G. Sundarrajan Profile picture
Climate activist, environmentalist, Social activist, Entrepreneur, books, travel. views are personal #SayNo2ParanthurAirport #StopAdaniSavePulicat

Sep 11, 2020, 6 tweets

உள்ளூர் அளவிலாகட்டும் இல்லை உலக அளவிலாகட்டும் இன்று நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சிக்கல்களைப் பட்டியலிடத் தொடங்கினால் பல்லாயிரம் பக்கங்கள் தேவைப்படும்.ஆனால் நாம் இன்று எதிர்கொண்டிருக்கும் இந்த சூழல் அச்சுறுத்தல்களுக்கும் சமூகப் பொருளாதார அவலங்களுக்கும் ஒற்றைப்பெரும் காரணமாகப்

பின்னிருப்பது இன்றைய நவீனப் பொருளாதார உற்பத்தி முறைதான். இந்த உற்பத்தி முறையையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் பற்றிப் பேசாமல் பெரும்பாலான நேரங்களில் நாம் ஒவ்வொரு சூழல் பிரச்சினைகளையும் தனித்தனியாக அணுகிப் போராடிச் சோர்ந்து போகிறோம். தீர்வுகளை நோக்கி நகரவேண்டுமாயின் நாம் எங்கு

தொடங்கி வேண்டும்? எது நாம் வேண்டும் மாற்றத்தைத் தரும்?
உலகின் மகத்தான மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் அதை நிகழ்த்திக் காட்டியோரின் பெரும் கனவு ஒன்று மறைந்திருக்கும். பெரும் சமூக அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்த “எனக்குள் ஒரு கனவு இருக்கிறது” என்ற மார்ட்டின் லூத்தர் கிங்கின்

புகழ்பெற்ற முழக்கம் போல ‘பசுமையான - பல்லுயிரின வளமிக்க - சூழல் நலனுடைய’ புவியை மறுக்கட்டமைப்புச் செய்ய இன்று நமக்கு ஒரு கனவு தேவைப்படுகிறது.
நாம் கனவு காணும் பூமி எப்படி இருக்கும்? அதன் அரசு எப்படி இயங்க வேண்டும்? அதன் உற்பத்தி முறை எப்படி இருக்கும்? நம் அரசியல் சாசன அடிப்படையில்

அடிப்படையில் அந்த கனவு தேசத்தைக் கட்டமைக்க வாய்ப்புகள் என்ன? குடிமக்களாகிய நாம் எப்படி அதை நோக்கி நகர்வது? அரசை எப்படி நகர்த்துவது? எனப் பல்வேறு கேள்விகள் குறித்து நம்மோடு பேசுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பாட்டாளர் வழ. வெற்றிச்செல்வன்.

பூவுலகு உரையாடல்கள்
இணைய வழி கருத்தரங்கம்

முரண்களை நோக்கி நகரும் மனித சமூகம்* - வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள்,

வரும் சனிக்கிழமை 12.10.2020, மாலை 7 மணி.

Zoom I'd : 965 0931 7810

zoom.us/j/96509317810

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling