என்னவோ போடா மாதவா Profile picture
【Banker】【#RoadSafety🚦🛣️】【Blood Donation】【Voice for voiceless】 【 இயற்கை ❤️】【 தமிழ்❤️】【Views are personal】【Likes/RTs are 🚫 endorsements】
Sep 14, 2021 4 tweets 1 min read
#peer_pressure

இனிய நண்பர்களே.

சமூக வலைத்தளங்களில் அறிந்தோ அறியாமலோ நாம் செய்யும் மிகப்பெரிய தவறு தான் அடுத்தவர் மீது peer pressure உருவாக்குவது.

இதை இரண்டு விதமாக செய்கிறோம்.

ஒன்று, நேரடியாக, "இதை இந்த வயதில் நீ செய்ய வேண்டும், இல்லாவிட்டால் போச்சு" என்பது போன்ற பதிவு. அடுத்து, மறைமுகமாக, நம்முடைய வசதி வாய்ப்பு, உண்ணும் உணவு பற்றி பதிவிடுவது.

இதில் என்ன ஆகிவிடப் போகிறது? நான் என் உழைப்பில் வாங்கியது தானே? அது எப்படி தவறாகும்? நமது எண்ணத்தில் தவறு இல்லை. ஆனால் அதில் மறைமுகமாக ஒரு விஷயம் இருக்கிறது.
Sep 13, 2021 5 tweets 1 min read
அமெரிக்க தொழிலதிபர் ஒரு சிறிய மெக்சிகன் மீனவ கிராமத்தில் தன்னுடைய விடுமுறையை கழித்துக் கொண்டு இருந்தார்.

அங்கே ஒரு மீனவர் சில கிலோ மீன்களுடன் கரை இறங்கி கொண்டு இருத்தார். அந்த மீனவரிடம் பேச்சு கொடுத்து தன் பணத்திமிரை காட்ட நினைத்தார் தொழிலதிபர். தொழிலதிபர்: இந்த மீன் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது

மீனவர்: சில மணி நேரம்

தொஅ: இன்னும் நீண்ட நேரம் மீன் பிடித்து நிறைய சம்பாதிக்கலாமே

மீ: பிறகு?

தொஅ: பெரிய படகு வாங்கலாம். இன்னும் நிறைய படகு வாங்கலாம். மீன்களே பதப்படுத்தி தரகர் இன்றி நீங்களே நேரடியாக விற்கலாம்.

மீ: பிறகு
Sep 12, 2021 4 tweets 1 min read
அன்பான பெற்றோர்களே

மருத்துவ படிப்பு மட்டுமே படிப்பல்ல. உங்களால் முடியாத உங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிப்பது மிகவும் தவறு. அது தான் அவர்களுக்கு அழுத்தத்தை வர வழைத்து, அது முடியாத போது தற்கொலை வரை போகிறது.

1/அ என்னுடைய பெற்றோர் என்னை மருத்துவர் ஆக்க விரும்பினர். அடிக்கடி அதை நினைவு படுத்துவர். ஆனால் எனக்கோ அறிவியலில் ஈடுபாடும் இல்லை. மதிப்பெண்ணும் வரவில்லை. கணிதம் தான் வந்தது. 10ம் வகுப்பில் கணிதத்தில் 100/100; அறிவியலில் 61/100

11ம் வகுப்பு அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டேன்.

2/அ
Jul 5, 2021 10 tweets 4 min read
91% மக்கள் பாட்டிலுக்கு மேல் டாஸ்மாக்கில் கட்டாயம் பணம் வாங்குவதாக கூறுகிறார்கள்

எதுக்காக இது பற்றி பதிவும் pollம் போட்டேன் என பலருக்கும் தோன்றலாம். அதற்கான விளக்கத்திற்கு முன் ஒரு விஷயம் பார்க்கலாம்.

