குழந்தை அருண் New Profile picture
My Old ID 👉 @aruntwitz நீங்கள் நினைத்திருக்கும் பிம்பம் எதுவோ, அது நானில்லை😎 Backup Account 👉 @kuaoffl See My Tweets in Likes

Sep 13, 2020, 16 tweets

இந்த Pit Bull டாக்தான் மோஸ்ட் டேன்ஜரசஸ்னு சொல்றாங்க.
வளர்க்குறவன் சொன்னாலே நீயென்னடா எனக்கு ஆர்டர் போடுறதுன்ற ரேஞ்சுல டீல் பண்ணுங்களாம்

Rott Weiler னு இந்த நாய் அடிக்கடி கோவப்பட்டுட்டே இருக்குமாம். விவேக் மாதிரி உடம்புல தண்ணிய தெளிச்சி சாந்தப்படுத்தலனா வளர்க்குறவன்டயே ரெண்டு கிலோ எடுத்து லன்ஞ்சுக்கு வைச்சிக்குமாம். வீட்ல வளர்க்கவே கூடாதாம்

Wolf Hybrid

இந்த வகையான நாய்கள் குறிப்பிட்ட ஓநாய் & நாய்களோட கலப்பு போல. அதுங்களாவே நிறைய யோசிக்குமாம், நிறைய இடத்துல இதை வளர்க்குறதை தடை பண்ணிருக்காங்க

Great Dane

இந்த நாய் வளர்க்குறவங்க மேல பாசமா இருக்குமாம். ஆனா அண்டர்டேக்கரோட வம்சாவளி மாதிரி இஷ்டத்துக்கு வளர்ந்திடுமாம்.
இதெல்லாம் நடத்தி கூட்டி போனா அதுதான் நம்மளை வாக்கிங் கூட்டி போற மாதிரி

German Shepherd

நிறைய ஹாலிவுட் படத்துல பாக்குற நாய் இதுதான். ரொம்ப டேஞ்சர் ஆனா சரியா வளர்த்தா உசுரயே குடுக்குற பாசக்காரன்

Akita Inu

இந்த நாய்தான் தேட போனேன். Hachi படத்துல வந்த இனம். உலகத்துலயே எக்ஸ்ட்ரீம் லாயலா வளர்க்குறதுக்குரிய இனம்னு சொல்றாங்க. ஓனருக்கு ஒன்னுனா உசுரயே விட்டுருவானாம்🔥😍

St. Bernard

பழைய கார்டூன்ஸ் பாக்குறவங்கனா இந்த நாய் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். பனில மாட்டிக்கிட்டவங்களுக்கு கழுத்துல ஒரு பிராந்தி கேன் மாட்டி ஊத்தி விடுற மாதிரி எடுத்துருப்பாங்க😂
ஆனா இது நிஜமாவே பனில மாட்றவங்களை ரெஸ்க்யூ பண்ணுறதுக்கு யூஸ் ஆகுது🔥

Komondor

இது அதிகமா முடி வளர்ற ஒரு நாய். முழுசா வளர்ந்து கண்ணு காதுலாம் தெரியாத அளவு ஆகிடுமாம். தேடித்தான் கண்டுபுடிக்கனும்.
வீடு துடைக்குற மாப்பு மாதிரி 🚶‍♂️

Labrador

அழகா கேர்ஸூக்குலா புடிக்குற மாதிரி, கிப்ட் தர மாதிரினுலா சொல்வோம்ல, அதான் இது. மோஸ்ட் ப்ரண்ட்லி டாக்னு அமெரிக்கன்ஸ் சொல்லிருக்காங்க. இந்த பால் தூக்கி போட்டா எடுத்து வரது, கூடவே ஓடுறதுனு குழந்தைகள் குடும்பங்களோடு செட் ஆகுற இனம்

Neapolitan Mastiff

இது எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். டாம் & ஜெர்ரில அடிக்கடி க்ராஸாகும், ஜெர்ரிய காப்பாத்துறதுக்கு. இதோட வெயிட் மட்டும் 130 பவுண்ட் வரை வரும் சொல்றாங்க, ரொம்ப லாயல், நல்ல கார்டியன். கடிக்க வேணா, மேல விழுந்தாலே போதுமாம்.

Boxer

நிக்குற பொசிசன்லயே தெரிஞ்சிருக்கும் வேட்டை நாய் இனம். இதுவுமே டேஞ்சரஸ் டாக்ல ஒன்னுதான். அட்டாக் பண்ணுனு சொன்னா போதும், யாரு என்னனு பாக்காம பாய்ஞ்சிடுமாம்.

கன்னி

நாட்டு நாய்கள்லயே கொஞ்சம் சாப்டான கேரக்டர் இதுதானாம். ரொம்ப பாஸ்டா ஓடுறதால மான், முயல் வேட்டைக்கு யூஸ் பண்ணிருக்காங்க அப்போதைய காலங்கள்ல, ரொம்ப பாசமான ஆளும் கூட

சிப்பி பாறை

இதுவும் நாட்டு நாய்லயே வேட்டைக்கு யூஸ் ஆனதுதான். ரொம்ப எனர்ஜியான நாயாம். எவ்வளவு ஓடுனாலும் சளைக்காம இருக்குமாம். ஓனருக்கு ரொம்ப டிசிபிளினா இருக்கும்

கோம்பை

அந்த காலத்துல காவலுக்காக வளர்த்த இனத்துல முக்கியமானது. காட்டெருமைய கூட எதிர்த்து நிக்குமாம். நாயக்கர் மன்னர்களோட பாதுகாப்புக்காக இருந்த லெவல்🔥

ராஜபாளையம்

வேல்டு பேமஸ் ஆளு. உடம்பு புல்லா ஒயிட் & மூக்கு மட்டும் ரோஸ் கலர்ல இருக்கதுதான் ஒரிஜினல். பயங்கர திறமைசாலி, அவ்ளோ பாசம், எந்த சூழ்நிலைல என்ன சாப்பாடு வேணா சாப்டு வளரும். மத்த நாட்டு நாய்களை விட அக்ரசிவ்.

நாட்டு நாய்களோட இனவிருத்தி கம்மியாகிடுச்சி, கலப்புதான் மோஸ்ட்லி கிடைக்குது. மத்த நாய்ங்க மாதிரி பெடிகிரிதான் சாப்டுவேனு அடம்புடிக்காம எது இருக்கோ அதை சாப்டே வளருதுங்க, அதான் ஸ்பெஷல். நம்ம ஊருக்கேத்த ஆளுங்க

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling