Rajarajan RJ Profile picture
A life long learner!
Vasan MSV Profile picture G Selvadoss JA Profile picture 2 subscribed
Feb 18, 2022 11 tweets 2 min read
பெரியார் ரெட்டிகள், நாயுடுகளுக்கு ஆதரவாக இருந்தார்! - அரங்க குணசேகரன், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு!

பெரியபுராணம் சனாதனத்தை பரப்புகிறது என்று பெரியார் கொளுத்திய போது, பெரியார் வைணவர், அதனால் தான் பெரியபுராணத்தை எதிர்க்கிறார் என்று வாய்கூசாமல் பேசியவர்கள் தான் ++ இன்றைய தமிழ்த் தேசிய சைவர்களுக்கான முன்னோடிகள். பெரியார் இராமயண மாகாபாரதத்தையும் கிழித்து தொங்கவிட்டார். குறிப்பாக வட இந்திய சனாதன குப்பையை தமிழுக்கு கொண்டு வந்த கம்பனை தமிழின விரோதி என்றே திராவிட இயக்கம் சொல்லியது.
++
Feb 17, 2022 4 tweets 1 min read
கேள்வி: உங்கள் மூளைக்குள் இந்துத்துவம் இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?

பதில்: இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று ஒரு மீம் பார்க்கிறீர்கள். நீங்கள், அதை பார்த்ததும் , "ஆகா சூப்பர்" என்று அதை ஷேர் செய்கிறீர்கள்.++ உங்கள் பதிவில், உங்கள் நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் வந்து இடஒதுக்கீடு ஏன் தேவை என்று விளக்கம் தருகிறார். நீங்களும் அவர் என்ன சாதியாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அந்த நேரத்தில்,++
Feb 17, 2022 4 tweets 1 min read
பேரறிஞர் அண்ணா நினைவு சிறுகதைப் போட்டிக்கு,சிறுகதைகள் வந்த வண்ணம் இருக்கிறது.மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் நண்பர்களே.Keep them coming.Another 3 days to go.
விரிவான செய்தி:திராவிட வாசிப்பு “பேரறிஞர் அண்ணா”நினைவு சிறுகதை போட்டிக்கு,இதுவரை சிறுகதைகளை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி.++ சிறுகதைகளை அனுப்ப இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. அனைவரையும் எழுத அழைக்கிறோம். விரிவான செய்தி கீழே..
—-
பிப்ரவரி மாதம், திராவிட வாசிப்பு இதழுக்காக, “பேரறிஞர் அண்ணா நினைவு சிறுகதை போட்டி” நடக்கிறது.சிறுகதைகளை எழுத அழைக்கிறோம்!
1) சிறுகதைகள் திராவிட வாசிப்பு மின்னிதழில் வெளியாகும்.++
Feb 9, 2022 7 tweets 1 min read
எங்க வீட்டில் மாமா - அத்தை ன்னு அறிமுகம் செய்யப்பட்டவர்களில் பலர் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களே!

வேளாங்கண்ணி திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அப்பா, ரெட்கிராஸ் சார்பில் சேவை செய்திருக்கிறார்.

வேளாங்கண்ணி செல்லும் போதெல்லாம் நாகூர் தர்கா செல்லாமல் நாங்கள் திரும்பியதில்லை!
++ அப்பாவின் பிறந்தநாளுக்கு அவர் அழைக்கும் பல நண்பர்களில் அனைத்து மதத்தவர்களும் இருப்பார்கள். தினமும் திருநீர் இடாமல் வெளியே செல்லாத அப்பா, தன் பிறந்தநாளுக்கு பாஸ்டரை வைத்து ஜெபம் செய்வார்!

ரம்ஜான், பக்ரீத்துக்கு பிரியாணி மட்டுமல்ல, ++
Feb 8, 2022 4 tweets 1 min read
காமராசர் ஆட்சியில் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொல்வார்.

எப்படியும் தோற்றுவிடுவீர்கள். எதற்கு வாக்கெடுப்பு என்று ஆதிக்க மமதையில் ஏளனமாக கேட்பார்கள்.

அதற்கு பேரறிஞர் அண்ணா பதில் சொல்வார்.++ தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை யார் யார் எல்லாம் எதிர்த்தார்கள் என்பதை வரலாற்றில் பதிய வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பார். அண்ணாவின் அந்த சட்டமன்ற உரை வரலாற்று சிறப்புமிக்கது.

அதே, பேரறிஞர் அண்ணா, 1967 ல் முதலமைச்சராக பதவியேற்ற பின்,++
Jan 24, 2022 6 tweets 1 min read
தமிழ்நாட்டில் அறிவார்ந்த சங்கி என்று யாராவது இருக்க முடியுமா?

