நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் கட்டணம் குறைக்கப்படுகிறதா ?
பொய் - வடிகட்டிய பொய் .
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளை குறித்த தகவல்கள் 1/n
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்காக மத்திய அரசின் சார்பில் இரு காரணங்கள் கூறப்பட்டன.
நீட் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்களை மட்டும் தேர்வு செய்து மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது,
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் மருத்துவப் படிப்பு வணிகமயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது ஆகியவை தான் அந்த இரு காரணங்கள் ஆகும்.
சென்னையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பொது மருத்துவப்படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கதிரியக்கவியல் ( Surgeon) உள்ளிட்ட சில சிறப்புப் பிரிவுகளுக்கு ரூ.60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் ரூ.20 லட்சம் ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது தவிர பிற கட்டணங்கள், விடுதிக்கட்டணம் என ஆண்டுக்கு குறைந்தது ரூ.15 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் விடுதிக் கட்டணமாக மாதத்திற்கு ரூ.2 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வசூலிக்கிறது.
இது அப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு கல்விக் கட்டணத்தை விட பல லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்காக ஒரு மாணவன் ஆண்டுக்கு ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை செலவழிக்க வேண்டும் என்றால், அது எந்த ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு சாத்தியமாகும்?
இப்படி கேட்டது நானல்ல இன்று அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தன் மகனை எம்.பி ஆக்கிய மருத்துவர் ராமதாஸ் . shorturl.at/bsxT9
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
