Shruthi R writes...
*
Been in NEET UG academic coordination and tutoring for three brief years.. Have trained 200+ students for 2017-19 NEET EXAMS.
நீட் டக்குன்னு படிச்சு டக்குன்னு பாஸ் பண்ண முடியாது.. இதுல சிபிஎஸ்இ, தமிழ் நாட்டு பாடத்திட்டம் ன்னு லாம் இல்ல..
எதைப் படிச்சாலும் நீட் குழந்தைகளுக்கு கஷ்டமா தான் இருக்கும். It's a kinda practice. திரும்பத் திரும்ப படிச்சிகிட்டு பரீட்சை எழுதிக் கொண்டே இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்.
அதுக்கு குறைந்தபட்சம் 2-3 வருஷம் வீணாக்க நாமளே நம்ம தயார் படுத்திக்கணும்..
2-3 வருஷம் என்பது ஒரு basic degreeக்கு நாம் செலவிடும் காலம்.
காசே இருந்தாலும் அத்தனை காலத்தை
Trainingல தொலைப்பதென்பதே மனச் சோர்வான வேலை. இன்னும் பணத்திற்கு வழி இல்லாத குடும்பங்களை நினைத்து பாருங்கள்..
சரி பிச்சை புகினும் கற்கை நன்றே என்று படித்தாலும்,
அப்படியும் கண்டிப்பா வெற்றி பெறுவோமா என்று கேட்டா, டவுட் தான் பாஸ்...
ஒருவேளை உங்க அப்பா அம்மா டாக்டரா இருந்து நீங்கள் அவர்களைப் பார்த்து வளர்ந்து medical terms பற்றிய புரிதல் கொண்டு இருந்தால் நீட்டை அணுகுவது
சுலபம்.. மீதம் இயற்பியலும் வேதியியலும் தான்.
அதில் 80-90% கனக்கு தான். அதை க்ராக் செய்ய பயிற்சி வகுப்புகள் கற்று தந்து விடும்.
Clearly, Neet encourage the pupil of doctors and laurates to enroll in medicine. முதல் தலைமுறை பட்டதாரி எல்லாம் மருத்துவத்தை மறந்துவிட வேண்டும்..
Neet ideologyஏ அது தான்..
இவ்வளவு கேவலமான merit வெறிக்கொண்ட பாடத்திட்டத்தில் நாம் குழந்தைகளை படிக்க வைக்கிறோம் என்பதே வெட்கக்கேடு.
அதை ஆதரிக்கிறோம் பேர்வழிக்கெல்லாம் ஒரே கேள்விதான்!
சோறு தானே திங்குற?
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
