நிவா 🦋 Profile picture
அன்பும் அறமும், தமிழும் சுவையும், எங்கும் எப்பொழுதும்..! ....but, Master of None
ULTRA MAGA!!! AMC TO THE MOON!!! Profile picture Victor Profile picture 3 subscribed
Oct 2, 2021 11 tweets 5 min read
Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...! நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
Apr 1, 2021 16 tweets 4 min read
#நியுக்ளியர்_டைமண்ட்_பேட்டரி
#Nuclear_Diamond_Battery

பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,

#அறிவோம்_டெக்னாலஜி வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.

(Photo credit : Electrical 4 U)
Mar 2, 2021 17 tweets 7 min read
#ஹோன்ஜாக் 🙋
#Honjok 😊

இது என்ன கொரியன் பட டைட்டில் மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா..! 🤔

சரி அதுக்கும் இங்க கீழே இருக்கிற புகைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீங்களா..! 🤔

அப்படின்னா சரி வாங்க ஜாலியாக பயணிக்கலாம்..! 🧞

#Niva #Thread மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தான் வாழ்ந்தார்கள்.

பிறகு அந்த கூட்டம்
பெரிய, பெரிய குழுக்களாகவும், பிற்காலத்தில் சிறிய சிறிய குழுக்களாகவும் பிரிந்து வாழ ஆரம்பித்தது.

இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்..!
Oct 18, 2020 26 tweets 9 min read
#உஷார்_அய்யா_உஷாரு 😊
#Online_Offers_உஷாரு 😊

ஆன்லைன் ஷாப்பிங் வலை தளங்களான #Amazon #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே உண்மையான மார்க்கெட் கள நிலவரம் தான் என்ன.!

அது பற்றிய #இழை #Thread
வாங்க ஜாலியா Shopping பண்ணலாம்..!🧞

#MarketSurvey #OnlineShopping #Offers எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம்
#Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
Oct 17, 2020 9 tweets 3 min read
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..! அவரை இந்த சமூகம்,
பாடி கார்ட்,
நலம் விரும்பி,
பாசமலர் ன்னு
எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..!😊

ஆனா, அந்தப் பொண்ணு மட்டும் அவரு சொல்றத தான் தட்டாம கேட்பாங்க.! அவ்ளோ பாசம் & நம்பிக்கை..! Image
Oct 14, 2020 26 tweets 11 min read
#Android_Security 😊
#ஆண்ட்ராய்டு_பாதுக்கப்பு

நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔

அது பற்றிய #Thread #இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞

உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!" வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
Oct 9, 2020 18 tweets 4 min read
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!

அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄 அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!

நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
Oct 8, 2020 10 tweets 2 min read
#எண்ணங்களில்_மாற்றம் 🙋

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!

அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன். அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
Oct 6, 2020 10 tweets 2 min read
#காதலின்_வரம்_கண்ணம்மா 😊

"சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்...!

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ.!

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ.!

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்.!"

💃😍💃

இந்த வரிகளில்
அந்த முண்டாசு தலைப்பாகை மற்றும் முறுக்கு மீசைக்குள் Image ஒளிந்து இருக்கும் காதல் நம்முன் பரிணமித்து நிற்கிறது..!

உவமைகளின் அரசன் என்றுமே பாரதிதான்..!

🔥காதலியின் ஒரு சிறு புன்னகையை அவன் இவ்வாறு வர்ணிக்கிறான்.
சோலை என்பது பூக்களும் பூஞ்செடி கொடிகளும் நிறைந்த மனதிற்கு பிடித்த ரம்மியமான சூழல் நிறைந்த இடம். அந்த ரம்மியமான சூழலில்
Sep 28, 2020 26 tweets 8 min read
#Home_Theatre & #Sound_Bar 😊
(Purchasing Tips)

OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!

#Shopping #Gadgets ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
🔥 Sound Bar
🔥 Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.😊
Sep 27, 2020 5 tweets 2 min read
🎬 #Aapla_Manus #ஆப்லா_மனுஸ்
🎙️: Marathi
🍿 : Triller & Family Drama
❤️ : 91% Google User Rating
⭐ : 4
📺 : Netflix
📜 : ஒரு வயசானவர் அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து கீழே விழுகிறார்..! அதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அவரது மகன் ஒரு வழக்கறிஞர். மருமகள் ஆசிரியை. இது தற்கொலை அல்ல கொலை தான் என விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரி. வேலைக்கு செல்லும் மருமகள், அன்பிற்காக ஏங்கும் வயதான அப்பா, அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள்.. சமாளிக்க முடியாமல் தவிக்கும் மகன்... என ஃப்ளாஷ் பேக். இந்த நான்கு கதாபாத்திரங்கள் தான் படமே..!
Sep 25, 2020 16 tweets 4 min read
#கொடுமை 🤔

இதைப் பார்த்தவுடனேயே சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை செய்தியாக படித்த ஒரு சமூக அவலம் என் மனதுக்குள் உடனே வந்தது..!😏

அதன் சுருக்கம்

மத்திய பிரதேசம் மற்றும் அந்த மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களிடம் உள்ள ஒரு வினோத பழக்கம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது..!