கடைக்கு போய் ஒரு கிலோ சர்க்கரை வாங்குகிறீர்கள். 1/அ பாக்கெட் மேல் 45ரூபாய் போட்டுள்ளது. கடைக்காரர் பில் தராமல் 50 ரூபாய் கேட்கிறார். நாம் தருவோமா? மாட்டோம். சண்டை போடுவோம். பில் கேட்போம். வேறு கடைக்கு சென்று 45க்கு வாங்குவோம். அந்த கடைக்காரரின் அட்டூழியத்தை நாலு பேருக்கு சொல்லி அங்கு ஏமாறாமல் தடுப்போம். 2/அ
Jan 1, 2021 7 tweets 2 min read
#SIP #kyc #mutualfunds

SIP பற்றி மக்கள் கேட்டுக் கொண்டதால் ஒரு சிறு இழை.

பரஸ்பரநிதியில் (mutual funds) ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் முதலீடு செய்வதே systematic investment plan (SIP)

ஏன் sip?

சிறு, குறு முதலீட்டாளருக்கு ஏற்றது

சந்தையின் ஏற்ற இறக்கங்களை தாங்கும் /~ மாதாமாதம் சேமிக்கும் பழக்கத்தை உறுதிபடுத்தும்

சந்தையின் போக்கை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டாம்.

எப்படி முதலீடு செய்வது?

1. வங்கியின் மொபைல் ஆப் / நெட் பேங்கிங்
2. நேரடியாக பரஸ்பர நிதியிடம்

இதற்கு உங்கள் kyc (know your customer) மிக முக்கியம். /~
Dec 30, 2020 6 tweets 3 min read
#WA #forward @PraveenIFShere

*Corona Virus Submitted its ‘Annual Performance Appraisal ’ for 2020 for promotion, it reads like this:

1. Responsible for Global Digital Transformation and fast-tracking

2.Reduction of Global CO2 emission

3.Five million jobs "restructuring" 4.Global Hygiene initiatives:
Ensured 100% compliance on washing hands... leading to collateral reduction of other communicable diseases.

5. Made global industry shift to WFH - saved exposure and costs.
Nov 7, 2020 11 tweets 3 min read
#Banking #MSME #loans

வியாபார கடன்களை இருவகைப்படும்

1. Fund based - பணமாக தருவது
2. Non-fund based - உத்திரவாதமாக தருவது

Fund based:
இது மேலும் இருவகைப்படும்

1. Cash credit / Overdraft
2. Term loan

CC / OD: இது உங்கள் தொழிலின் அன்றாட தேவைகளை (working capital) பூர்த்தி செய்ய வழங்கப்படும். உங்கள் முதலீடானது ஸ்டாக், வர வேண்டிய கடன் (விற்பனைக்கு பிறகு) போன்றவையால் முடங்கி இருக்கும். அதிலிருந்து உங்கள் வியாபாரத்தை சரிவின்றி நடத்த CC / OD பயன்படும். பொதுவாக உங்கள் ஆண்டு டர்னோவரில் 20% ஆக லிமிட் இருக்கும். இதை வைத்து மூலப்பொருள் வாங்க, சம்பளம் கொடுக்க,
Oct 8, 2020 13 tweets 3 min read
@wiredmau5 thank you for allowing me to translate / post his tweet.

@ArjunSaravanan5 @aravindramanw7 for suggesting me to post this in Tamil.

#awareness #health #insurance #finance

குறிப்பு: இந்த பதிவு ஒரு புரிதலுக்கு மட்டுமே. யாரும் இதன் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது. தகவல்களை வேறு தளங்களில் உங்கள் திருப்திக்கு சரி பார்க்கவும்.

தனிநபர் மருத்துவ காப்பீடு பற்றி அறிய வேண்டிய தகவல்கள்.

(இதை அரசுக் காப்பீடு திட்டத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)
Oct 6, 2020 13 tweets 3 min read
#roadaccident #experience

காவல்நிலைய அனுபவம்

கடந்த சனி அன்று இரவு 8 மணிக்கு ஒரு நல்லவர் எனது காரின் பின்புற பம்பரை சிதைக்க, நான் 100ஐ அழைக்க, ஏட்டைய்யா திருப்பி என்னை அழைத்தார். சம்பவத்தை விவரித்தேன். யாருக்கும் எந்தவித காயம் இல்லை. எனவே spot photo எடுத்து விட்டு கிளம்புங்கள். நாளை மாலை 3 மணிக்கு ஸ்டேஷன் வாருங்கள் என கூறினார்.
நெல்லையில் ஆய்வாளராக இருக்கும் நண்பரை அழைத்து process சரியா என cross check செய்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினேன்

