#பயணம்
உங்களுக்கு பிடித்த பயணத்தை quote பண்ணுங்க நண்பர்களே
சேலம்-கோவா (பெங்களூர், தார்வாட் வழியாக) 800 கீமி பொலீரோவில் @sathyacheyyarb1 @Sivaraja1 இவர்களுடன் நான் செய்த nonstop self drive
இரவு 1 மணிக்கு டீசல் மிக் குறைந்து தார்வாட் ஊருக்குள் அலைந்த நினைவுகள் இன்றும் பசுமை 😂😂
ஆவி போல் கண்ணாடி துடைக்கும் கரங்கள் அடியேனுடையது.
தும்கூர் அருகே இரவு உணவுக்கு பின் தம்பி சிவா கிளிக்கியது.
காலை 11 மணிக்கு துவங்கிய பயணம். தர்மபுரி புவிதம் பள்ளிக்கு எழுதுபொருட்கள் வழங்கிவிட்டு அங்கேயே மதியஉணவு முடித்து நைஸ் ரோடு வழியே நெலமங்களா சேர 6 மணி. தம்பி சிவாவை அங்கே பிக் செய்து nonstop driving. (தும்கூர் தாண்டி இரவு உணவு மட்டும்) அப்பவே சத்யா அண்ணன் டீசல போடுற வெண்ண என்றார்
சற்று தெனாவட்டாக இருந்துவிட்டேன். ஹாவேரி தாண்டி Low fuel. ஹீப்ளி பைபாசிலும் கடை இல்லை. தார்வாட் ஊருக்குள் நள்ளிரவில் அலைந்தோம். நம்மூர் ரிக் வண்டிக்காரரிடம் கேட்டோம். மறுத்துவிட்டார். வேறுவழியின்றி ரிலையன்ஸ் பங்கில் தூங்கிய அந்த தம்பியை எழுப்பி டீசல் நிரப்பி
ராம்நகராவில் டீ குடித்து Ponda வழியே Madgoan சேர்ந்த பொழுது காலை 5.
இப்படி ஒரு வெறித்தனமாக ஓட்டியதில்லை.
சில மணி நேர தூக்கம். 11 மணிக்கு எழுந்து ஊர சுத்த கிளம்பியாச்சு.
Learning: தமிழகத்தை போல் தேசிய நெடுஞ்சாலையில் சிறந்த அடிப்படை வசதிகள் பெற்ற மாநிலம் ஏதும் இல்லை. உணவகம், பெட்ரோல் பங்க், டீ கடை, பஞ்சர் கடை, காவல்துறை ரோந்து என எல்லாம் top class.
Dharwad நகரை 30நிமிடம் சுற்றியும் ஒரு ரோந்துவாகனம் கூட கண்ணில்படவில்லை.
தமிழகம் முன்னோடி மாநிலமே
தார்வாடில் ஒரு மணி வாக்கில் டீசல் அடித்த பிறகு நண்பர்கள் அசதி ஆகிய விட்டனர். இங்கே ரூம் போட்டுட்டு காலைல போலம்டா- இது சத்யா அண்ணா. நான் மிக தெளிவாக இருந்ததால் பயணம் தொடர்ந்தது.
After reaching Goa, me like:
ஏதோ கோவா road trip போகனும்னு கேட்டீங்களாம்மாம்!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