அதாவது ஒருவருக்கு கல்யாணம் ஆகல அல்லது பெண் கிடைக்கல அப்படின்னா ரொம்ப எல்லாம் பெருசா வருத்தப்பட வேண்டாம்.
இவங்கள அணுகினால் போதும் அவருக்கு ஒரு பெண் மனைவியாக வாடகைக்கு கிடைப்பாள்.
Sep 23, 2020 11 tweets 3 min read
#வங்கி_அனுபவம் 😊
ஏற்கெனவே இப்படித்தான் திருச்சி ல 'மாநில' வங்கி Main Branch ல ஒரு Asst.Manager, தமிழ் ல பேசுனா, சரியா பதில் சொல்லல , English ஹிந்தி , தெரியாதான்னு எனக்கு முன்னாடி Line ல நின்றிருந்த ஒரு வயசான அம்மா கிட்ட ரொம்ப நக்கலா பேசினார். அவங்க ரொம்ப சிரமப்பட்டாங்க..!😕 என் Turn வரவும், அவர்கிட்ட என்னுடைய எல்லா கேள்விகளையும் தூய தமிழிலே கேட்டேன்..!
அவருக்கு செம கடுப்பு..!
உடனே என்ட்டையும் கத்த ஆரம்பிச்சிட்டார். அப்பவும் நா அசரல,
அதே பொறுமையுடன்,
"வங்கியில் வாடிக்கையாளரிடம் நாகரீகமான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசுமாறு உங்களுக்கு உங்கள்
Sep 21, 2020 27 tweets 11 min read
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -5 - Final Episode) 😂

#இழை #Thread

கடன் அட்டையை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றி பார்க்கலாம் 🧞

#EMI #Loan #Finance #Banking #IPL2020 🔥 கடன் அட்டை யை Receive செய்த உடனேயே அவர்கள் சொல்லும் Procedures படி PIN நம்பர் Generate பண்ணிவிடுங்கள்..! அல்லது அவங்களே Default ஆ ஒரு PIN நம்பர் கொடுத்திருந்தால், உடனே அந்த PIN நம்பர் ஐ மாற்றிவிடுங்கள்.
இது முக்கியமான Security Issue, எனவே தாமதம் வேண்டாம்.
Sep 17, 2020 32 tweets 9 min read
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -4)

#இழை #Thread

கடன் அட்டைகள் நம்மை ஈர்ப்பதற்காக முக்கியமான காரணிகள்..,
அவை வழங்கும்

🔥Reward Points (வெகுமதி-புள்ளிகள்)
🔥Cash Back
🔥Discounts (தள்ளுபடி)
🔥Offers (சலுகைகள்)
🔥No cost EMI (வட்டியில்லா தவணை)

இதெல்லாம் என்னானு பார்ப்போம்🧞 இதெல்லாம் பார்க்குறதுக்கு, Cake மேல இருக்குற Cream & Topings மாதிரி நல்லா Attractive ஆ இருக்கும்.😋
அனா இதுங்க எல்லாமே நம்ம செலவு செய்யனும்ங்கற ஆசையை தூண்டக்கூடியது.அதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது..!
Sep 15, 2020 8 tweets 1 min read
😊
என்றோ
காற்றில்
பறந்து
வந்த,
விதை
ஒன்று
முற்றத்தில்
விழுந்து
முளைத்தது.

முளைப்பது
கருவேலம்
என
தெரிந்தும்
நீர்
இறைத்தேன்.
தளிர்
துளிர்த்து
வளர்ந்து
செடியாகி
நின்றது.

"முட்செடி
முளையிலையே
வெட்டி
விடலாம்"
இது
தம்பி.
"வளரட்டும்
விறகாக
உதவும்"
இது
ஆச்சி.
முடிவில்
அவளே
வென்றாள்.! நீர்
குடித்து
வளர்ந்த
செடி
நிழல்
தரும்
மரம்
ஆனது.
ஓரமாக
தானே
இருக்கிறது
விட்டுவிட்டோம்..!

அதன்
நிழலில்
சைக்கிள்
நிறுத்தப்பட்டது
நாய்
கட்டப்பட்டது.
அதன்
பருத்த
நிழல்
நாய்க்கு
இதமானது.!

