#விருந்து 😋
#மறக்க_முடியாத_அனுபவம்
பேச்சிலர் லைஃப் ல ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியமான நாள். துணி துவைப்பது, சமைப்பது, நண்பர்களுடன் சுற்றுவது என அந்த நாள் முழுவதும் அமர்க்களப்படும்..!😊
இதுல அந்த நாள்ல எதாவது Function ன்னா மறக்காமல் Lunch க்கு Attendence போட்டிருவோம்..!
இதுல வற்புறுத்தி வேற கூப்பிட்டா,
அப்படிதான் உடன் பணிபுரியும் நண்பர் மிகவும் வற்புறுத்தி அழைத்திருந்தார்..!
("சார் கல்யாணத்துக்கு தான் நீங்க வரல, இதுக்கு நீங்க வரனும், இந்த ஞாயிற்றுக்கிழமை தான், வீட்ல வச்சிருக்கோம் கண்டிப்பா வந்துருங்க" எனக்கு போனில் வேறு நினைவூட்டி இருந்தார்)
ஆம் அவரின் மகள் திருமணம் முடிந்து, சம்பந்தி விருந்து என்று ஒரு சிறு ஃபேமிலி பங்க்ஷன்.!
ஞாயிற்றுக் கிழமையும் வந்தது.
அவர் மற்றொரு நண்பரையும் அழைத்திருந்தார். அவருடன் சேர்ந்து வண்டியில் கிளம்பியாச்சு.
கல்லணையில் காவிரி ஆறு மூன்றாக பிரியும், அதில் நடுவே வெண்ணாறு செல்லும் பாதையை ஒட்டி ஒரு சாலை செல்லும்.
இருபுறமும் பசுமையான வயல் வெளிகள் என அழகான சாலை.!
அந்த சாலையில் ஒரு கிராமத்தில் தான் அவர் வீடு.
சின்ன ஃபேமிலி பங்க்ஷன் தான்னு சொல்லியிருந்தாரு,போய் பார்த்தா ஊரே திரண்டிருந்தது.!
நண்பர் கிராமத்தில் பெரிய தலக்கட்டுன்னு அப்போதான் புரிந்தது..! ஆனால் அலுவலகத்தில் இது எதையும் காமிச்சுக்கிட்டது இல்ல. எளிமையான உடை, மேலும் கொடுக்கப்படும் பணிகளையும் மிகவும் சிரத்தையுடன் செய்வார்.
மற்றவர்கள் அவரை பண்ணையார் என்று ஓட்டுவார்கள். அது கிண்டல் அல்ல நிஜம் தான்.
அந்த கூட்டத்திலையும், எங்களைப் பார்த்ததும் பக்கத்துல வந்து சிறப்பாக வரவேற்றார். மேலும் எங்களை அவருடைய மருமகனுக்கும் அறிமுகப்படுத்தினார்.😊
சாப்பிடுவதற்கும் அவரே கூட்டிட்டு போய் விட்டுட்டாரு. அவங்க சொந்தக்காரங்க தான் அங்கே பரிமாறிட்டு இருந்தாங்க...!
நாங்களும் சாப்பிட ஆரம்பிச்சோம்,
முதல்ல எல்லா ஐட்டங்களையும் வச்சாங்க.
நாங்களும்,First Round சிறப்பாக சாப்பிட்டோம்.!
அப்படியே இரண்டாவது ரவுண்டு.!
இடையிடையே வேண்டிய சைடு டிஸ் எல்லாம் Topup பண்ணிட்டு இருந்தாங்க.!😂
ரெண்டாவது ரவுண்டு முடிந்ததும், நாங்க Formalityக்கு போதும் சொன்னோம்..
ஆனா, அவங்க கேட்காம மறுபடியும் கொண்டு வந்து வச்சு, நல்லா சாப்பிடுங்க ன்னு கவனிச்சாங்க..!
மூன்றாவது ரவுண்டு போயிட்டு இருந்துச்சு..!
இப்போ நிஜமாவே
"போதும் போதும்" ன்னு சொன்னோம்... 😂
ஆனா அவங்க கேட்கல,
"அதுக்குள்ளவா, எங்களுக்கு தெரியும் இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க" அப்டின்னு சொல்லி
சாப்பாடு வச்சாங்க..! 😊
நானும் நண்பனும்
"என்னடா இப்படி கவனிக்கிறாங்க.!"
அப்படின்னு சொல்லிட்டே சாப்பிட்டோம்..! (செம்ம Taste வேற)
சாப்பிட்டு முடிக்கும் போதே, மறுபடியும்..."இன்னும் கொஞ்சம் வைக்கிறோம்ன்னு சொல்லிட்டு" வந்தாங்க..!
நாங்க "வேண்டாம், வேண்டாம்..!" ன்னு சொன்னோம்.
இந்த முறை அவங்க கம்பெல் பண்ணல , ஒன்னும் சொல்லவும் இல்ல.! நாங்களும் அப்பாடா ன்னு திருப்தியா கைய கழுவிட்டு போய் வெளியில உட்கார்ந்தோம்..!
கூப்பிட்டிருந்த நண்பர் பக்கத்தில் வந்து பேசிட்டு இருந்தார்.
நாங்க கேட்டோம் "சாப்பாடு எல்லாம் ரொம்ப நல்லா இருந்திச்சு..
... ஆனா போதும் போதும்னு சொல்றத கேட்காம வச்சுட்டே இருந்தாங்க..!"
அவர் கேட்டு, சிரிச்சுகிட்டே சொன்னார்..
" போதும் போதும்ன்னு சொல்லும் போது வயிறு உண்மையாகவே நிறைந்து இருக்காது.
வயிறு உண்மையாகவே நிறைந்தால் நாம் போதும்ன்னு சொல்ல மாட்டோம், வேண்டாம் தான் சொல்லுவோம்..!"
"அப்படி சாப்பிடுறவங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு சாப்பாடு போடுவோம். இதுதான் எங்க பக்கமெல்லாம் வழக்கம்..!"
அப்படின்னு சொன்னாரு..!😊
உண்ணமையாகவே இந்த மாதிரி விருந்தோம்பல் பண்பாடு,இன்னும் கிராமங்களில் இருக்கத்தான் செய்யுது..!😊😋
ஆனா,City Culture ன்னு சொல்ற,
நகரங்கள்ல பந்தியில் சாப்பிடும் போதே பின்னாடி வந்து நிக்கிறாங்க! (இடம் பிடிக்க)😕
இப்போதெல்லாம் திருச்சி,
தஞ்சாவூர்,புதுக்கோட்டை கிராமத்து பக்கம் ஏதாவது பங்க்ஷன்னு போனா இரண்டாவது ரவுண்டுலேயே "வேண்டாம்"னு சொல்லிடுறது.!
வாழ்க விருந்தோம்பல்.!😂
🙏🙏🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
