்து தான்.
இதில்லாம எரிஞ்சு போன நோட்டு தனி வகை. அதை ரிசர்வ் வங்கில மட்டுமே பெற முடியும். அதற்கான வழிமுறைகள் மிகவும் கடினமானது.
எப்படி மாத்துறது?
1.உங்க ஊருல RBI இருக்கா? நேரா போங்க. கிழிஞ்சத குடுத்து மாத்திக்கோங்க. அஷ்டே.
2. RBi இல்லையா? கவலை இல்லை. உங்கள் கணக்கு இருக்குற வங்கியே சரணம்.
மேனேஜரை பாத்து வேண்டுகோள் வையுங்க. சில சமயம் மறுக்கலாம். RBIவிதியை மேற்க்கோள் காட்டி பேசுங்க. அதை செய்யுறது அவங்க கடமை. Soiled நோட் உடனே மாத்திக்கலாம். Mutilated நோட் அவங்க currency chestக்கு (எல்லா கிளைகளின் பணத்தை நிர்வகிக்கும் அலுவலகம்) அனுப்பி எவ்ளோனு தரனும்னு மதிப்பிடுவாங்க
என்ன செய்யனும் / செய்யக் கூடாது?
1.கிழிஞ்ச நோட்ட அடுத்தவன் கிட்ட நைஸா தள்ளிவிடாதீங்க
2.நெறய சேத்து வெச்சு கத்தையா கொண்டு போய் கேஷியரை தெறிக்கவிடாதீங்க
3. பேங்கல மறுத்தா சண்டை போடாம பொறுமைய விதிய சுட்டிக்காட்டி பேசுங்க
4. உங்க கணக்கு இருக்குற வங்கி கிளைக்கு போறது நல்லது.
5. Mutilated நோட்டா இருந்தா currency chest போய் மதிப்பீடு வரவரைக்கும் பொறுமையா இருங்க
6. இதை நாலு பேருக்கு சொல்லிக் குடுங்க.
@vijaypnpa_ips
@Captain_Mani72 @ArjunSaravanan5
@DrSenthil_MDRD
@selvachidambara @raavaneswaran
@karthikeyan581
@ChennaiViswa @anjiraithumbi
@menmozhi_G3
m.economictimes.com/industry/banki…
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
