S Gurumurthy Profile picture
Mahaswami in whom I saw God advised me out of electoral politics. CA by profession. Writer on political, economic issues by choice Editor Thuglak by destiny

Sep 14, 2020, 6 tweets

தமிழகத்தில் நீட் காரணமாக 3 தற்கொலைகள் நடந்ததை வைத்து பொய் விவாதம் நடக்கிறது. உண்மையில் நீட் வந்தபிறகு தேர்வு காரணமாக நடக்கும் தற்கொலைகள் குறைந்து இருக்கின்றன. தமிழகத்தில் 2015 இல் தேர்வு காரணமாக தற்கொலை 322. 2019 இல் 215 (NCRB Reports 2015 & 2019 on accidental deaths & suicides)

பரீட்சை, அதன் முடிவு காரணமாக தற்கொலை பொதுவான பிரச்சினை. அதில் மகாராஷ்டிரா முதல் இடம். தமிழகம் இரண்டாவது. எனவே நீட் காரணமாகத்தான் தற்கொலை தற்கொலை துவங்கி இருப்பது போல பிரச்சாரமும் விவாதமும் நடப்பது துரதிர்ஷ்டம். பரிட்சைகளால் தற்கொலை நடக்கிறது என்றால் பரிட்சையே வேண்டாமா?

டெல்லியில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மணவன் 8 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான். அது அரசியல் பிரச்சினை ஆகவில்லை. google.co.in/amp/s/archive.…

காதல் தோல்வியால் இறப்பவர்கள் எண்ணிக்கை 656. (2019 NCRB data) பரீட்சையை போல 3 மடங்கு. தற்கொலை காரணமான தேர்வை வேண்டாம் என்றால் அதை விட 3 மடங்கு குற்றவாளியான காதலை என்ன செய்வது? அதை ஊக்குவிக்கும் வாலண்டைன் தினத்தை என்ன செய்வது. இதை பற்றி அரசியல்வாதிகள் கருத்து கூற மாட்டார்கள்.

சாராயம்/போதை மருந்து காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 2012 இல் 242. 2014 இல் 522. 2016 இல் 722. 2019 இல் 1042. 7 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்து இருக்கிறது. பரீட்சையை போல இதை பற்றியும் அரசியல்வாதிகள் கருத்து கூறினால் நல்லது. மாட்டார்கள்.

அரசியல்வாதிகளை விடுங்கள். மூன்று நீட் தற்கொலைகளை பிரபலப்படுத்திய, டிவி சேனல்கள் பத்திரிகைகள் அறிவுஜீவிகள் இந்த உண்மைகளை என் மறைக்கிறார்கள். பொய் செய்திகளுக்கு மகத்துவம் கொடுத்து வியாபாரம் செய்யத்தானே. இந்த பொய்களையெல்லம் தாண்டி உண்மை வெளிவர வேண்டும். இது தான் இன்றைய நிலை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling