ஶ்ரவணம் கீர்தநம் சைவ ஸ்மரணம் ஸேவநம் ததா|
தாஸ்யம் ததார்சநம் தேவி வந்தநம் மம ஸர்வதா |
ஸக்யமாத்மாத்மார்பணம் சேதி நவாங்காதி விதுர்புதா||
- சிவபுராணம்
பக்திக்கு ஒன்பது அங்கங்கள் உண்டு:
சிரவணம்(கேட்டல்)
நிலையான ஒரு ஆசனத்தில் அமர்ந்து, மனம்-மொழி-வாக்குகளால் ஈசனின் திருவிளையாடல் திருக்கதைகளை மரியாதையுடன் திரும்பத் திரும்பக் கேட்பது.
கீர்த்தனம்(பாடிப்பரவுதல்)
ஈசனின் திருவிளையாடல்களை, தெய்வீகமானது என்னும் எண்ணத்துடன் இதயத்தில் இருத்தி, வாயார உரக்கப்பாடி மகிழ்வது.
ஸ்மரணம்(நினைத்தல்)
காலத்திற்கு உட்படாது நிற்க்கும் ஈசனை, எங்கும் நீக்கமற நிறைந்தவன் என்னும் திட உறுதியோடு, இவ்வுலகில் பயமின்றி இருத்தலே ஆகும்.
ஸேவனம்(தொண்டு புரிதல்)
அருணோதயம் முதல் இறைவனுக்குகந்த வேளைகளில், புலனடக்கி இதயம் கனிந்து செய்யப்படும் பணிவிடைகளே ஆகும்.
தாஸ்யம்(ஆட்படுதல்)
இறைவனை தன் இதயத்தில் இருத்தி, அவரது அன்பைப் பெறுதலே ஆகும்.
அர்ச்சனம்
சாஸ்த்திரம் கூறிய விதிமுறைத் தவறாது அர்க்யம்,பாத்யம்,ஆசமணீயம் ஆகிய 16 வகை உபசாரங்கள் செய்து இறைவனை வழிபடுதல்.
வந்தனம்(தொழுதடி வணங்குதல்)
இறைவனது திருநாமங்களை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, தனது எட்டு அங்கங்களும் தரையில் படிந்திருக்க வீழ்ந்து வணங்குதல்.
ஸக்யம்(தோழமை)
இறைவனது செயல் நன்மையோ தீமையோ, எதுவானாலும் அது நமது நன்மைக்கே என்னும் உறுதியான நம்பிக்கை வைத்தலே ஆகும்.
ஆத்மசமர்ப்பணம்(தன்னையே இறைவனிடம் ஒப்படைப்பது)
நமது என்று கூறப்படும் எதுவாயினும், இறைவனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு, தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாது, தன் வாழ்வைப்பற்றி சிந்தனையற்று இருப்பதே ஆகும்.
திருச்சிற்றம்பலம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.