ஞாயிறு மாலை மீண்டும் ஏட்டைய்யாவை அழைத்தேன். திங்கள் காலை 11 மணிக்கு வரச் சொன்னார்.
Oct 4, 2020 6 tweets 1 min read
#இன்றுஒருதகவல்

உங்களிடன் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்தால் வட்டி குறைவாகவே கிட்டும். டெபாசிட் போட்டால் அவசரத்திற்கு உடைக்க முடியாது. முதிர்வுக்கு முன்பு எடுத்தால் சில சமயம் penalty வரும்.

என்ன செய்யலாம்? Flexi-deposit கணக்கை துவங்கி அதில் வையுங்கள். குறிப்பிட்ட இருப்பிற்கு மேல் (எ.கா. ௹10,000) டெபாசிட்டாக மாறி விடும். வட்டியும் சேமிப்புகணக்கு விட அதிகம் கிடைக்கும். 24×7 உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (Axis, Hdfc, Icici) இந்த வசதியை வழங்குகிறது.
Oct 3, 2020 12 tweets 2 min read
#banking

வங்கி சம்பந்தப்பட்ட பதிவுகள் என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. இது நான் பணிபுரியும் வங்கி / வேறா எந்த ஒரு நிறுவனத்தின் கருத்தோ அல்ல. இதை எந்தவித சட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.

முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்

👍🏼👍🏼👍🏼 புதிய தொழிலுக்கு வங்கிக் கடன் - Project Finance

பலருக்கு தொழில் துவங்கி சொந்த காலில் நிற்க ஆசை, வேட்கை, கனவு.. ஆனால் எல்லோரும் அது நடப்பதில்லை. அவர்கள் சொல்லும் முதல் குறை 'எந்த பேங்க் கடன் தரான்'

உங்கள் project உங்களுக்கு தான் கனவு. மற்றவருக்கு அது just ஒரு project தான்
Oct 3, 2020 4 tweets 5 min read
#இன்றுஒருதகவல்

நம்ம ஊர் ஆதார்அட்டைக்கு expirydate கிடையாது. வளைகுடா நாடுகளில் குடிமக்கள் அட்டையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை renewal செய்ய வேண்டும்

உங்களின் வங்கிகணக்கு, சொத்து, பாஸ்போர்ட் முதல் கார் நம்பர்பிளேட் வரை எல்லாம் அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். சாலை விதிமீறல் செய்தால் தானாகவே உங்கள் அட்டையில் அபராதம் சேர்க்கப்படும். உங்களுக்கு notice ஏதும் வராது. நீங்கள் அவ்வப்போது onlineல் பார்த்து, அபராதத்தை கட்டிக் கொள்ள வேண்டும்.

உங்களின் குடிமக்கள் அட்டை expiry ஆகிவிட்டால் வங்கி கணக்கு முதல் பாஸ்போர்ட் வரை முடங்கி விடும்.
Oct 2, 2020 4 tweets 3 min read
கிராம சபையின் அதிகாரம்!

நாங்கள் செய்தது.

வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்தது. முதலில் காவல்துறை மூலம் பேரிக்கேட் வேத்தோம். அது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. பின்னர் கிராம சபையில் தீர்மானம் போட்டு, ஆட்சியரிடம் அளித்து, குறை தீர்க்கும் நாளில் விடுமுறை எடுத்து, ImageImage கேள்விகள் கேட்டு, விடாமல் பின்தொடர்ந்து ஓராண்டு கழித்து போடப்பட்டது. இப்போது மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கிறார்கள்.

மக்களின் அதிகாரத்தை உணர்ந்த தருணம்.

இத்தகைய கிராம சபையை முடக்குவது அரசின் பொறுப்பற்ற செயல்.
Sep 30, 2020 5 tweets 1 min read
இந்தியாவின் பெரும்பகுதியை சுற்றி இருக்கிறேன். U.P. போன்ற ஒரு தரம்கெட்ட மாநிலத்தை கண்டதில்லை.

2017 பிப்ரவரியில் 6வாரம் deputation முறையில் கான்பூரில் பணி.

*ஊரே குப்பைக்கூடைக்குள் இருந்தது போன்ற தோற்றம்.

*பெயரளவில் பொதுப் போக்குவரத்து.

*காவல்துறையை வாகனஓட்டிகள் மதிப்பதேயில்லை *சுகாதாரம் இன்னும் மோசம். நான் சென்றது பனிக்காலம். தோலில் infection வந்து இரண்டு தோல் மருத்துவரை பார்த்தும் முழுதும் குணமாகவில்லை.

*மிக சாதரணமாக துப்பாக்கி கலாச்சாரம்.

* தொழிற்சாலையில் மின் திருட்டு எல்லாம் ஒரு விஷயமே இல்லை.

*6வாரம் ஓட்டல் புக் செய்தும் 3வது வாரம் காலி செய்ய..
Sep 27, 2020 4 tweets 9 min read
நட்புகளே, மனித குலம் தன் ஒற்றுமையை காட்டும் நேரம் வந்து விட்டது.

நான் அறிந்த நண்பர்கள் பலருக்கு சமீப நாட்களாக தொற்று வந்துள்ளது. நாம் அனைவரும் விழிப்புடன் இருந்து மற்றவருக்கும் விழிப்புணர்வு தர வேண்டும்.

நம்மால் யாருக்கும் தொற்று பரவக்கூடாது என சபதம் ஏற்ப்போம். கட்டாயம் மாஸ்க் அணிவோம்.

கைகளை சானிடைசரால் / சோப்பால் சுத்தப்படுத்துவோம்.

தனிநபர் இடைவெளியை கடைபிடிப்போம்

அறிகுறிகள் தென்பட்டால் தனிமைபடுத்திக் கொண்டு முறையான சிகிச்சை எடுப்போம்.

@DrTRM @DrSenthil_MDRD @iam_DrAjju @SanjaiGandhi @alexpaulmenon @ArjunSaravanan5 @ChennaiViswa
Sep 26, 2020 11 tweets 2 min read
சென்ற வார தொடர்ச்சி
1.எதற்கு கடன் தேவை?
2.வாங்கிய கடனை எப்படி அடைப்பேன்?

இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது?

நீங்கள் சில ஆண்டுகளாக தொழில் செய்பவர்களாக இருந்தால் கடந்த 3 ஆண்டுகள் பேலன்ஷீட் வைத்து உங்கள் தொழிலின் நிதிநிலையைப் பற்றி வங்கி அறிந்துகொள்ளும் பேலன்ஷீட் இல் என்ன பார்ப்பார்கள்?

1. உங்கள் விற்பனை வருடாவருடம் வளர்க்கிறதா?
(விற்பனை தேய்ந்து கொண்டே போனால் கடன் பெறும் வாய்ப்பு குறைவு)

2.லாபம் ஈட்டுகிறதா?
(நட்டத்தில் உள்ள தொழிலுக்கு கடன் கிடையாது)

3.முறையாக அரசுக்கு வருமானவரி மற்றும் PF/ESI/GST செலுத்தப்படுகிறதா?
Sep 20, 2020 10 tweets 4 min read
நண்பர்களே, சென்ற வாரம் அரசின் திட்டங்களில் கடன் பெறுவது பற்றி அறிந்து கொண்டோம். இந்த வாரம் வங்கியில் தொழில் செய்ய கடன் பெறுவது எப்படி என பார்க்கலாம்.

