#திராவிடநாடு மோசடிக்கு வாய்தா
கேட்ட #அண்ணா
திராவிடநாடு’ கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன. அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு 1/n
தனது கட்சிக்குள் ‘காலம் கனியும் போது கைவிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு: 2/n
திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைகேட்டு கொண்டிருந்த அண்ணா, “என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்கு தெரியும் 3/n
என்று சொன்னார். உடனே, சம்பத் “கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?” என்று கேட்டார்.
அதற்கு அண்ணா “அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு”ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். 4/n
அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்” என்றார். மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத்
சம்பத் சொன்னார். “இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை! 5/n
சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்” என்றார் சம்பத்.
அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ‘கைவிட முடியாது’ என்று சொல்ல வில்லை. 6/n
அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்” என்றார். 7/n
எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, “அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?” என்று அதட்டி அனுப்பினார். உயிரோடிருக்கும் கருணாநிதி வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 8/n
உரையாடல் மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. 9/n
ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும். ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல, அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல; ‘திராவிடம்’ என்ற சொல்லே மோசடி தான். 10/n
இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் #தமிழர்களுக்கு விடிவு பிறக்கும். 11/11
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
