Belongs to the Dravidian Stock || Views are strictly personal .
Sep 14, 2024 • 10 tweets • 5 min read
ஆர்.எஸ்.எஸ்
1980 களில் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ?
1980-இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான
மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்று, சங்கம் மிக வேகமாக வளரும் பிராந்தியங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அதோடு சங்கத்தின் சகோதர அமைப்புகள் அனைத்தினது வேலையும் நல்ல முன்னேற்றகரமானதாக உள்ளது. எங்கும் இந்து வேட்கை பற்றிக் கொண்டு வருகிறது. உண்மையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.
(தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து எழுச்சியின் கதை, ஆர்.எஸ்.எஸ். வெளியீடு, பக். 4-5) 1/n
தமிழ்நாட்டில் கலவரம் வழியாக வளரலாம் என ஆர்.எஸ்.எஸ் நினைத்தது .
அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் மண்டைகாடு.
1982 மார்ச் மாதம் பிரிக்கப்படாத அன்றைய கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் இந்து - கிறிஸ்தவ மதத்தினருக்கிடையில் மதக் கலவரம் வெடித்தது.
அதற்கு முன் ஒரு சின்ன flashback ....
1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 210 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர்.
ஆதிக்க சாதியினரின் அட்டூழியம் , காவல்துறையின் வன்முறையும் , அரசு அதிகாரிகளின் தலித் விரோத நடவடிக்கைகளும்தான் மதம் மாறக் காரணிகளாக இருந்தன .
25-07-1981 அன்று ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒரு நேர்காணலை எடுத்தார்.
அதில் ஒரு சிறு பகுதி
ஆசிரியர் : இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?
உமர்: சந்திக்கலிங்க.
ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?
உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.
‘மதம் மாறாதே’ ‘மதம் மாறாதே’!
‘அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே’
அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.
ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?
உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். “இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.
ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?
உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, “இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு” சொல்லிட்டுப் போயிட்டார். 2/n
Sep 2, 2024 • 8 tweets • 2 min read
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன..
அதை நினைவு கூறும் பொருட்டு ஊடாட்டம் ஆய்வுக்கு குழு பல அறிஞர் பெருமக்கள் , ஆய்வு மாணவர்களை கொண்டு வார இறுதி நாட்களில் கருத்தரங்கங்கள் நடத்தினார்கள் .
அம்பேத்கர் பார்வையில் மாநில சுயாட்சி .
கூட்டாட்சி , அம்பேத்கரும் - அம்பேத்கருக்கு பிறகும் .
மாநில சுயாட்சியும் - முஸ்லீம்கள் , தலித்துகள் பிரதிநிதித்துவம் .
கூட்டாட்சியும் - கம்யூனிஸ்ட்டுகளும்.
நிதிக் கூட்டாட்சி - நிதிப் பகிர்வின் அரசியல்.
மாநில சுயாட்சியும் - இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும்
ஒன்றிய அரசியலில் கலைஞரும் மாநிலச் சுயாட்சியும்
போன்ற தலைப்புகளில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
கதிரவன் - இவன் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கின் குற்றவாளி. ரவுடி ஆற்காடு சுரேஷின் நண்பன்.
சின்னா கேசவலு - BSP கட்சி பிரமுகர் தென்னரசுவின் நண்பன்.
சின்னா கேசவலுக்கும் கதிரவனுக்கும் இருந்த முன்பகை காரணமாக கதிரவனை சின்னா கேசவலு கொலை செய்கிறான் .
மே 2010 , புளியந்தோப்பைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷ் தனது காதலி அஞ்சலையுடன் சேர்ந்து சின்னா கேசவலுவை தீர்த்துகட்டுகிறார்கள்.
1/n
அதன்பின் ஐந்து வருடங்கள் கழித்து, 2015ல் கதிரவன் கொலைக்கு உடந்தையாயிருந்த சின்னா கேசவலுவின் நண்பனான BSP தென்னரசுவையும் தீர்த்துக் கட்டுகிறான் ஆற்காடு சுரேஷ். 2/n
ஜெயலலிதா ஆட்சிக் காலத் தில் சின்னவாள், ஜெயேந்திர ருக்கு என்ன கதி ஏற்பட்டது ? அந்த மகாகுருவையே சிறைக் கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகி றோம்! 1/n
கைது செய்து சிறைக் கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் எண்ணுகிறோம்! 2/n
Jun 10, 2022 • 5 tweets • 2 min read
எனக்கும் சிதம்பரத்தின் மீது கோவம் உள்ளது அதற்காக அவரை ராஜாஜிவுடன் ஒப்பிடுமளவெல்லாம் வன்மம் இல்லை.
கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தில் கூட “கருணாநிதி” என்று பல எதிர்ப்புகள் வந்த போதும் பேசிய ”கொம்பன்” சமஸ் ஏன் ராஜாஜி என்று எழுத வேண்டும் சக்ரவர்த்தி இராசகோபாலன் என்று எழுதலாமே ? 1/n
திராவிட இயக்கத்தின் அஸ்தமனம் என்று எழுதி வியாபாரம் பார்த்த பிறகு அடிக்கும் காற்றின் திசை அறிந்து கலைஞர் புகழும் அண்ணா புகழும் பாடினார்.