சங்கி என்றாலே முட்டாள்கள் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், அப்படி நினைப்பது தான் முட்டாள்தனம். சங்கிகளில் பல்வேறு அடுக்குகள் இருக்கின்றன. மேல் அடுக்கில் இருப்பவர்கள் முட்டாள்கள் இல்லை. ++ அவர்கள் அறிவு தளத்தில் வேலை செய்பவர்கள்.வரலாற்றையே மாற்றும் அளவுக்கு ஆற்றல் படைத்தவர்கள். கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி மையங்கள் என அறிவுத் தளம்,பண்பாட்டு தளத்தில் இவர்களது ஊடுறுவல் அதிகம்.இவர்களின் இன்னொரு பிரிவு தான் இலக்கியத்துறையிலும் இருக்கிறது.இது சங்கிகளின் மேலடுக்கு.
++
Dec 24, 2021 9 tweets 2 min read
பெரியார் நாத்திகரா?
பெரியார் பிரிவினைவாதியா?
பெரியார் சாதி ஒழிப்புப் போராளியா?
பெரியார் பார்ப் பனரை எதிர்த்தவரா?
பெரியார் ஓட்டரசியலை எதிர்த்தவரா?
பெரியார் சட்டத்தை எரித்தவரா?
பெரியார் பெண்ணுரிமை போராளியா?
பெரியார் மொழிப்பற்றை எதிர்த்தவரா?
பெரியார் தமிழ் தேசிய வாதியா?
++ பெரியார் எல்லாரும் போராட்ட வேண்டும் என்று சொன்னாரா?

இந்த கேள்விகளுக்கு இரண்டு விதமாக பதில் அளிக்கலாம். “ஆம்” என்று சொல்லலாம்.“ஆம், ஆனால்...” என்று சொல்லலாம். அதாவது, அவரை இதில் எந்த வார்த்தை சட்டகத்திற்குள்ளும் பொருத்த முடியாது.++
Dec 23, 2021 6 tweets 2 min read
ஸ்பானிய மொழியை மீண்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இன்றுடன் 150 நாட்கள் நிறைவடைந்திருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு பாடமாவது முடிக்க வேண்டும். அதற்கு பத்து நிமிடங்கள் தேவைப்படலாம்.

ஆனால், நான் கற்றுக்கொள்ளும் Duolingo செயலி, கற்றல் முறையை மிக எளிமையாகவும், ++ ஆர்வமூட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட ஒரு செயலி என்பதால் எனது கற்றல் வேகமும் நன்றாக இருக்கிறது. It’s an interesting, engaging and playful learning app. இந்த முறையில் நாமும் ஒரு கற்றல் செயலியை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பு எனக்கு உருவானது.
++
Dec 1, 2021 10 tweets 2 min read
புதிய Omicron variant கொரோனா வைரஸ் குறித்து உலகநாடுகளின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள்..

உலகை அச்சுறுத்தி வந்த கொரொனா வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய variant டிற்கு Omicron என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
++ இந்த வைரஸை தென் ஆப்ரிக்காவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள்.

தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வைரஸ் அதற்கு முன்பே ஐரோப்பாவில் (நெதர்லாண்ட்டில்) பரவி இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
++
Jun 20, 2021 13 tweets 2 min read
நேற்று பெரியாரின் கல்விச் சிந்தனைகள் புத்தக அறிமுகத்தில் தோழர் இந்திரகுமார் ஒரு கருத்தை முன்வைத்தார். பெரியார் பெரியாரிஸ்டுகளை உருவாக்க விரும்பவில்லை. பெரியார் பகுத்தறிவாதிகளை உருவாக்கவே உழைத்தார். ஆனால், இன்று பெரியாரிஸ்டுகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ++ பகுத்தறிவாதிகளாக இருக்கிறோமா என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்றார்.

பெரியாரிய உணர்வாளர் என்ற பெயரில் ஒரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்தை வைத்திருப்பதும், அவர்களை நாம் தமிழர் போன்ற இன்னொரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்திற்கு மாற்றாக வைத்திருப்பதும் தான் இங்கே ++
Jun 19, 2021 5 tweets 1 min read
திராவிட வாசிப்பு குழுமத்தின் மூலமாக இதுவரை விவாதிக்கப்பட்ட புத்தகங்கள்..