விழும்
சுள்ளிகள்
சேர்த்தால்
சில
நாட்கள்
கொல்லைப்புற
அடுப்பில்
குளிக்க
வெந்நீர்
கிடைக்கும்..!
Sep 14, 2020 21 tweets 14 min read
#டிவிட்டர்_போட் 😊
#Twitter_Bot
என்பது என்ன..! என்ன செய்கிறது..!
இது பற்றிய #இழை #Thread 🧞

#Internet_Bot
'போட்' என்பது இணையதளங்கள் அல்லது சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட வேலைகளையை செய்ய பயன்படும் ஒரு மென்பொருள்.

#Technology #Trending #Software #bot இது இணையதளங்களில் பெரும்பாலும் தானியங்கு (Automatic) முறையில் வேலைகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (Programmed).இதனால் இது இணையதள ரொபோட் (Internet Robot) என அழைக்கப்படுகிறது.
இதை சுருக்கமாக Internet Bot எனவும் அழைக்கிறார்கள்.
Sep 13, 2020 13 tweets 2 min read
#விருந்து 😋
#மறக்க_முடியாத_அனுபவம்
பேச்சிலர் லைஃப் ல ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியமான நாள். துணி துவைப்பது, சமைப்பது, நண்பர்களுடன் சுற்றுவது என அந்த நாள் முழுவதும் அமர்க்களப்படும்..!😊

இதுல அந்த நாள்ல எதாவது Function ன்னா மறக்காமல் Lunch க்கு Attendence போட்டிருவோம்..! இதுல வற்புறுத்தி வேற கூப்பிட்டா,
அப்படிதான் உடன் பணிபுரியும் நண்பர் மிகவும் வற்புறுத்தி அழைத்திருந்தார்..!

("சார் கல்யாணத்துக்கு தான் நீங்க வரல, இதுக்கு நீங்க வரனும், இந்த ஞாயிற்றுக்கிழமை தான், வீட்ல வச்சிருக்கோம் கண்டிப்பா வந்துருங்க" எனக்கு போனில் வேறு நினைவூட்டி இருந்தார்)
Sep 11, 2020 28 tweets 10 min read
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -3)

#இழை #Thread

கடன் அட்டை எப்படி வேலை செய்கிறது.!🤔
அதை புரிந்து கொள்ள முதலில் இந்த,

🔥Credit Limit
🔥Billing Cycle
🔥Monthly Statement
🔥Payment Dues ( Actual & Min)
🔥Grace Period
🔥Late Payment Charges

இது பற்றி தெரிந்திருக்க
வேண்டும்🧞 Credit Card வாங்க நமக்கு இருக்கும் ஆர்வத்தில் சிறிதளவாவது இதையெல்லாம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதில் இருந்தால் கடன் அட்டை வாங்கிய பின் வரும் 85 சதவீத சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடலாம்..! 😊
Sep 10, 2020 32 tweets 11 min read
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -2)

#இழை #Thread

முந்தைய பதிவில் சில அடிப்படைகளை பார்த்தோம்..!😊
(படிக்காதவர்களுக்கு Link கீழே.!)
சரி வாங்க, "யாரெல்லாம் கடன் அட்டையை தவிர்ப்பது நலம்" - என இந்த பதிவில் அலசுவோம்..!🧞

#EMI #Loan #Finance #Banking

முன்னாடி கேபிள் டிவில எல்லாம் ஒரு சில படங்கள் போடுறதுக்கு முன்னாடி..
"வயதானவர்கள்,
இதயம் பலவீனமானவர்கள், குழந்தைகள்,
கர்ப்பிணி பெண்கள்
இத்திரைப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்"
ன்னு Slide போடுவாங்க..!
(இதன் நோக்கம் படம் பார்க்க கூடாது என்பது அல்ல, Risk எடுக்காதீர்கள் என்பதே )😊
Sep 7, 2020 31 tweets 12 min read
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -1)

#இழை #Thread

இதை ஒரே பதிவாக பதிவிட்டால் Detailing இருக்காது. அதனால இத ஒரு மூணு EMI ல கட்டி முடிக்க பார்ப்போம்.😂
(அதாங்க மூணு பாகங்களாக)😂
சரி வாங்க,
Credit Card வாங்கலாமா இல்ல வேணாமான்னு முடிவு பண்ணலாம்..!🧞

#EMI #Loan #Finance #Banking Credit Card (CC) வாங்குறதுக்கு முன்னாடி நமக்கு அடிப்படை விஷயங்களான

🔥கடன் ( Loan)
🔥வட்டி (Intrest)
🔥வட்டி விகிதம் (Intrest Rate)
🔥திரும்ப செலுத்தும் காலம்
(Pay back period)
🔥 Penalty (அபராதம்)

இது பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும்.