#தினசரி_பூஜை -18
எதில வைக்கிறது? கற்களை வைத்து பூஜை செய்யும் தட்டிலே இப்ப வைக்க வேண்டாம்.அபிஷேகம் செய்யப்போகிறோம். அதனால அதுக்கு தகுந்தபடி வைக்கலாம்.
கடைகளிலே இதுக்காகவே ஒரு பக்கம் மூக்கு போல நீண்டு இருக்கும் தட்டு விற்கிறாங்க. அது இருந்தா பலவிதங்களில சுலபம். அதை வடக்கு
1/7
அல்லது கிழக்குப் பக்கம் மூக்கு இருகிற மாதிரி வைத்து மூக்கு கீழே ஒரு பாத்திரமும் வைத்துவிட்டா, அபிஷேகம் செய்யச் செய்ய செய்த பொருள் பாத்திரத்தில் நிரம்பிவிடும். தட்டு, தாம்பாளத்தில் வைத்தா கடைசி வரை அதில சேருவதை எடுப்பது கஷ்டம்.
இன்னொரு விஷயம் இங்கே கவனம் இருக்கணும்.
2/7
சில பொருட்கள் ஒண்ணோடு ஒண்ணு சேரக்கூடாது. அந்த லிஸ்டில பாலும் தாமிரமும் சேரக்கூடாதுன்னு இருக்கு. அதனால பால் அபிஷேகம் செய்யறதா இருந்தா காப்பர் தட்டு உதவாது.
சரி, மணியடிச்சுகிட்டே பூஜை பெட்டியை திறந்து உள்ளே இருக்கிற மூர்த்தங்களை எல்லாம் எடுத்து வெளியே வைக்கிறோம். நீரால அவற்றை
3/7
எல்லாம் சுத்தம் செய்து சுத்தமான மடித் துணியாலே துடைத்து முறைப்படி தட்டிலே வைக்கிறோம். நிர்மால்ய சந்தனம், குங்குமம் எல்லாம் நீக்கணும் இல்லையா? அதுக்குத்தான். குங்குமம் இடா விட்டா இந்த சந்தனத்தை சேகரித்து வாயில் போடுக்கலாம். வயித்துக்கு நல்லது.
ரைட்! முதல் படி த்யான ஆவாஹணம்,
4/7
இல்லையா?
ஒவ்வொரு இறை உருவத்துக்கும் ஒரு வேத மந்திரம் இருக்கும். அவை தெரிஞ்சு இருந்தா அதை சொல்லி ஆவாஹணம் செய்யலாம். அல்லது சிம்பிளாக சூர்யம் த்யாயாமி, ஆவாஹயாமி என்கிற ரீதியில் சொல்லிக்கொண்டு போகலாம். இதே போல கணபதிம், /கௌரிம்,/ விஷ்ணும்,/ சிவம் த்யாயாமி, ஆவாஹயாமி.
5/7
"கணானாந்த்வா" ன்னு துவங்கும் வேத மந்திரம் பிள்ளையாருக்கு.
"கௌரி மிமாய" கௌரிக்கு
"சஹஸ்ர சீர்ஷா" விஷ்ணு.
"ஆஸத்யேன" சூரியன்.
"த்ரயம்பகம் யஜாமஹே" சிவன்.
ஆவாஹணம் செய்ய மங்களாக்ஷதையை கொஞ்சம் ஒவ்வொரு சிலா மேலேயும் மந்திரம் சொல்லி தூவவும்.
6/7
மேலே சொன்ன எந்த வழியானாலும் பரவாயில்லை. மனசு ஊன்றணும் என்பதே முக்கியம். த்யானம் செய்து ஆவாஹணம் செய்த பின் அது கல் இல்லை. சாக்ஷாத் இறையே. அப்படி நம்பிக்கை வேணும்.
7/7
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