1) The politics of cultural nationalism in South India - Marguerite Ross Barnett
2) The Dravidian Model - Kalaiarasan A, Vijayabaskar M
3) பணத்தோட்டம் - பேரறிஞர் அண்ணா
++ 4) Karunanithi A Life - A.S. Panneerselvam
5) Caste - Isabel Wilkerson
6) The war for kindness - Jamil Zaki
7) பெரியார் கல்விச் சிந்தனைகள் - அ.மார்க்ஸ்

இவை அனைத்துமே முக்கியமான புத்தகங்கள். இந்த புத்தகங்கள் குறித்து மிகச்சிறப்பான உரையாடலை தோழர்கள் நிகழ்த்தினார்கள்.
++
Jun 19, 2021 5 tweets 1 min read
பெரியாருக்கு பின்னால் திக செயல்படவில்லை என்று சொல்லலாம். திடலை கைப்பற்றுவோம் என்று சொல்லலாம்.

அண்ணா இந்தியாவிடம் சமரசம் செய்துக்கொண்டார் என்று சொல்லலாம். அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதால் தான் ஈழப்போர் நடந்தது என்று சொல்லலாம்.
++ திமுக ஓட்டுப்பொறுக்கி கட்சி என்று சொல்லலாம். அதிமுகவும் திமுகவும் ஒன்று என்று சொல்லலாம்.

தலைவர் கலைஞரை, முதலமைச்சர் ஸ்டாலினை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் பேசலாம்.

தினகரன், சசிகலாவை “சீமான்தனமாக” ஆதரித்துவிட்டு, இயக்க அரசியலை புனிதப்படுத்தலாம்.
++
May 25, 2021 5 tweets 1 min read
பள்ளி எனும் அறிவை குறிக்கும் பௌத்த சொல் அவர்களுக்கு பிடிக்காது.

ஆஷ்ரம் என்பார்கள், குருக்குள் என்பார்கள், பாலபவன் என்பார்கள், வித்யா மந்திர் என்பார்கள்.

ஆசிரியர் என்பது அவர்களுக்கு பிடிக்காத சொல். குரு என்பார்கள்.

ஆசிரியர் நாளை குரு உட்சவ் என பெயர் மாற்றுவார்கள்.
++ கட்டவிரலை காணிக்கையாய் கேட்ட துரோனாசாரியா எனும் சனாதன வெறியன் பெயரில் தான் விருதுகள் வழங்குவார்கள்.

பெண்ணுக்கு எதற்கு கல்வி என்று கேட்டவர்கள் அவர்கள். போராடித்தான் இங்கே பெண்கள் படிக்கவே ஆரம்பித்தார்கள்.

பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், ++
May 22, 2021 6 tweets 1 min read
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுடன் பேசப்போகிறோம் என்றதுமே ஒருவித பதட்டம் எனக்கு வந்துவிட்டது. காரணம் அவரைப் பார்த்து பேச வேண்டும் என்று சில ஆண்டுகளாவே நினைத்து வருகிறேன்.

தஞ்சை மாவட்டத்தில், எனது தந்தையார் Govi Rajamahendiran (Red Cross) கோவி.ராஜமகேந்திரன் அவர்கள் ஆசிரியருடன் இணைந்து பல பணிகளை செய்தவர்.2009 ல் அப்பா,இறந்த போது, தஞ்சையில் ஆசிரியர் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, வாயில் வரை வந்தவர், அவரின் பிள்ளைகள் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்? என கேட்டுவிட்டு சென்றார். அது என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
May 15, 2021 7 tweets 1 min read
அதாவது நம்மாளுங்க மைண்ட் செட் எப்படினா..

குடிக்கனும், தம் அடிக்கனும், ஜாலியா இருக்கனும், கண்ட நேரத்துக்கு சாப்டனும், கண்ட நேரத்துக்கு தூங்கனும்..

இதையெல்லாம் யாரும் சொல்லாமையே செஞ்சிடுவான்.

வயசு இருக்குற வரை உடம்பு தாங்கும். வயதாக வயதாக உடல் தனது வேலையை காட்டத்தொடங்கும். இவனுக்கு வயசாகுது, இவன் ஆடின ஆட்டத்துக்கு தான் உடல் பிரச்சனை தருகிறது என்பதையெல்லாம் விட்டுவிட்டு..

இத்தன நாள், நல்லா தானே இருந்தேன். இப்ப ஏன் பிரச்சனை வருதுன்னு டிப்ரஸ் ஆவான்.

இவன் ஒரு மருத்துவர் கிட்ட போவான். அவரு இதுதான் உன் பிரச்சனை. இந்த உறுப்புல இந்த பிரச்சனை இருக்கு.
May 14, 2021 4 tweets 1 min read
சீமானின் தந்தை இறப்பிற்கு ஆறுதல் சொல்ல தலைவர் @mkstalin அவர்கள் தொலைப்பேசியில் பேசியதை கேட்டேன்.

