நான் ஏன் திமுகவை எந்த நிபந்தனையில்லாமல் ஆதரிக்கிறேன்?
நேற்று ஒருநாளை எடுத்துக்கொள்வோம். உலக வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு திணிக்கப்பட்ட அநீதியான தேர்வினால், மூன்று பிஞ்சுகள் கொலை செய்யப்பட்ட நாள். தமிழ்நாட்டு சமூகநீதி கல்வியால் பயன்பெற்ற எந்த ஒரு தமிழனும் பதறியதை பார்த்தோம்.
இதை மனநிலையை அப்படியே பிரதிபலித்தவர்கள் திமுகவின் தலைவர்களாக இருந்தார்கள். அவர்களின் குரல்களில் தெரிந்த பதற்றம், அறச்சீற்றம், ஆற்றாமையில் உண்மை இருந்தது. சமூக அடுக்கில் எங்கே இருந்தாலும், அனைத்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்து சிந்திக்கும் கட்சியாக திமுக இருக்கிறது.
அண்ணா-பெரியார் விதைத்த சிந்தனை மரபு அப்படியே இருக்கிறது. அதனால் தான் கலைஞர் சொன்ன அதே “எளியமக்களுக்கு நடக்கும் அநீதியை”, இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து தயாநிதி மாறன், பிடிஆர் பழனிவேல் ராஜன் என அனைவரும் வெளிப்படுத்தினார்கள்.
திமுக எம்.பி திருச்சி சிவா, மாணவர்களுக்கு நெகிழ்ச்சியான ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். அனைத்தும் கீழே இருக்கிறது.
இன்னொரு பக்கம், நீட் என்ற சொல்லை அப்படியே விட்டுவிட்டு பாஜக-அதிமுக கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். பச்சைத் துரோகிகள்!
திமுக போன்ற ஒரு கட்டமைப்பு கொண்ட கட்சி, திமுக போன்ற கொள்கை உடைய கட்சி, திமுக போன்ற தலைவர்கள் உள்ள கட்சி வேறு எங்கு உள்ளது என்றுத்தெரியவில்லை. இனி இப்படி இன்னொன்று தமிழ்நாட்டில் உருவாகுமா என்றும் தெரியவில்லை.
திமுகவின் அருமையை இன்னும் உணராமல், துரோகிகளின் சூழ்ச்சிக்கு பழியாகி திராவிடத்தை எதிர்க்கிறோம், திமுகவை எதிர்க்கிறோம் என்று மாயையில் சிக்கியிருக்கும் தமிழர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
எத்தனை நிறைகள் இருந்தாலும், குறைகளை தேடித்தேடி திமுகவை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருக்கட்டும். அந்த விமர்சனத்தை சட்டைசெய்யாமல், கேட்டு, சரிசெய்ய முனையும் ஜனநாயகம் கொண்ட கட்சியாகவும் திமுகவே இருக்கிறது.
திமுக மீண்டும் ஆட்சியை பிடிப்பது தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு முக்கியமானது. இல்லாவிட்டால், தமிழ்நாட்டை செங்கல் செங்கலாக பிரித்துவிற்க துரோகிகள் காத்திருக்கிறார்கள். சிந்திப்போம். செயல் படுவோம்!
- ராஜராஜன் ஆர்.ஜெ
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