இதற்கு பின்வரும் 2 கேள்விகளுக்கும் அதன் துணைக்கேள்விகளுக்கும் சரியான பதில் இருந்தால் வங்கியில் கடன் வாங்குவது சுலபம் 1. கடன் வாங்கி அந்த பணத்தை என்ன செய்வீர்கள்? (End use of funds)
2.அந்த பணத்தை எப்படி திருப்பி அடைப்பீர்கள்? (source of repayment)

இந்த கேள்விகள் பார்க்க மிக சுலபமாக தெரியும். ஆனால் உங்கள் பதிலானது நிறைய துணைக்கேள்விகளை கேட்க வைக்கும். அந்த பதிலில் இருந்தே உங்களுக்கு கடன் தருவது
Sep 20, 2020 4 tweets 7 min read
#இன்றுஒருதகவல்

சாலையில் நடப்பவர்கள், குறிப்பாக பாதை யாத்திரை செல்பவர்கள், சாலையின் வலது புறத்தில் நடக்க வேண்டும்

வலதுபுறம் நடப்பதால் 2 பயன்கள்:

1.உங்களை பின்னால் வாகனங்கள் வந்து மோதுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு
2.எதிரே வரும் வாகனங்களை கவனித்து, ஒதுங்கி, பாதுகாப்பாக செல்லலாம் #சாலைபாதுகாப்பு #saferoads
@ArjunSaravanan5 @vijaypnpa_ips @aravindhanIPS @tnpoliceoffl @Captain_Mani72 @ChennaiViswa @selvachidambara @raavaneswaran @alexpaulmenon @5Murugesan
Sep 18, 2020 7 tweets 1 min read
கூட்டுறவு வங்கிகளை RBIயின் கண்காணிப்பில் கொண்டுவர சட்ட திருத்தம்.

இதை பலர் எதிர்க்கிறார்கள். எனவே சற்று விளக்கமாக பார்ப்போம்.

தற்போதைய நிலை: கூட்டுறவு வங்கிகள் (including multi-state cooperative banks) மாநில அரசு கட்டுப்பாட்டில் வரும். அதன் செயல்களில் RBI தலையிடாது. முறையான தணிக்கை (external audit / RBI audit) இல்லை. டெபாசிட்டுக்கு RBI உத்திரவாதம் இல்லை.

புதிய சட்ட வரைவு ன: கூட்டுறவு வங்கி மாநில அரசின் கட்டுப்பாட்டில் தொடரும். கூட்டுறவு பதிவாளரின் அதிகாரம் குறையாது. ஆனால் அவர்களின் செயல்பாடுகளை (operations), RBI, மற்ற வணிக வங்கிகளைப் போலவே
Sep 12, 2020 24 tweets 8 min read
வணக்கம் நண்பர்களே.

தொழில் செய்ய கடன் பெறுவது பற்றி இனி வரும் சில வாரங்கள் பதிவிடுகிறேன். முன்பு கூறியது போல, இந்த பதிவு, எந்த ஒரு வங்கியின் / அமைப்பின் அதிகாரபூர்வ தகவல் கிடையாது. எனக்கு தெரிந்த, நான் பெற்ற அனுபவங்களை யாருக்காவது பயன்படும் என்ற ஒரே நோக்கோடு பகிர்கிறேன். இந்த பதிவை எந்தவித சட்ட நடைமுறைகளுக்கும் பயன்படுத்த முடியாது என அறியுங்கள்

கடன்களை இரு வகையாக பிரிக்கலாம். அரசின் திட்டங்களில் கடன் பெறுவது ஒருவகை. வங்கிகளில் நேரடியாக கடன் பெறுவது ஒருவகை. சுயதொழில் செய்ய உதவி தேவை படுவோருக்கு அரசின் பல அமைப்புகள்/ திட்டங்கள் பக்கபலமாக உள்ளன.
Sep 8, 2020 7 tweets 2 min read
#பயணம்

உங்களுக்கு பிடித்த பயணத்தை quote பண்ணுங்க நண்பர்களே

சேலம்-கோவா (பெங்களூர், தார்வாட் வழியாக) 800 கீமி பொலீரோவில் @sathyacheyyarb1 @Sivaraja1 இவர்களுடன் நான் செய்த nonstop self drive

இரவு 1 மணிக்கு டீசல் மிக் குறைந்து தார்வாட் ஊருக்குள் அலைந்த நினைவுகள் இன்றும் பசுமை 😂😂 ImageImage ஆவி போல் கண்ணாடி துடைக்கும் கரங்கள் அடியேனுடையது.

தும்கூர் அருகே இரவு உணவுக்கு பின் தம்பி சிவா கிளிக்கியது.