அவரின் மீதும், தலைவர் கலைஞர் மீதும், பேரறிஞர் அண்ணா மீதும் வன்மமாக பேசியவர் சீமான். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். இதை பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால், தலைவர் மு.க. ஸ்டாலின் என்றுமே ஒரு சிறந்த அரசியல் பண்பாளராக, சிறந்த மனிதராக தான் இருந்திருக்கிறார்.

என் திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி “அரசியல் பண்பாளர் மு.க. ஸ்டாலின்” எனும் தலைப்பிலான கட்டுரை தான்.
May 8, 2021 10 tweets 3 min read
இத்தனை ஆற்றல் வாய்ந்த தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு இத்தனை நாள் முதல்வராக வாய்ப்பு தராமல் போய்விட்டோமே என்கிற குரல்களை கேட்க முடிகிறது.தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளையே 2018 க்கு பிறகு அறிந்தவர்கள் தான் அதிகம். இன்றைய தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் குறித்தும் பலருக்கு தெரியாது. நானும் அவரை பற்றி வாசிக்க ஆரம்பித்த பின் தான் எத்தனை பெரிய தலைவர் அவர் என்பதை உணர்ந்தேன். அவரது ஆற்றல், பண்புநலன், உழைப்பு, கனவு ஆகிய அனைத்துமே மிகப்பெரியவை. அதை நாம் நிச்சயம் உணர வேண்டும். உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நம் தமிழ்நாட்டுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை
May 8, 2021 8 tweets 1 min read
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய கோவை மகேந்திரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன்.

1) தோல்விக்கு நீங்கள் அனைவரும் தான் காரணம். நீங்களா ராஜினாமா பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ண வைக்கவா என்று கமலஹாசன் கேட்டதாக கூறுகிறார். 2) இது என் கட்சி என்று கமல் சொல்லி இருக்கிறார். கட்சிக்கு அவர் தான் நிரந்தர தலைவர் என்று தீர்மானம் போட்டதை நினைவு கூறுகிறார்.
May 7, 2021 8 tweets 2 min read
Kubler - Ross Theory. குருநாதர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு உளவியல் பாடம் இது. பல விசயங்களுக்கு இதை பொருத்திப்பார்க்கலாம். இது தியரியாக பார்த்தால் “துக்கத்தின் ஐந்து நிலைகள் (5 Stages of grief)” என்று சொல்வார்கள்.

ஒரு விரும்பத்தகாத அல்லது ஒரு துக்க நிகழ்வு நிகழ்கிறது. அதை மனித மனம் கீழ்காணும் ஐந்து நிலைகளில் அணுகும்.

1) Denial (மறுப்பு) - அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை.

2) Anger (கோபம்) - எனக்கெப்படி இது நிகழலாம்?

3) Bargaining (பேரம் பேசுதல்) - நான் இதை செய்துவி்ட்டேன். அதனால் எனக்கு நிகழாது.
May 5, 2021 7 tweets 1 min read
திமுகவிற்கு/ இணைய திமுகவிற்கு ஒரு அட்வைஸ்..

இப்படி யாராவது வருவார்கள். அதிமுக ஆட்சியில் எப்படி திமுகவுக்கு மட்டும் அட்வைஸ் தந்தார்களோ, அதுப்போல பன்மடங்கு இப்போது தருவார்கள்.

அவர்களின் பிரச்சனை, நீங்கள் எப்போதுமே பேசிக்கொண்டிருப்பது தான். சாதி வெறியுடன் “பேசாமல்”, “அமைதியாக” அதிமுகவுக்கு ஓட்டுப்போடுவது அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் தராது. நாம் பேசுவது தான் அவர்களின் பிரச்சனை.

திமுக ரொம்ப யோக்கியமா? ஊபிஸ், மண்டை வீங்கிகள், கட்சி அடிமைகள், கொத்தடிமைகள் என உங்களை உசுப்பேத்திக்கொண்டே இருப்பார்கள்.
May 4, 2021 9 tweets 1 min read
நானும் அலுவலக நண்பரும் மதிய உணவருந்த சென்றோம். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, பக்கத்து டேபிளில் மூன்று இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. மூவருமே இந்தியர்கள். ஆனால், ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் அதிகமாக பேசியது ஒரு தமிழ் இளைஞன் தான். திமுக ஜெயித்தது குறித்து, கருணாநிதி புதிய சட்டமன்றம் கட்டினார், ஜெயலலிதா அதை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்றார். சரி, அம்மா கன்னிப்போல என நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். என் நண்பர் ஒரு பாஜக ஆதரவாளர். கேரளா காரர்.