Babu Vmk Profile picture
Belongs to the Dravidian stock

Sep 14, 2020, 7 tweets

3 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை ஆதரித்த நடிகர் சூர்யா, தற்போது உண்மை உணர்ந்து அதை எதிர்க்கிறார். அதை வரவேற்கிறோம், புரட்சியாளர் என்று கொண்டாடுகிறோம். /n #BanNEET_SaveTNStudents

2006 ல் தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை திமுக தான் ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றது. அந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக வாதாடி /n #BanNEET_SaveTNStudents

அந்த சட்டம் செல்லும் என்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது திமுக.

2011 ல் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிவித்த போது அதற்கு எதிராக வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்றது திமுக. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, /n #BanNEET_SaveTNStudents

விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு என்று மசோதாவை திருத்தியது திமுக.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை 2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடத்திய பாஜக அரசு 2016ல், /n #BanNEET_SaveTNStudents

நீட் தேர்வு ரத்து செல்லாது என்று தீர்ப்பு பெற்றது. 2016ல் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு சட்டம் இயற்றியது பாஜக அரசு. அந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது திமுக. எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது அதிமுக. /n #BanNEET_SaveTNStudents

அதன் மூலம் இந்திய முழுவதற்கும் நீட் கட்டாயம் ஆனது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறது. அதை அரசியல் செய்கிறது என்கிறோம். நீட்டை ஆதரித்துவிட்டு தற்போது எதிர்க்கும் சூர்யாவை புரட்சி செய்கிறார் என்கிறோம். n/n
#BanNEET_SaveTNStudents

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling