33 வயது இளைஞனின் எழுச்சி பயணம் ஜாதிக் கும்பலால் வெட்டி தடுக்கப்பட்ட நாள் இன்று..
தனது 19வயதில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட #இரட்டை_டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த முறையை அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் 👇
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
தன் சமூக மக்களின் மீதான ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார்."ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்"என்ற அமைப்பைத் தொடங்கியவர்..
1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் 👇
மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வந்தவர்..
1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆதிக்க சக்திகளிடமிருந்து தனது சமூகம் வெற்றிபெற கடுமையாக உழைத்து தனது பலத்தை நிருப்பித்தவர்.
1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். 👇
இடுகாட்டுக்கு கொண்டு செல்ல விடாமல் ஆதிக்கசாதியினர் எதிர்ப்புதெரிவத்தை முறியத்தவர்..
அவர் தான் #தியாகி_இமானுவேல்_சேகரன்..!!
ஒடுக்கபட்டோரின் விடியலுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தால் இவருக்கு மக்களிடம் ஏற்பட்ட எழுச்சி பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது.
👇
இதை அடுத்து, அங்கே ஆதிக்க சாதி வெறி கூட்டமாக இருந்த #முத்துராரமலிங்க_தேவரின்_கும்பலுக்கும்,,போராளி இம்மானுவேலுக்கும் உரசல் ஏற்படுகிறது..
👇
அதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு இரவு 9 மணி அளவில் வீடு நோக்கி திரும்பிய அவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது..
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வையே தியாகம் செய்த*#தியாகி_இமானுவேல்_சேகரன்*
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