அடுத்ததாக இந்தியையும் குலக் கல்வியையும் திணித்த சக்ரவர்த்தி இராசகோபாலனை பற்றித்தான் தொகுப்பு தயார் செய்துக் கொண்டிருக்கிறாரா ? சமஸ் ? 2/n
Mar 25, 2022 • 5 tweets • 2 min read
The film RRR by SS Rajamouli is aimed at blending hindutva project with the nationalism. Undoubtedly, the film will reinforce both.
1/n
Unlike north Indians who are used to this blending for long, the combination of religion with nationalism will surely be new for Tamil audience.
It attempts to undermine the basis that India should be secular and thus nationalism should be independent of religions.
2/n
Jan 15, 2022 • 7 tweets • 1 min read
1957 இல் தேர்தலில் போட்டியிட்டு 1967 இல் - பத்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த பெருமை உங்கள் கட்சியன் (திமுக) தனி பெரும் சாதனை அல்லவா ? என்று அண்ணாவிடம் கேட்க , அறிஞ்சர் அண்ணா மிகுந்த பெருமிதத்திடனும், தன்னடக்கத்துடனும் சொன்ன பதல் - 1/n
“எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல; எங்கள் பாட்டன் - நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின் மீது ஏற்பட்ட வெற்றி . நீதிகட்சி அப்போது தோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி அய்யர் “நீதிகட்சியை 500 அடி ஆழக் குழித்தோண்டிப் புதைத்து விட்டோம்” 2/n
Sep 20, 2021 • 9 tweets • 3 min read
@thiruja ஏன் வரலாற்றில் உள்ளதை வெட்டியும் ஒட்டியும் பொய் பரப்புகிறார்?
பெரியார் தேர்தல் அரசியலை புறக்கணித்தாரா ?
ஆம் புறக்கணித்தார் .
பெரியார் தேர்தலை புறக்கணித்தாரா ?
இல்லை , எல்லா தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்தார் 1/n
பெரியார் அரசியல் கட்சிகளுக்கு எதிரானவரா ?
பொய் - நீதிக்கட்சி அரசியலில் போட்டியிடக் கூடாது என்றார் . ஆனால் அதே பெரியார் தான் “நமக்கென்று தனிக்கட்சி ஒன்று சட்டசபையில் அதாவது நமது சுயமரியாதைக்கு இடையூறாக இருக்கும் சட்டத்தடையை ஒழிப்பதற் காவது அவசியம் வேண்டியிருக்கிறது” என்றார் 2/n
Sep 20, 2021 • 6 tweets • 3 min read
பெரியார் தனி தமிழ்நாடு கேட்டார் - அதே பெரியார் தான் திமுகவின் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டார். அந்த மாநாட்டில் மாநில சுயாட்சி மாநாட்டில் மாநில சுயாட்சி வழங்கினால் தனி நாடு கோரிக்கையை கைவிடுகிறேன் என்றார். 1/n @thiruja
இந்திய ஒன்றியத்தில் மாநில சுயாட்சிக்காக திமுக தான் முதல் முறையாக சட்டமன்ற தீர்மானம் கொண்டு வந்தது . 2/n @thiruja
Sep 18, 2021 • 8 tweets • 3 min read
நீட் தேர்வு ஆபத்து என்று சமூக வலைதளத்தில் மட்டும் எழுதி கொண்டிருத்தோம்.பின்பு ஒற்றை சிந்தனையில் உள்ள நண்பர்கள் ஒன்றுக்கூடி “நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு” என்ற அமைப்பை உருவாக்கி நீட் தேர்வுக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகளை RTI தகவல்களை 1/n
பெற்று அன்றைய எதிர்கட்சித் தலைவரிடம் @mkstalin தகவல்களை தந்தோம்.
அந்த தகவல்கள் அவர் வெளியிட்டதும் விவாதப் பொருளானது. நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக தேர்தலில் பிரச்சாரமும் செய்தோம் . யாரும் எங்களிடம் வந்து எங்களுக்கு பிரச்சாரம் செய்யுமாறு கேட்கவும் இல்லை. 2/n
வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஓர் தீண்டாமைத் தேர்வு ..
தரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள் , நடுத்தர வர்க மாணவர்களின் கணவுகளை நீட் தேர்வு கலைத்துவிட்டது .. 1/n
தமிழக அரசின் பாடத்திட்டதில் standard இல்லை மயிரில்லை மட்டையில்லை என்று வாதம் வைக்கும் பாசிச ஜந்துக்களுக்கு “ ங்கொப்பன் மவனுங்களா நீட் தேர்வு CBSE syallbus (general syallbus ) நடத்தப் படுவது " . 2/n
Aug 29, 2021 • 4 tweets • 1 min read
இனிச் சமஸ்கிருதம் தேவமொழி என்று கூறப்பட்டுவிட்டதால் அத்தேவமொழியில் காணப்படும் நாகரிகமும்,தேவர்களுக்குரிய நாகரிகமாக இருக்கமுடியுமேயன்றி, அது, மக்களுக்குரிய நாகரிகமாக இருக்க முடியாது. எனவே, மக்களுக்குரிய நாகரிகம் மக்களால் பேசப்படும் மொழிகளிலேயே வேண்டிய அளவு இருக்கும்போது,
1/4
மக்களால் பேசப்படும் வாய்ப்பை இழந்த தேவ மொழியினை- சமஸ் கிருத நாகரிகத்தை நாட்டில் ஏன் பரப்ப வேண்டும்? இனி, ஒருவேளை, தேவ மொழியான சமஸ்கிருதத்திலும்ம் சில நல்ல நாகரிகங்கள் இருக்கின்றன. அவற்றை மக்கள் தெரிந்து கொள்வது நல்லதுதான் என்று வைத்துக் கொண் டாலும், 2/4
Jan 6, 2021 • 13 tweets • 2 min read
கல்லக்குடி - மிகவும் நெருக்கமான பெயர் .
காரணம்: கல்லக்குடி என்றால் கலைஞர் . எங்கள் ஊருக்கும் கல்லக்குடி நெருக்கானமான ஊர் .
கல்லக்குடி போராட்டத்தை பற்றி இவ்வாறு பதிவு செய்துள்ளார் கலைஞர் .
1/n #thread
கூடி நின்ற ஆயிரமாயிரம் உள்ளங்களும் துடித்தன. ஒரே அமைதி! என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் வெள்ளம் அலையடங்கிக் கிடந்தது. துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் வளையம் வளர்ந்தது. கலெக்டர்,டி.எஸ்.பி.,சர்க்கிள், சப் இன்ஸ்பெக்டர்கள், மாஜிஸ்டிரேட் சார்ஜண்ட் எல்லாரும் எங்கள் பக்கம் வந்தனர்.
Jan 5, 2021 • 13 tweets • 2 min read
நாட்டிலேயே மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
-சஞ்ஜிப் பானர்ஜி
(சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி )
அண்ணா “தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவில்லை என்றால் வடவர்கள் நம்மை தமிழர்கள் என்று அல்ல பெரும்பாலும் மதராசி என்று தான் விழித்திருப்பார்கள்”
1/n
“தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்,18-07-1967
⁃பேரறிஞர் அண்ணா
“தமிழ்நாடு " என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்பு இருந்த திரு வெங்கட்ராமன் அவர்கள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு 2/n
Jan 4, 2021 • 8 tweets • 2 min read
திரும்பிப்பார் - பேரறிஞர் அண்ணா ,1961
காங்கிரஸ் கட்சி தொண்டர்: வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
தி. மு. க. தொண்டர்: குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . 1/n
கா. க. : ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்கு கிறார்கள், நாள் தவறாமல்.
தி. மு. க. : அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, 2/n
Dec 29, 2020 • 8 tweets • 2 min read
உடல் வலியை காரணம் காட்டி மக்கள் சேவையில் பின்வாங்காமல் செயலாற்றிய ஒரே தலைவர் “கலைஞர்” .
அருந்ததயினருக்கான 3% உள் ஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்து கலைஞர் எழுதிய முன்னுரை வருமாறு:
1/n
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேராசிரியர் அவர்களே,சட்டப் பேரவை அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளே,
இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை மன்னிக்க வேண்டுகிறேன் 2/n
Dec 16, 2020 • 7 tweets • 1 min read
நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்து நாளையுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது .
1920 நவம்பர் 20 முதல் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது .
1920 டிசம்பர் 4 தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.
98 இடங்களில் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது .
1/n
1920 டிசம்பர் 20 அன்று நீதிக்கட்சி அமைச்சரவை பதவி ஏற்றக் கொண்டது .
நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் பாராளுமன்ற நடைமுறைகளுக்கான அடித்தளம் இங்கே நாட்டப்பட்டது.
இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக்கப்படும் மாநிலமாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான். 2/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் தொடர்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற உரை . (14-03-1997). 1/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அதிவிரைவில் வளர்ச்சி அடைந்து வருகின்ற, வேகமாக மாறுதல் அடைந்து வருகின்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் நாம் பின்தங்கிவிடாமல் 2/n
Oct 18, 2020 • 8 tweets • 4 min read
In (17/10/2020) yesterday’s debate at @PTTVOnlineNews show named “Naer Pada Pesu”, Dr @sumanthraman , has abruptly recorded as the RTI information provided by the Director of Medical Council as a fake document, when it was presented in a public talk show by @Dr_Ezhilan 1/n
It is a dirty mind game being played by the current government for not making the exact information reach the general public. The information provided by @Dr_Ezhilan was released as a statement by opposition leader @mkstalin , and it had a vide circulation in the social media
1/n
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.